India vs England 3rd Test Live Cricket Streaming: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி.... இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி என வேதனையை சுமந்து நிற்கும் இந்திய அணிக்கு, திருப்பி அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சப்போர்ட் பண்ணக் கூடிய டிரென்ட் பிரிட்ஜ், கண்டிப்பாக ரிசல்ட் தரும் பிட்ச் ஆகும். ஆகையால், முயற்சி + லக் இருந்தால் நிச்சயம் இப்போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பு உள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் இன்று மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் முன்பு கணித்தது:
விஜய் நீக்கப்பட்டு தவான் – லோகேஷ் ராகுல் ஒப்பனிங் இறக்கப்படலாம்.
ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்படலாம்.
(அல்லது)
ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்படலாம்.
(அல்லது)
இரண்டுமே நடக்காமல் போகலாம்.
தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்படலாம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணி:
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி(c), அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(wk), ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஷமி, இஷாந்த் ஷர்மா, பும்ரா
இங்கிலாந்தை பொறுத்தவரை, டீமை ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள்.
கீடன் ஜென்னிங்ஸ், அலஸ்டைர் குக், ஜோ ரூட்(c), ஓல்லே போப், ஜானி பேர்ஸ்டோ(wk), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், க்ரிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்த டிரென்ட்பிரிட்ஜ் ஆண்டர்சனுக்கு அல்வா மாதிரி... வழக்கமான பவுலிங்கை விட, இங்கு அவரது மாயாஜாலங்கள் சற்று அதிகமாக இருக்கும். ஆண்டர்சனை சமாளிப்பது இந்திய அணிக்கு நிச்சயம் பெரிய தலைவலி தான்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்த மைதானத்தில் எட்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், 6 போட்டிகளில் வெற்றி, 1 தோல்வி, ஒரு டிரா என வெயிட்டான ரெக்கார்டு வைத்துள்ளது இங்கிலாந்து. ஆனால், கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தை 340 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெகா வெற்றிப் பெற்றது தென்னாப்பிரிக்கா.
அதில் முக்கியமான சம்பவம் என்னவெனில், முதல் இன்னிங்ஸில், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சப்போர்ட் செய்த பிட்ச், இரண்டாம் இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது. Right-arm offbreak, Left-arm orthodox spin வகையறா நன்றாக ஒர்க் அவுட் ஆனது. எனவே, Right-arm offbreak ஸ்பின்னரான அஷ்வின் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற வேண்டும். குல்தீப்பை நீக்கிவிட்டு பும்ராவை அணியில் சேர்ப்பதை தவிர, வேறு சாய்ஸ் இருக்க முடியாது. ஒரு ஸ்பின், மூன்று ஃபாஸ்ட் என்று களமிறங்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, டிரென்ட் பிரிட்ஜின் Pavilion End, Radcliffe Road Endல் இருந்து புறப்படும் எந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர்களின் கைகளில் இருந்து வெளிவரும் பந்துகள் வித்தைகள் அதிகம் செய்கிறதோ அந்த அணிக்கே இங்கே வெற்றி!.
India vs England 3rd Test Live Cricket Streaming: இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ் தளத்தில் உடனுக்குடன் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.