India vs England 4th Test Day 1 Live: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்ப்டனில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 03.30 மணிக்கு தொடங்குகிறது. டிரென்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பெற்ற வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 2-1 என்றாகியுள்ளது.
இந்தத் தொடரை பொறுத்தவரை, 2014ஐ கம்பேர் செய்கையில், இங்கிலாந்து வலிமை குறைந்த டீம் தான். குறிப்பாக, அவர்களது பேட்டிங் யூனிட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
இந்தியாவை பொறுத்தவரை, விராட் கோலி + பவுலிங் ஆகிய இந்த இரண்டு ஸ்டிராடஜியால் தான் கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற முடிந்தது. முதல் போட்டியில் வெற்றியை நெருங்கி தோல்வி அடைந்ததற்கும் இவ்விரண்டு ஸ்டிராடஜி தான் காரணம்.
ஆகையால், விராட் கோலியை எளிதில் தூக்கிவிட்டால், இங்கிலாந்து வெற்றி வாய்ப்பு 80% உறுதி. விராட் மட்டும் இரு இன்னிங்ஸிலும் 10 - 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விட்டால், இந்தியா Nullify தான். எனவே, மற்ற பேட்ஸ்மேன்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
அட்லீஸ்ட், பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் சொன்ன மாதிரி, "இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் சுய லாபத்திற்காக தான் விளையாடுகிறார்கள்.... அணியில் தங்கள் இருப்பை காட்டிக் கொள்ளத் தான் விளையாடுகிறார்கள்" என்று கூறியதை நிரூபிக்கும் விதத்தில் இந்திய வீரர்கள் ஆடினாலே போதும். நிச்சயம் இந்த நான்காவது போட்டியில் வென்று விடலாம்.
பிட்சை பொறுத்தவரை, பச்சை சாயத்தை பாய்ச்சி விட்டது போல் உள்ளது. சற்று கடினமாக பிட்சாக தெரிகிறது. நன்றாக பவுன்ஸ் ஆக வாய்ப்பில்லை. பவுலர்களுக்கு கடினமான சூழல் தான். அடுத்து வரும் நாட்களில் மேகங்கள் சூழும் என்று வெதர் ரிப்போர்ட் சொல்கிறது. எனவே, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அது கை கொடுக்கலாம். எனவே, டாஸ் வெல்லும் அணி கண்களை மூடிக் கொண்டு பேட்டிங் தேர்வு செய்யலாம்.
விராட் + பவுலிங் + டாஸ் ஆகிய இம்மூன்றும் இப்போட்டியில் ஒர்க் அவுட் ஆகிவிட்டால், இந்தியாவுக்கு வெற்றி உறுதி.
இங்கிலாந்து அணி விவரம்:
டாப் ஆர்டர் - அலஸ்டைர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ்
மிடில் ஆர்டர் - ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ்
லோ ஆர்டர் - ஜோஸ் பட்லர், மொயின் அலி, சாம் குர்ரன்
பவுலர்ஸ் - அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய அணி விவரம்:
டாப் ஆர்டர் - ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்
மிடில் ஆர்டர் - புஜாரா, விராட் கோலி, அஜின்க்யா ரஹானே
லோ ஆர்டர் - ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட்
பவுலர்ஸ் - அஷ்வின், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி
இப்போட்டியின் Live Score Card-ஐ நீங்கள் இதே செய்தியில் உடனுக்குடன் காணலாம்.