India vs England 5th Test Day 4 : இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
தலைப்பில், 'டிரா செய்தாலே சாதனை தான்' என்று குறிப்பிட ரவீந்திர ஜடேஜாவும், அறிமுக வீரர் ஹனுமா விஹாரியும் தான் காரணம். இவர்கள் இருவரும் தலைக்கு 86 , 56 ரன்கள் அடிக்கவில்லை எனில், 150 - 170 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் இந்தியா அடங்கிப் போயிருக்கும். ஆகவே, 'டிரா எனும் பயணத்தை நோக்கி' என்று நாம் சிந்திக்கவே இவ்விருவர் தான் காரணம். ஸோ... இருவருக்கும் நன்றிகள்.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் - 332
இந்தியா முதல் இன்னிங்ஸ் - 292
இந்நிலையில், இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. லீட் 154 ரன்கள். குக் 46 ரன்களுடனும், ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒருவேளை இன்று இந்திய பவுலர்கள் மிகவும் அபாரமாக பந்து வீசி, இங்கிலாந்தை முதல் இரண்டு செஷன்ஸ்க்குள் ஆட்டமிழக்க வைத்தால், லீட் எப்படியும் 220 - 250க்குள் வர வாய்ப்புள்ளது. அப்படி வரும் பட்சத்தில், ஒன்று இந்தியா ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம்.
ஆனால், இங்கிலாந்து மேற்கொண்டு 200 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானால், லீட் 350+ வந்துவிடும். இந்த டார்கெட்டை இங்கிலாந்து மண்ணில் சேஸ் செய்வது என்பது 'ம்ஹூம்'. இருப்பினும், இந்திய பேட்ஸ்மேன்கள் மிகக் கடுமையாக போராடினால் டிரா செய்வதற்கு லைட்டாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி செய்துவிட்டால், அதுவே 'பாகுபலி' தான்.
சமீப காலமாக டெஸ்ட் தொடர்களில், குறிப்பாக வெளிமண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய பவுலர்கள் நன்றாகவே செயல்பட்டு வருகின்றனர். ஸோ, இந்தப் போட்டியில் இந்தியா தோற்றால், ஒரு சதவிகிதம் கூட நாம் பவுலர்களை குறை சொல்ல முடியாது. அவர்களது பங்கு அவ்வளவு அபாரமாக உள்ளது.
என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
இன்றைய ஆட்டத்தின் Live Cricket Card-ஐ இங்கே நீங்கள் காணலாம்.