India vs England 5th Test Day 5 Live Cricket Score : இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மிக நீண்ட இங்கிலாந்து தொடரும் கிளைமேக்ஸை எட்டியுள்ளது. இறுதி நாளான இன்று, இந்திய அணி வெற்றிப்பெற இன்னும் 406 ரன்கள் தேவை. கைவசம் இருப்பது 7 விக்கெட்டுகள். தவான் 1 ரன்னிலும், புஜாரா மற்றும் கோலி 0 ரன்னிலும் அவுட்டானார்கள். லோகேஷ் ராகுல் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Day 5 about to get underway here at The Oval.#TeamIndia in a huddle one last time on this tour.#ENGvIND pic.twitter.com/CzXqtpL8zY
— BCCI (@BCCI) September 11, 2018
இன்று ஒருநாள் மட்டும் மீதமிருப்பதால், எப்படியாவது 7 விக்கெட்டுகளை கொண்டு போராடினால் டிரா செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது மிக மிகக் கடினம் என்பதே உண்மை. ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ் என்று இங்கிலாந்தின் பவுலிங் அட்டாக்கை திறம்பட சமாளித்து ஆட வேண்டும் என்ற எண்ணத்தை விட, எதிர்த்து ஆட வேண்டும் என்ற மனநிலையில் நமது பேட்ஸ்மேன்கள் களமிறங்க வேண்டியது அவசியம்.
நேர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எதிர்மறை எண்ணங்களுடன் கூடிய நேர்மறை ஆட்டத்தை ஆட வேண்டும். ஆஸ்திரேலியா இதுபோன்ற நெருக்கடியான சூழலில், நேர்மறை + எதிர்மறை மனநிலையுடன் தான் ஆட்டத்தை வெளிப்படுத்தும். நேர்மறையாக மட்டும் ஆடினால், பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாக கூட வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், சற்று கேஷுவலாகவும், நடப்பது நடக்கட்டும் என்ற மனப்போக்கில் ஆடும் போது, பவுலர்களை பார்த்து பயப்பட வேண்டிய சூழல் ஏற்படாது. இதனால், கடினமான பந்துகளை கூட, ஒன்றுமில்லாமல் போகச் செய்ய முடியும்.
இவ்வளவையும் சொல்லிவிடுவது ஈஸி.. களத்தில் செயல்படுத்துவது தான் கடினம். ஆனால், அப்படி செய்துவிட்டால், நிச்சயம் தோல்வியில் இருந்து இந்தியா தப்பிக்கலாம்.
இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ இங்கே நீங்கள் கண்டுகளிக்கலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:India vs england 5th test day 5 live cricket score
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு