இந்தியா vs இங்கிலாந்து இரண்டாவது T20 Live Cricket Score Card

இந்தியா vs இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டி

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்து நாட்டிற்கு நீண்ட கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவை ஒருநாள், டி20 என ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து அணி, பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதுவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பாக வென்றது. லோகேஷ் ராகுல் சதம்(101*) அடித்தார்.

இந்நிலையில், இன்று கார்டிஃப் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ஜேக் பால் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் இன்று களமிறங்குகிறார்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

×Close
×Close