நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 36 பந்தில் 70 ரன்கள் விளாச, ரெய்னா 45 பந்தில் 69 ரன்கள் குவித்தார். இறுதிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 9 பந்தில் 32 ரன்கள் விளாசினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து, 12.3 ஓவரில் 70 ரன்களில் அடங்கியது. 7 வீரர்கள் சிங்கிள் டிஜிட்டில் டக் அவுட் ஆக, ஒருவர் கூட 15 ரன்னை தாண்டவில்லை. இந்திய அணி தரப்பில், குல்தீப் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்,
1, நேற்றைய போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீண்ட காலத்திற்கு பிறகு சேர்க்கப்பட்டார். அதாவது, கடைசியாக 2012ம் ஆண்டு இந்திய டி20 அணியில் விளையாடிய உமேஷ், ஆறு வருடங்களுக்கு பிறகு அணியில் மீண்டும் இடம் பிடித்தார். இந்த ஆறு ஆண்டு கால இடைவெளியில் அவர் தவறவிட்ட போட்டிகளின் எண்ணிக்கை 65.
இரண்டு டி20 போட்டிகளுக்கு இடையே அதிக கால இடைவேளையில் விளையாடிய இந்திய வீரர்கள்:
65 உமேஷ் யாதவ் (2012-18)
56 தினேஷ் கார்த்திக் (2010-17)
29 ஆசிஸ் நெஹ்ரா (2011-16)
25 அமித் மிஸ்ரா (2014-16)
25 முரளி விஜய் (2011-15)
2, கேப்டன் விராட் கோலியின் டி20 ஆவரேஜ் சரிந்துள்ளதை ரசிகர்கள் கவனிக்கவும்.
விராட் கோலி கடைசி மூன்று டி20 இன்னிங்ஸில் அடித்த ரன்கள்
1 (5)
0 (2)
9 (8)
இதனால் அவரது ஆவரேஜ் 52.15-லிருந்து 48.58 ஆக குறைந்துள்ளது.
3, விராட் கோலியை அடுத்தடுத்த இரு போட்டிகளில் அவுட்டாக்கிய இரண்டாவது பவுலர் எனும் பெருமையை அயர்லாந்தின் பீட்டர் சேஸ் பெற்றுள்ளார். இரண்டு டி20 போட்டியிலும், சேஸ் பந்தை சேஸ் செய்ய முடியாமல், அவரிடமே வீழ்ந்துள்ளார் விராட். இதற்கு முன்னதாக, 2012ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் மீக்கர் அடுத்தடுத்து இரண்டு போட்டியில் கோலியை அவுட்டாக்கி இருந்தார்.
4, சர்வதேச டி20ல், ஒரே போட்டியில் அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் 30 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.
362.50, யுவராஜ் சிங் 58 off 16 v Eng, 2007
357.14, மன்ரோ 50 off 14 v SL, 2016
355.55, ஹர்திக் பாண்ட்யா 32 off 9 v Ire, 2018 *
353.84, முபாரக் 46 off 13 v Ken, 2007
340.00, கார்லஸ் பிரத்வெய்ட் 34 off 10 v Eng, 2016
5, நேற்றைய போட்டியில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இரண்டாவது அணி எனும் பெருமையை பெற்றது.
172, இலங்கை v கென்யா, 2007
143, பாகிஸ்தான் v வெஸ்ட் இண்டீஸ், 2018
143, இந்தியா v அயர்லாந்து, 2018 *
130, தென் ஆப்பிரிக்க v ஸ்காட்லாந்த, 2009
6. இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் குறைந்த ரன்னில் சுருண்ட எதிரணிகள் யார் தெரியுமா?
அயர்லாந்து - 70 ரன்கள், 2018 *
இங்கிலாந்து - 80 ரன்கள், 2012
இலங்கை - 82 ரன்கள், 2016
பாகிஸ்தான் - 83 ரன்கள், 2016
ஆஸ்திரேலியா - 86 ரன்கள், 2014
இலங்கை 87 ரன்கள், 2017
7. இந்திய அணியின் டி20 கிரிக்கெட் வரலாற்றில், எந்தவொரு பேட்ஸ்மேனும் எதிரணியின் மொத்த ஸ்கோரை சமன் செய்தோ, அதைத் தாண்டியோ அதே போட்டியில் ரன்கள் அடித்ததில்லை. ஆனால், நேற்றைய அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் லோகேஷ் ராகுல் 70 எடுத்ததன் மூலம், அயர்லாந்தின் மொத்த ஸ்கோரான 70-ஐ சமன் செய்துள்ளார். 69 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா அந்த சாதனையை ஒரு ரன்னில் தவறவிட்டார்.
ஆக, அயர்லாந்து தோல்வி அடையவில்லை, நேற்றைய போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ரெய்னாவை!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.