Advertisment

அயர்லாந்து டி20: இந்த 3 இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்; பிளேயிங் 11-ல் யார் யாருக்கு இடம்?

முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மா, அறிமுக ஆட்டத்தில் களமிறங்க அவரது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Ireland T20Is: Three players who might not get a game Tamil News

ஷாபாஸ் அகமது ஒரு நல்ல ஆல்ரவுண்டர் வீரராக இருக்கிறார், தனது தகுதியை அவர் ஐ.பி.எல் 2023 தொடரில் நிரூபித்துள்ளார்.

India vs Ireland 2023: 1st T20 predicted Playing 11 Tamil News: ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18 ஆம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில், இந்த தொடரில் களமிறங்க வாய்ப்பு குறைவாக இருக்கும் 3 இளம் வீரர்கள் குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

Advertisment

  1. ஜிதேஷ் சர்மா

முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மா, அறிமுக ஆட்டத்தில் களமிறங்க அவரது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். ஆடும் லெவன் அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுடன் ஜிதேஷ் போட்டியிடுவார். ஜிதேஷை விட சஞ்சு களமிறக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். அவர் முதல் போட்டியிலே சிறப்பாக செயல்பட்டால், ஜிதேஷ்-க்கான வாய்ப்பு அரிதாகிவிடும். ஒருவேளை சஞ்சு தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டால் ஜிதேஷ்-க்கு கதவு திறக்கும்.

  1. பிரசித் கிருஷ்ணா

பும்ரா முன்னணியில் இருப்பதாலும், அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் கண்ணியமாகப் பந்துவீசுவதாலும், முகேஷ் குமார் டெத்தில் கண்ணியமாகப் பந்துவீசுவதால், பிரசித் கிருஷ்ணா அணியில் இடம் பிடிப்பது கடினம். காயம் அடைந்து ஓய்வில் இருந்த பிரசித், ஏறக்குறைய ஒரு வருடமாக சர்வதேச போட்டியில் களமாடவில்லை. அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளித்தால் அதை அவர் கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

  1. ஷாபாஸ் அகமது

ஷாபாஸ் அகமது ஒரு நல்ல ஆல்ரவுண்டர் வீரராக இருக்கிறார். தனது தகுதியை அவர் ஐ.பி.எல் 2023 தொடரில் நிரூபித்துள்ளார். இருப்பினும், அவர் இன்னும் டி20 போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இந்திய அணியில் ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாபாஸ் அகமது தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

அயர்லாந்து vs இந்தியா முதல் டி20 - உத்தேச லெவன் வீரர்கள் பின்வருமாறு:-

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்) மற்றும் முகேஷ் குமார்.

இந்திய அணி

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சிவம் துபே, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான், ஜிதேஷ் சர்மா, பிரசித் கிருஷ்ணா, ஷாபாஸ் அகமது

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs Ireland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment