ஒரு வரலாற்றுச் சாதனையை எப்படியாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் 1-1 என சரிசமமாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
கடந்த முறை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த போதும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்து, ஒருவழியாக இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது. இந்தியாவை இந்திய மண்ணிலேயே அச்சுறுத்தும் பணியை நியூசி., ஒவ்வொரு முறையும் செய்து வருகிறது.
இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி பற்றிய முழு விவரம் இதோ,
இந்தியா vs நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி எப்போது?
அக்டோபர் 29,2017-ல் இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா vs நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி எங்கே நடக்கிறது?
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் கடைசியாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதியிருந்தது. இப்போட்டியில் இந்திய அணி, தென்., நிர்ணயித்த 304 ரன்கள் எட்ட முடியாமல், மிக அருகில் வந்து 298/7 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. ரோஹித் ஷர்மா 150 ரன்கள் விளாசியிருந்தார்.
எத்தனை மணிக்கு இந்தியா vs நியூசிலாந்து ஆட்டம் தொடங்குகிறது?
இப்போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மதியம் 1:00 மணிக்கு போடப்படும்.
எந்த டிவி சேனலில் இப்போட்டியை காணலாம்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்த 3-வது ஒருநாள் போட்டியை ஒளிபரப்பு செய்ய உள்ளது. பகல் 12:30 மணிக்கு, போட்டிக்கு முந்தைய ஷோ தொடங்கும்.
டிவி அல்லாது எப்படி இப்போட்டியை பார்க்க முடியும்?
ஹாட்ஸ்டாரில் இப்போட்டியை நேரடியாக காணலாம். ஆனால் ietamil.com-ல் இப்போட்டியின் லைவ் ஸ்கோர்கார்ட் மற்றும் கமெண்ட்ரியை காணலாம்.