India v New Zealand, 2nd ODI : இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை பே ஓவலில் நடக்கிறது. முதல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்திய இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கேப்டன் கோலி இந்த போட்டியுடன் தாயகம் திரும்புகிறார். பணி சுமை காரணமாக அவர் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது.அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இதை தவிர்த்து, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. பாண்டியா இந்தியா அணிக்கு திரும்பியுள்ளார், ராகுல் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளோர் கவுண்டி போட்டிகளில் விளையாட உள்ளார்.
பாண்டியா நாளை நடக்கும் போட்டியில் உடனே களம் இறங்க வாய்ப்பில்லை. விஜய் ஷங்கர் இன்னும் ஓரிரு போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று தான் தோன்றுகிறது. மற்றபடி அணியில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. எதாவது வீரருக்கு காயம் ஏற்பட்டாலே தவிர வின்னிங் காம்பினேஷன் பெரும்பாலும் அப்படியே தான் இருக்கும். சென்ற போட்டியில் அசத்திய தவான் தனது பேட்டிங் பாஃர்மினை தொடர்வார் என நம்பலாம். ரோஹித் சர்மா சென்ற போட்டியில் சொற்பமாக தனது விக்கெட்டை இழந்தார். இந்த போட்டியில் அவர் அசத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது.
டாப் ஆர்டரை தவிர்த்து மிடில் ஆர்டரில் தோனி, ராயுடு, மற்றும் கேதார் ஜாதவ் இருக்கின்றனர். ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர் எகானாமிகலாக பந்து வீசினாலும்; விக்கெட் வீழ்த்த தடுமாறுகிறார். அந்த ஏரியாவில் இவர் தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும். பேட்டிங் சந்தர்ப்பம் வரும்போது அதை சீராக பயன்படுத்த வேண்டும், அப்படி செய்தல் மட்டுமே இவர் மீதமுள்ள போட்டிகளில் அணியில் இடம் பிடிப்பார். குல்தீப் - சஹால் சூழல் கூட்டணி அசத்துகிறது. இவர்களை சமாளிக்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பல்வேறு திட்டங்களை தீட்ட வேண்டியது இருக்கும்.
முதல் போட்டியில் 157 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள் கூட்டணியை மாற்ற கோலி விரும்பமாட்டார். புவனேஸ்வர், ஷமி கூட்டணி இதிலும் தொடரும் என எதிர்பாக்கலாம். நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கை வலுப்படுத்த காலின் டி க்ராந்தோம் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இவர் ப்ரெஸ்வெல் இடத்தை கைப்பற்றலாம். அதே போல் சூழல் பந்து வீச்சாளர் இஷ் சோதி சான்டனர் இடத்தை கைப்பற்றலாம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி சனிக்கிழமை பே ஓவலில் காலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.