/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T132405.909.jpg)
இந்திய அணியின் வேகப்புயல் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் பாகிஸ்தானின் அதிரடி பேட்டிங்கின் கேப்டனுமான பாபர் அசாமுக்கும் இடையே நடக்கும், இரண்டு மேட்ச் வின்னர்களின் போர் இது.
India vs Pakistan, Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) இலங்கையில் உள்ள பல்லகெலே சர்வதேச மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வீரர்கள் மேட்ச்-அப்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
விராட் கோலி vs ஷாஹீன் ஷா அப்ரிடி
பாக்கிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஷாஹீன் ஷா அப்ரிடி உருவெடுத்துள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய டாப் ஆடரை தனது வேகத் தாக்குதலில் சீர்குலைத்தார். கோலியும் அவரது வலையில் சற்று தாமதமாக சிக்கினார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பேட்டிங் மேஸ்ட்ரோ விராட் கோலி தனது முழுமையான சிறந்த நிலைக்குத் திரும்பியுள்ளார். இந்த ஆண்டு 9 ஒருநாள் போட்டிகளில் விலையுடியுள்ள அவர் 53.37 சராசரியில் 427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். அவர் 116.03 ஸ்டிரைக் ரேட்டிலும் அடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T133307.488.jpg)
கோலி பாகிஸ்தானுக்கு எதிரான சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 13 பாகிஸ்தானை முறை எதிர்கொண்ட அவர் 2 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 48.72 என்கிற சராசரியில் 536 ரன்கள் எடுத்துள்ளார். 2012 ஆசியக் கோப்பையில் 183 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக அடித்ததே அவரது வாழ்க்கையின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் ஆகும். ஆசிய கோப்பை போட்டியில் ரன் குவித்தவர் என நிரூபிக்கப்பட்ட கோலி, ஆசிய கோப்பை 10 ஒருநாள் போட்டிகளில் இதுவரை 613 ரன்கள் எடுத்துள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அப்ரிடி இந்த ஆண்டு வெறும் 8 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் முக்கியமான ஆசிய கோப்பை போட்டியிலும் பங்கேற்கிறார். ஈர்க்கக்கூடிய சராசரியான 20.06 மற்றும் எக்கனாமி ரேட்டிங் 5.04 ஒரு உயரமான வேகப்பந்து வீச்சாளராக அவரது செயல்திறனைக் காட்டுகிறது. 23 வயதான அவர் இந்த நாட்களில் பயமுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவரால் எந்த பேட்டிங் வரிசைக்கும் எதிராக எளிதில் செயல்பட முடியும். இன்றைய மோதலில் அவர் கோலியின் விக்கெட்டை இலக்காகக் கொண்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T133145.415.jpg)
அப்ரிடி 39 ஒருநாள் போட்டிகளில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தனது சர்வதேச வாழ்க்கையில் ஒரு அற்புதமான தொடக்கத்தைக் கொண்டுள்ளார். ஆசிய கோப்பையிலும் அவர் ஒரு நல்ல சாதனை படைத்துள்ளார் - 4 ஒருநாள் போட்டி களில் 6 விக்கெட்டுகளை 25.66 சராசரி மற்றும் 5க்கு கீழ் எகானமி ரேட். 2018ல் இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஒரே ஒரு நாள் போட்டியாகும். கடந்தாண்டை காயம் காரணமாக தவற விட்டார். அவரையே பாகிஸ்தான் அணி மலைபோல் நம்பியிருப்பது குறிபிடத்தக்கது.
ரோகித் சர்மா vs ஹரிஸ் ரவுஃப்
இது ஒரு ஒருநாள் போட்டி மாஸ்டருக்கும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வீரருக்கும் இடையிலான மற்றொரு போர். இன்னிங்ஸில் நடக்கும் இந்த போர், போட்டியின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்திய கேப்டன் ரோகித் 'ஹிட்மேன்' சர்மாவைப் பொறுத்தவரை, ஒருநாள் என்பது அவர் தேர்ச்சி பெற்ற ஒரு வடிவம். அவரை இன்னிங்ஸின் ஆரம்பத்தில் நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் நிச்சயமாக வலியை உணரும், அங்குதான் வேகமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ரவுஃப் தனது கைகளில் பெரிய பணியைக் கொண்டிருப்பார்.
மூன்று இரட்டை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்களுடன், ரோகித் மாபெரும் சக்தியாக இருக்கிறார். இந்திய கேப்டன் இந்த ஆண்டும் நல்ல பார்மில் உள்ளார், இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் 47.87 என்ற சராசரியை சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் உட்பட 383 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஆசிய கோப்பையில் (ஒருநாள்) 21 இன்னிங்ஸ்களில் 46.56 என்ற சராசரியை 745 ரன்கள் குவித்தவர்களில் ஒருவராக உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் 51.42 சராசரியில் 720 ரன்களை ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் 6 அரைசதங்களின் உதவியுடன் ரோகித் மிரட்டலான சாதனை படைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T133437.171.jpg)
ஹாரிஸ் ரவுஃபின் வேகம் இந்திய பேட்டிங் வரிசைக்கு சவாலாக இருக்கும். ஏனெனில் அவர்கள் அவரை ஒரு நாள் போட்டிகளில் இன்னும் எதிர்கொள்ளவில்லை. உண்மையிலே அவர் ஒரு நல்ல விக்கெட்-டேக்கர் மற்றும் இதுவரை 25 ஒருநாள் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், மேலும் இந்தியாவுக்கு எதிராகவும் தனது நல்ல ரன்னைத் தொடர விரும்புவார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5/18 ரன்களை எடுத்ததன் மூலம் 10 ஒருநாள் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த ஆண்டு நல்ல பார்மில் உள்ளார். இந்த முறை நேபாளத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் அவர் ஆசியக் கோப்பையில் அறிமுகமானார். பாகிஸ்தானின் மகத்தான 238 ரன்கள் வெற்றியில் 5 ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை திரும்பப் பெற்றார். இந்தியா அவர்களின் இன்னிங்ஸுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்க ரோகித்தை நம்பும். அதேவேளையில், ரவுஃப் உட்பட பாகிஸ்தானின் சக்திவாய்ந்த வேக தாக்குதல் தங்கள் அணிக்கு ஆரம்ப முன்னேற்றங்களை வழங்க எதிர்பார்க்கும்.
ஜஸ்பிரித் பும்ரா vs பாபர் அசாம்
இந்திய அணியின் வேகப்புயல் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் பாகிஸ்தானின் அதிரடி பேட்டிங்கின் கேப்டனுமான பாபர் அசாமுக்கும் இடையே நடக்கும், இரண்டு மேட்ச் வின்னர்களின் போர் இது. இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போது பும்ரா ஒரு வருடத்திற்குப் பிறகு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார். காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப்பிறகு பும்ரா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தார். மேலும் 2 டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T133630.307.jpg)
தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முத்திரை பதிக்க ஆர்வமாக இருப்பார். அவர் ஒரு உண்மையான விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் மற்றும் இதுவரை 72 போட்டிகளில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 2018ல் ஒரு அற்புதமான ஆசிய கோப்பை தொடரைக் (ஒருநாள்) கொண்டிருந்தார், நான்கு ஆட்டங்களில் 16.00 சராசரியில் 8 விக்கெட்டுகளை எடுத்தார். பும்ரா பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 5 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த முறை அந்த எண்ணிக்கையை சரிசெய்ய ஆர்வமாக உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T133708.564.jpg)
பாபர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவராக வலம் வருகிறார். ஏற்கனவே 104 போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவர் தனது 2023 ஆசிய கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக 151 ரன்களுடன் கம்பீரமாக தொடங்கினார். இது அவரது 19வது ஒருநாள் சதம். பாபர் இந்தியாவுக்கு எதிராக குறைவான சாதனையை படைத்துள்ளார். நம்பமுடியாத வகையில், அவர் இந்தியாவுக்கு எதிராக இன்னும் அரைசதம் அடிக்கவில்லை. எனவே, இன்றைய போட்டிகளில் அந்த சாதனையை மாற்ற பாபர் அதிக ஆர்வத்துடன் இருப்பார். இதுவரை 6 ஆட்டங்களில் 51.16 என்கிற சராசரியில் 307 ரன்களை ஏற்கனவே குவித்துள்ள அவர், ஆசிய கோப்பையில் ரன் குவித்தவர் என நிரூபிக்கப்பட்டவர்.
மெகா போட்டியில் பாகிஸ்தானின் ரன்-மெஷின் பாபர் பெரிய ஸ்கோரைப் பெறுவதைத் தடுக்க பும்ரா எதிர்பார்க்கிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் கேப்டன் இந்தியாவுக்கு எதிரான தனது இதுவரை குறைவான சாதனைக்கு பரிகாரம் செய்ய விரும்புவார். இந்த போர் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோதலில் மிக முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.