Advertisment

இந்தியா Vs பாகிஸ்தான்: இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Pakistan asia cup 2018 odi preview

India vs Pakistan asia cup 2018 odi preview

ANBARASAN GNANAMANI

Advertisment

அந்த 'ஆறா வடு' இன்னும் ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் திண்ணமாக இருக்கிறது. அவ்வளவு லேசில் மறந்துவிட முடியாத ஆட்டம் அது. விளையாட்டு என்றாலும் கூட பரம வைரிகளாக பார்க்கப்படும் இந்தியாவும், பாகிஸ்தானும் கடைசியாக 2017 ஜூன் 18ம் தேதி விளையாடிய ஆட்டம் அது. 339 எனும் சேஸ் செய்யக் கூடிய இலக்கை நோக்கி கம்பீரமாக, கான்ஃபிடன்ட்டாக களமிறங்கிய இந்திய அணியின் ஒட்டுமொத்த கெத்தையும் தூள் தூளாக்கியது பாகிஸ்தான்.

ரோஹித், ஷிகர், கோலி எனும் இந்திய அணியின் அஸ்திவாரத்தையே காலி செய்து, முஹம்மது ஆமீர் தொடங்கி வைத்த கபளீகரத்தை, ஹசன் அலி, ஷதாப் கான், ஜுனைத் கான் என மற்ற பவுலர்கள் வரிசையாக முடித்து வைத்து, இந்தியாவை 158 ரன்களில் அடக்கி, 180 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிப் பெற்று மினி உலகக் கோப்பையை வென்றது பாகிஸ்தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க நினைக்கும் bygone சம்பவம் அது.

தற்போது ஒருவருடம் கழித்து, நாளை (செப்.19) மீண்டும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சர்வதேச களத்தில் சந்திக்கின்றன. ஆனால், இம்முறை ஆசிய கோப்பை தொடரில். விராட் கோலி இல்லாத இந்திய அணி, ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்கியுள்ளது.

இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதை இங்கே பார்ப்போம்,

இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்:

ஷிகர் தவான் தவிர, இந்திய அணியில் உள்ள ரிமைனிங் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் தான். ரோஹித், லோகேஷ் ராகுல், தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் வரிசை சொல்லிக் கொள்ளும்படி பலமாக தான் உள்ளது. அதாவது, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தனித்தனியாக ஒவ்வொரு வீரரின் ஆட்டத்தை பார்த்தோமேயானால், 'செம டீம்-ல' என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆனால், சர்வதேச போட்டி என்று வரும் பொழுது களம், சூழல், மனநிலை போன்றவை டோட்டலாக மாறிவிடுமல்லவா.

இந்தியன் டாப் ஆர்டர்:

ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல்

இந்த ஒட்டுமொத்த தொடரிலும் இந்திய அணி அதிகம் சார்ந்திருக்கும் வீரர்கள் என்றால் அது ஷிகர் தவானும், ரோஹித் ஷர்மாவும் தான். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், இந்தியன் ஒப்பனர்ஸ். இவ்விரு வீரர்களின் ஆட்டம் தான், இந்தியாவின் போக்கை இந்தத் தொடரில் தீர்மானிக்கப் போகிறது.

ஒன்று, இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி, பெரிய தொடக்கம் கொடுக்க வேண்டும். அல்லது, இந்த ஜோடியில் ஒருவராவது 30 ஓவர் வரை களத்தில் நிற்க வேண்டும்.

அடுத்ததாக லோகேஷ் ராகுல்... திறமையான இளம் வீரர் என்றாலும், Consistency இவரிடம் உள்ள பெரிய பிரச்சனை. ஆகையால், இவர் அணியில் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு ஆடுவதே பெட்டர். அடித்தால் அணிக்கு நல்லது. அடிக்காவிட்டால், 'லோகேஷ் தான் அணியிலேயே இல்லையே' என்று கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான். இருப்பினும், தற்போதைய இந்திய ஒருநாள் அணியின் ஒன்டவுன் வீரராக இவரை வளர்க்க வேண்டும் என்பதில் கேப்டன் கோலி உறுதியாக இருப்பதாக தகவல்.

மிடில் ஆர்டர்:

அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ்

மிகவும் சிக்கலான ஆர்டர் இதுதான். அதாவது, இத்தொடரில் இந்தியாவின் மிடில் ஆர்டர் தான் வீக்காக இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில், அம்பதி ராயுடுவின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், அம்பதி ராயுடு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் ஆடி முழுதாக 2 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை 34 ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடியிருக்கிறார்.

கேதர் ஜாதவை பொறுத்தவரை, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், சமீபத்திய காலங்களில் அவ்வப்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தவிர, பார்ட் டைம் ஸ்பின்னராகவும் இருப்பதால், மனீஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டி இவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுவரை 40 ஒருநாள் போட்டிகளில் இவர் ஆடியிருக்கிறார். ஆனால், இக்கட்டான சூழ்நிலையில், பிரஷரை இவர் எப்படி ஹேண்டில் செய்வார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

ஸோ, Inexperienced அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் கொண்ட இந்தியன் மிடில் ஆர்டர், எதிரணியை வலுவாக எதிர்த்து போராடுமா? என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

அடுத்தது தோனி... இவரை நினைத்து அணி பெரிதாக கவலைக் கொள்ளத் தேவையில்லை. அணிக்கு என்ன தேவையோ, அதை முடிந்தவரை நிறைவேற்றிக் கொடுக்கும் திறன் இன்னமும் தோனியிடம் இருப்பதாக நம்பலாம். மிடில் ஆர்டர் வீக் என்றாலும், தோனியின் எக்ஸ்பீரியன்ஸ் + பேட்டிங் அதனை தாங்கிப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதனால் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே.

லோ ஆர்டர்:

ஹர்திக் பாண்ட்யா

ஏதுவாக ஸ்பின் போட்டால் சிக்ஸர்கள் அடிக்கத் தெரியும். கனெக்டிங் சரியாக இருக்கும் பட்சத்தில் சீம் பவுலிங்கிலும் சிக்ஸ் அடிக்க தெரியும். அணியின் மூன்றாவது சீமர். நல்ல ஃபீல்டர். மோஸ்ட் ஆஃப் தி டைம் 'கேட்ச் டேக்கர்'. இதைத் தாண்டி இவர் இத்தொடரில் எப்படி விளையாடப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்தியாவின் பேட்டிங் ok தான். ஆனால், பாகிஸ்தானின் 'பங்குடு' பவுலிங்கை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதில் தான் இன்ட்ரஸ்ட்டிங்கே அடங்கியுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்தியா மிக மிக கவனமாக பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனெனில், இடது கை சீம் பவுலிங் கொண்ட படையையே இறக்கியுள்ளது பாகிஸ்தான். ஆமீர், ஷஹீன் அஃப்ரிடி, உஸ்மான் கான், ஜுனைத் கான் என அனைவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் தான். இந்திய அணிக்கு இடது கை பவுலிங் என்றாலே நடுக்கம் இருக்கும். இப்போது பாகிஸ்தான் அதை கச்சிதமாக செய்திருக்கிறது.

முதல் பாராவில் சொன்ன 'ஆறா வடு' ஆட்டத்தில் இடது கை பவுலரான ஆமீரிடம் தான் இந்தியாவின் தொடக்க தலைகள் வீழ்ந்தன. அதிலும் பிட்ச் ஃபேவராக இருந்துவிட்டால், இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல... உலகின் எந்த அணியின் பேட்ஸ்மேன்களும் கலங்கித் தான் போவார்கள்.

1998-99 ல் நடந்த Coca-Cola கப் இறுதிப் போட்டியில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் லெஃப்ட் ஆர்ம் சீமர்ஸிடம் சரண் அடைந்தது, 2000ல் நடந்த Coca-Cola கப் இறுதிப் போட்டியில் சமிந்தா வாஸ் தலைமையிலான இலங்கை லெஃப்ட் ஆர்ம் சீமர்ஸிடம் சரண் அடைந்தது, 2006 DLF கப் தொடரில், மிட்சல் ஜான்சன் தலைமயிலான ஆஸ்திரேலிய லெஃப்ட் ஆர்ம் சீமர்ஸிடம் சரண் அடைந்தது, 2015ல் முஸ்தாபிசூர் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச லெஃப்ட் ஆர்ம் சீமர்ஸிடம் சரண் அடைந்தது என இந்திய அணியின் முந்தைய ரெக்கார்டுகள் நமக்கான எச்சரிக்கை மணிகள்.

அப்படிப்பட்ட Uncontrollable லெஃப்ட் ஆர்ம் சீமர்ஸ் கொண்ட அணியாகத் தான் பாகிஸ்தான் இப்போது உள்ளது. அவர்களை இந்தியா வீழ்த்த வேண்டுமெனில், டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் அடித்தாக வேண்டும். அதன்பின் நமது பும்ரா, புவனேஷ், சாஹல் பவுலிங் கொண்டு அவர்களின் பேட்ஸ்மேன்களை கண்ட்ரோல் செய்துவிடலாம்.

ஆனால், பாகிஸ்தானை முதலில் 300 ரன்கள் அடிக்கவிட்டால், இந்தியா அதனை சேஸ் செய்வது என்பது மிகப்பெரிய விஷயமாகிவிடும். இதை கேட்பதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால், இதுவே நிதர்சனம்!.

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், நாளைய போட்டி Unpredictable Pakistan Left Hand Seamers Vs Inexperienced Indian Match winners இடையே தான்!.

India Vs Pakistan Asia Cup 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment