மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணி பாகிஸ்தனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில், இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், சிட்ரா நவாஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
Good morning and welcome to our coverage of the all-important game between India and Pakistan. The toss has been won by Pakistan and they have elected to bat first.#INDvPAK #AsiaCup #WAC2018 pic.twitter.com/rhyKSMBjhY
— BCCI Women (@BCCIWomen) June 9, 2018
— BCCI Women (@BCCIWomen) June 9, 2018
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன், தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பவுலிங்கில் இரு லாரிக்கு இடையே சிக்கிய எலியை போல சிக்கி சின்னாபின்னமானது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 72 ரன்களே எடுத்தது. 7 வீராங்கனைகள் சிங்கிள் டிஜிட்டில் நடையை கட்டினர். அதிகபட்சமாக சனா 20 ரன்கள் எடுத்தார். இந்திய வீராங்கனை ஏக்தா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 16.1வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. மந்தனா 38 ரன்களில் அவுட்டாக, கேப்டன் கவுர் 34 ரன்களுடன் இறுதிவரை நாட் அவுட்டாக இருந்து வெற்றியை வசப்படுத்தினார்.
FOUR! Harmanpreet Kaur finishes it off in style!
India beat Pakistan by 7 wickets to reach Women's Asia Cup finalhttps://t.co/72N7bIj7kl
— Express Sports (@IExpressSports) June 9, 2018
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேசிய அணியும், வங்கதேச அணியும் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணியுடன் இந்தியா வரும் ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோத உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Congratulations to the India women’s team on beating Pakistan women’s team by 7 wkts in the #WomensAsiaCup2018 . Come on , let’s make it the 7th title #INDvPAK pic.twitter.com/G4OA1fmugq
— Virender Sehwag (@virendersehwag) June 9, 2018
Many congratulations @BCCIWomen on beating Pakistan in the final league match of the Asia Cup. Best wishes for the finals #INDvPAK
— VVS Laxman (@VVSLaxman281) June 9, 2018
Easily done. Well done @BCCIWomen on a wonderful victory over Pakistan in the Asia Cup. Best wishes for the finals #INDvPAK pic.twitter.com/ydopVG9CVp
— Mohammad Kaif (@MohammadKaif) June 9, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.