/tamil-ie/media/media_files/uploads/2017/06/a570.jpg)
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இரு தேச மக்களின் பெரும்பாலான பார்வை நாளை இந்தப் போட்டியின் மீதே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் போட்டியில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது. வல்லுநர்களை விடுங்கள்... ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கே, இந்தியாவுக்கு தான் நாளை வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தெரியும். ஏனெனில், நடப்பு தொடரில் இந்திய அணியின் பெர்ஃபாமன்ஸ் அப்படி. இருப்பினும், லீக் சுற்றில் இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தானின் ஆட்டம் முற்றிலும் மாறியிருக்கிறது.
அவர்களது ஆக்ரோஷம் உயர்ந்திருக்கிறது. நிதானத்துடன் விவேகமும் கூடியிருக்கிறது. எனவே, முதல் போட்டியில் ஆடிய பாகிஸ்தானை மனதில் கொண்டு இந்திய அணி ஆடுவது கொஞ்சம் ஆபத்தானதே.
எது எப்படியோ... நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வெல்லப் போவது இந்தியா தான் என நமது ரசிக பெருமக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதனை உணர்த்துவது போல், மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள்.
அப்படி ஒரு மீம் பதிவில், வடிவேலின் டயலாக்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மீம் இப்போது செம வைரல்.
Pakistan Cricket Team Mind Voice ????????????@rameshlaus@esakkimuthuk@bharath1@LMKMovieManiac
Gifs for ur mood - https://t.co/jmrwYEWljGpic.twitter.com/bycOY9wyIw
— GIFs Blog Tamil (@GifsBlogTamil) 17 June 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.