scorecardresearch

India vs Pakistan World Cup 2019 Match Date, Players List, Weather Forecast, Live Streaming Details: இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்தை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

India vs Pakistan (Ind vs Pak) World Cup 2019 Match Date, Time, Players List, Weather Forecast: இந்தியா vs பாகிஸ்தான்

india vs pakistan live score
india vs pakistan live score

Ind vs Pak World Cup 2019 Match Date, Time, Players List, Weather Forecast: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.16) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்ஃபரஸ் அஹ்மது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதுகின்றன.

இதுவரை மூன்று போட்டிகளில் களம் கண்டுள்ள இந்திய அணி, இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் இதுவரை 4 போட்டிகளில் ஆடி, இரண்டு தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக போட்டியை கண்டுகளிக்கலாம். ஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் போட்டியை காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் நேயர்கள் கண்டு களிக்கலாம். இன்று மதியம் 2 மணி முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக கிரிக்கெட் லைவ் அப்டேட்ஸ் உங்களுக்காக…

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs pakistan world cup match 2019 when and where to watch tv and online