54 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா! காரணம் யார் தெரியுமா?

மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார்

ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார். ஒருகட்டத்தில், தென்னாப்பிரிக்க பவுலர்கள் வெறுத்தே போயினர். அடுத்த டிராவிட் என்று கூறுவதை, இன்று மெய்ப்பித்திருக்கிறார் புஜாரா.

இந்திய அணியின் தலைமை கோச்சாக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் இதே ஜோகன்ஸ்பெர்க் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 1992-1993ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில், தொடர்ந்து 68 பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை. ஆனால், அது அவரது முதல் ரன் இல்லை. 9 ரன்கள் எடுத்திருந்த பிறகு, தொடர்ச்சியாக 68 பந்துகளை அவர் அடிக்காமல் விட்டார்.

இப்போட்டிக்கான லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்

×Close
×Close