/tamil-ie/media/media_files/uploads/2018/02/a326.jpg)
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மார்பக புற்றுநோய்க்கு ஆதரவளிக்கும் வகையில், தென்னாப்பிரிக்க அணி பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து களமிறங்கி உள்ளது. அந்த அணி மட்டுமல்ல, வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானமே பிங்க் நிற உடை அணிந்துள்ள ரசிகர்களால் திருவிழா போன்று காட்சியளிக்கிறது. இதற்கு மத்தியில் ப்ளூ ஜெர்ஸி அணிந்து இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் அனைவரும் எதிர்பார்த்த ஏ பி டி வில்லியர்ஸ் இன்றைய போட்டிக்கு திரும்பியுள்ளார். சோன்டோவிற்கு பதிலாக டி வில்லியர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், இம்ரான் தாகிருக்கு பதிலாக மோர்னே மோர்கல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அணியில், தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 5 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது 26வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 100 வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கேப்டன் விராட் கோலியும் அரை சதம் அடித்து மீண்டும் அசத்தியுள்ளார்.
வாண்டரர்ஸ் வானத்தில் தற்போது மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால், எப்போது வேண்டுமானாலும் அங்கு மழை பெய்யலாம்.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ஐஇதமிழ்-ல் உடனுக்குடன் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.