இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (பிப்.1) டர்பனில் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு நீண்ட சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. இதைத் தொடர்ந்து, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை துவங்குகிறது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சோனி டென் 1 ஸ்போர்ட்ஸ், டென் 1 ஹெச்.டியில் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆன்லைனில் SonyLiv.com-ல் ரசிகர்கள் போட்டியை காணலாம்.
Virat Kohli(c), Rohit Sharma, Shikhar Dhawan, Ajinkya Rahane, Shreyas Iyer, Manish Pandey, Kedar Jadhav, Dinesh Karthik, MS Dhoni, Hardik Pandya, Axar Patel, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Mohammed Shami, Shardul Thakur
இதுதான் இந்திய ஒருநாள் அணி வீரர்களின் பட்டியல்.
2015ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, மகேந்திர சிங் தோனி மொத்தம் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 20 போட்டி முதல் இன்னிங்ஸ், 20 போட்டி இரண்டாம் இன்னிங்ஸ்.
இதில், முதல் இன்னிங்ஸ் ஆடிய 20 ஆட்டங்களில் தோனி அடித்துள்ள ரன்களின் எண்ணிக்கை 868. ஆவரேஜ் 57.86. ஸ்டிரைக் ரேட் 95.27. ஒரு சதம். ஆறு அரைசதம். அதிகபட்சம் 134.
அதுவே, இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய 20 ஆட்டங்களில் தோனி 531 ரன்களே எடுத்துள்ளார். ஆவரேஜ் 35.40. ஸ்டிரைக் ரேட் 71.08. சதம் - 0. அரைசதம் - 3. அதிகபட்சம் 80.
2015-க்குப் பிறகு தோனியின் சேஸிங் பெர்ஃபாமன்ஸ் இவ்வளவு தான்.
அதுவே, 2011 - 2015 இடைப்பட்ட காலத்தில் 30 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனியின் சேஸிங் இன்னிங்ஸ் ஆவரேஜ் 61.12. அவர் அடித்த மொத்த ரன்கள் 1039.
300 ரன்களுக்கும் குறைவான சேஸிங்கில் இப்போதும் தோனி நன்றாக செயல்படுகிறார் என்று கூறலாம். ஆனால், 300+ சேஸிங்கில் அவரால் வெற்றிகரமாக வலம் வர முடியவில்லை.
சமீபகாலமாக ஆசிய பிட்ச்களில் ஓரளவு சமாளித்து ஆடி வந்த தோனி, இந்த கடினமான தொடரை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது மிக முக்கியமான விஷயம் என்றே கூற வேண்டும். தென்னாப்பிரிக்க அணி 250 ரன்கள் அடித்தாலே, அவர்களது பிட்சில் நமக்கு அது கடினமான இலக்கு தான். இதில், தோனி எந்தளவிற்கு சிறப்பாக செயல்படப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்குப் பிறகு தோனி மீதான ஓய்வு சலசலப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.