இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் வெல்லப் போவது யார்? ஐஇதமிழ்-ன் பிரத்யேக Match Prediction இதோ!

கிரிக்கெட் பார்ப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு கிரிக்கெட்டில் எந்தளவிற்கு ஆளுமை இருக்கிறது என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Match Analysis & Prediction by Anbarasan Gnanamani

ஐஇ தமிழ் நேயர்களே, தி இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தமிழ் பதிப்பான நமது ஐஇதமிழ்-ல் புதிதாக ‘Cricket Match Prediction’ என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் குறித்து அனலைஸ் செய்து, போட்டியில் எந்த அணி வெல்லும் என்று Prediction தரப்படும். நம்மில் பலரும், கிரிக்கெட் ஆர்வலர்கள் தான். பலர் டெக்னிக்கலாகவும், மனோ ரீதியாகவும் கிரிக்கெட்டின் முடிவுகளை துல்லியமாக கணிக்க முயற்சி செய்திருப்போம். பலமுறை அவர் கரெக்டாக இருக்கும் என்பதே ஆச்சர்யம்.

அதைப் போல, ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் நமது ஐஇதமிழ்-ல் போட்டியின் முடிவுகள் கணிக்கப்பட்டு வீடியோவாக வெளியிடப்படும். கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்களும், அந்த வீடியோவில் கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் Prediction-ஐ பதிவிடலாம். இதன்மூலம், நீங்கள் கூறும் பிரடிக்ஷன் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதை அறியும் தளமாய் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிரிக்கெட் பார்ப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு கிரிக்கெட்டில் எந்தளவிற்கு ஆளுமை இருக்கிறது என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதன் முதன் முயற்சியாக தற்போது நடந்து வரும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில், நேற்று (ஜனவரி 6) முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடிய விதம் குறித்தும், போட்டியின் முடிவு குறித்தும் விவாதித்து இருந்தோம்.

இதில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் குறித்து நாம் கணித்திருந்த பல விஷயங்கள் அப்படியே நேற்று நடந்துள்ளது. இந்தியா அதிகபட்சம் முதல் இன்னிங்ஸில் 200 ரன்கள் தான் அடிக்கும் என்றும், ஹர்திக் பாண்ட்யா சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தோம். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. அதேபோல், ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஒரே வீரர் பாண்ட்யா மட்டும் தான்.

அந்த வீடியோவோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் ,

இன்று, இரண்டாம் நாள் ஆட்டம் குறித்தும், தென்னாப்பரிக்கா தனது இரண்டாம் இன்னிங்ஸில், எந்த பாணியிலான ஆட்டத்தை கடைபிடிக்கப் போகிறது என்றும், இப்போட்டியின் முடிவு என்னவாகப் போகிறது என்றும் கணித்துள்ளோம்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் அனலைஸிஸ் மற்றும் பிரடிக்ஷன் வீடியோவை இங்கே பார்க்கவும்,

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close