இலங்கை இந்தியா இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள்போட்டித்தொடரில் ஏற்கெனவே தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்துள்ளது. டெஸ்ட் தொடரை ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்தது. இந்த நிலையில், 5-வது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும், இந்திய அணி வெற்றிபெற்று ஒருநாள் போட்டியிலும், இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா – இலங்கை இடையேயான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
37 ஓவர்கள் முடிந்த நிலையில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும்படி 70 ரன்களை எட்டியிருந்தார். ஆனால் அடுத்த ஓவரில் அவரும் அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். 38 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களில் இலங்கை தத்தளித்தது.
மூன்று விக்கெட் இழப்பு: இலங்கை அணி மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில், 53 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 14 ரன்களுடனும், திரிமனே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை பேட்டிங்: 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி 2.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு 376 ரன்கள் இலக்கு: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோஹ்லி 131 ரன்களும், ரோஹித் ஷர்மா 104 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இலங்கை அணிக்கு 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கவுள்ளது.
50 ஓவர்கள் முடிவில்: இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. மனீஷ் பாண்டே 50 ரன்களும், தோனி 49 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
40 ஓவர் முடிவில்: 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 284 ரன்கள் எடுத்துள்ளது. தோனி மூன்று ரன்களுடனும், மனீஷ் பாண்டே எட்டு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
லோகேஷ் ராகுல் அவுட்: எட்டு பந்துகளில் ஏழு ரன்கள் அடித்து அவுட்டானார். மனீஷ் பாண்டே, தோனி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ரோஹித் ஷர்மா அவுட்: அணியின் ஸ்கோர் 262-ஆக இருந்த போது மேத்யூஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இவர், 88 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள், அடித்து 104 ரன்கள் எடுத்திருந்தார்.
ஹர்திக் பாண்டியா அவுட்: 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த போது, மேத்யூஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இதையடுத்து, லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளார்.
ரோஹித் 100: 86 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள், அடித்து 104 ரன்களுடன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். இது ஒரு நாள் போட்டிகளில் இவர் அடிக்கும் 13-வது சதம்.
30 ஓவர் முடிவில்: இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் ரோஹித் ஷர்மா 90 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுடனும் உள்ளனர்.
விராட் கோஹ்லி அவுட்: 96 பந்துகளுக்கு 131 ரன்கள் எடுத்த நிலையில், விராட் கோஹ்லி, லசித் மலிங்கா பந்து வீச்சில் அவுட்டானார்.
விராட் 100: கேப்டன் விராட் கோஹ்லி, 16 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 89 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
20 ஓவர் முடிவில்: இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கேப்டன் விராட் ஹோஹ்லி 89 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒரு விக்கெட் இழப்பு: தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான், ஆறு பந்துகளுக்கு நான்கு ரன்கள் எடுத்தபோது அவுட்டானார்.
தொடக்க ஆட்டக்காரர்கள்: தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
டாஸ் வென்றது இந்திய அணி: இந்தியா – இலங்கை இடையேயான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.