/tamil-ie/media/media_files/uploads/2017/12/z1073.jpg)
India vs srilanka 2nd T20 Live Updates
இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
டாஸுக்கு பின் பேசிய பெரேரா, "இந்தூர் மைதானத்தின் அளவு சிறியதாக உள்ளது. எனவே, இந்தியா எவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தாலும் அதை திருப்பி அடித்து விட விரும்புகிறோம். அதனால் தான் பவுலிங்கை தேர்வு செய்துள்ளேன்" என்றார்.
இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. விஷ்வா மற்றும் தசுன் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சதீரா சதுரங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இப்போட்டியின் தொடக்கம் முதல் முடிவு வரை முழு ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் ஐஇதமிழ்.காம்-ல் கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.