Advertisment

இந்தியாவிற்கு எதிரான டி20... இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை அணி, டி-20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Sri Lanka cricket ODI match

Colombo: Sri Lankan cricket team at presentation ceremony after India win the ODI Series during the fifth ODI match in Colombo, Sri Lanka, on Sunday. PTI Photo by Manvender Vashist (PTI9_3_2017_000216B)

இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இலங்கை அணிகளிடையே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி அபாரமாக கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இதனால், துவண்டுள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்பாக இந்த டி-20 போட்டி பார்க்கப்படுகிறது. நாளை(புதன்கிழமை) கொழும்புவில் நடைபெறும் இந்த டி-20 போட்டியில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்க காத்திருக்கிறது.

Advertisment

ஆனால், தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இலங்கை அணி, டி-20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளைப் போல அல்லாமல், இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் இலங்கை அணி, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்தியுள்ளது.

டி20 போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி: உபுல் தரங்கா(கேப்டன்),  ஏஞ்சலோ மேத்திவ்ஸ், நிரோஷன் திக்வெல்லா(விக்கெட் கீப்பர்), தில்ஷான் மனுவீரா, தசுன் ஷானனகா, சிரிவர்தனா, ஹசரங்கா, தனன்ஜெயா, வான்டர்சே, உடானா, பிரசன்னா, திசாரா பெரேரா, லசித் மலிங்கா, லக்மல், சன்ஜெயா.

இலங்கை அணியானது ஓய்வுபெற்ற வீரர்களான குமார் சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகிய நட்ச்சத்திர வீரர்களின் இடத்தை நிரப்ப முடியாமல் தவித்து வருகிறது.

Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment