இந்தியா - இலங்கை டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 399 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 399 ரன்கள் குவித்துள்ளது. ஷிகார் தவான், புஜாரா ஆகியோர் சதம் அடித்து...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 399 ரன்கள் குவித்துள்ளது. ஷிகார் தவான், புஜாரா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இலங்கை மண்ணில் இந்திய அணி மீண்டும் களமிறங்கியுள்ளது.

இலங்கையின் காலேயில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். முன்னதாக, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது.

இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க ஆட்டக்காரர்களாக, ஷிகர் தவானும், தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்தும் தொடங்கினர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதிலும், அபினவ் முகுந்த் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களமிறங்கிய புஜாரா, தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். தவான், 31 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்த கேட்சை குணரத்னே தவறவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தவான், அதிரடியில் இறங்கினார். சதம் அடித்த ஷிகர் தவான், தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அணியின் ஸ்கோர் 280 ஆக இருந்தபோது, 190 ரன்களில் (168 பந்து, 31 பவுண்டரி) தவானின் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. இதனால் 10 ரன்னில் இரட்டை சதம் வாய்ப்பை தவன் தவறவிட்டார். டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில், உணவு இடைவேளைக்கு பின், தேநீர் இடைவேளைக்குளான இரண்டாவது பகுதியில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை தவான் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், உம்ரிகானின் 110 ரன்கள் என்ற சாதனையை தவான் முறியடித்துள்ளார்.

தைவானின் விக்கெட் இழப்புக்கு பின் களமிறங்கிய கேப்டன் விராட், 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது, இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. அதனையடுத்து, துணை கேப்டன் ரஹானே களமிறங்கினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, டெஸ்ட் போட்டியில் தனது 12-வது சதத்தை எட்டினார்.

ரஹானே 39 ரன்களும், புஜாரா 114 ரன்களும் எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. புஜாரா 144 ரன்களுடனும், ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இலங்கையை பொறுத்தவரை அதிகபட்சமாக நுவன் பிரதீப் மூண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

×Close
×Close