இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 2வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 2வது டி20 போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..
முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இருந்தது.
அதே போல, வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2வது போட்டியை வெற்றி பெற்று இந்தியாவின் தொடரை வெல்லும் வாய்ப்பை தடுக்க கடுமையான முயற்சியில் இருந்தது.
2வது போட்டியில், விராட் கோலி (கேப்டன்) தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முஹமது சமி, சஹல், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், புவனேஸ்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் 2 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (2547 ரன்), விராட் கோலி (2544 ரன்) உள்ளனர். ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பாரா அல்லது அவரை கோலி இந்த ஆட்டத்தில் முந்துவாரா? என்பதை பார்க்க சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். அனேகமாக இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்று தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில், பொல்லார்ட், நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங், எவின் லெவிஸ், ஷிம்ரோன் ஹெட்மெய்ர், ஃபாபியன் ஆலன், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.
அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்த தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
சர்வதேச 20 ஒவர் போட்டிகளில், இதுவரை அதிகபட்சம் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளவர்கள் இந்திய வீரர்கள்தான். முதல் இடத்தை ரோஹித் சர்மா 2547 ரன்கள் குவித்து முதல் இடத்திலும், விராட் கோலி 2544 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெருபவர்கள் யார் என்பதைப் போல, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முந்தப்போவது யார் விராட் கோலியா ரோகித் சர்மாவா என்ற சுவாரசியமான எதிர்ப்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நிலவுகிறது.