வங்கதேசத்தில் உள்ள டாக்கா நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வந்தது. இதில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் முதல் 2 இடத்தை தனதாக்கிய மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2-வது சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின.
இந்த நிலையில், சூப்பர்-4 சுற்றில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டிரா கண்டாலே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களம் கண்ட இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
அதேபோல், மலேசிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இந்தியா - மலேசியா இடையே இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம், மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றுகிறது.