ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது

Asia cup Hockey, India
Asia cup Hockey, India

வங்கதேசத்தில் உள்ள டாக்கா நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வந்தது. இதில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் முதல் 2 இடத்தை தனதாக்கிய மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2-வது சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின.

இந்த நிலையில், சூப்பர்-4 சுற்றில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டிரா கண்டாலே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களம் கண்ட இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

அதேபோல், மலேசிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இந்தியா – மலேசியா இடையே இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம், மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றுகிறது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India win asia cup title for third time beat malaysia 2

Next Story
ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com