/indian-express-tamil/media/media_files/2025/10/12/india-vs-australia-worldcup-2025-10-12-16-23-07.jpg)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
மகளிர் கிரிக்கெட் போட்டியில் 13-வது உலககோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்துகின்றன. கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கிய இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன், அலைசா ஹேர்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு, ப்ரதிகா ராவல் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மந்தனா, அரைசதம் கடந்து அசத்திய நிலையில், ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களைப் பூர்த்தி செய்த முதல் பெண் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
மந்தனா - ராவல் ஜோடி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு, 24.3 ஓவர்களில் 155 ரன்கள் சேர்த்தபோது, 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த மந்தனா ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஹர்லின் தியோல் நிதானமாக ஆட மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனை ராவல் 75 ரன்களுக்கு வெளியேறினார். ஹர்லின் தியோல் 38 ரன்களும், கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெமியா 33, விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 32, அமான்ஜித் கவுர் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 48.5 ஓவர்களில் இந்திய அணி 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சினேகா ரானா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் சுதேர்லேண்ட் 5 விக்கெட்டுகளும், மொலிநெக்ஸ் 3 விக்கெட்டுகளும், கார்டனர், ஷாட்க்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன், சதம் கடந்து அசத்திய நிலையில், 107 பந்துகளில் 142 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த லிச்ஃபீல்ட் 40, பெர்ரி 47, கார்ட்னர் 45 ரன்களும் எடுத்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 331 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில், சரணி 3 விக்கெட்டுக்ளும், தீப்தி சர்மா, அம்ஜோத் கவுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 4-வது ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஏற்கனவே கடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்திய அணி இதே 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.