செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவுக்காக பெருமை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் செஸ் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். (டிசம்பர் 11) விஸ்வநாதன் ஆனந்தின் பிறந்த தினம்.
பிறப்பும் – செஸ் போட்டி ஆர்வமும்
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1969-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிறந்தவர் தான் விஸ்வநாதன் ஆனந்த். சிறுவயதாக இருக்கும்போதே விஸ்வாநதன் ஆனந்தின் குடும்பம் சென்னைக்கு குடியெர்ந்த நிலையில், அவரது தந்தை, கிருஷ்ணமூர்த்தி விஸ்வநாதன் பீகார் ஜமால்பூரில் தெற்குரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றியுள்ளார். இல்லத்தரசியாக அவரது தாய் சுசீலா, செஸ் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர்.
/indian-express-tamil/media/media_files/r9vymnnUlRy6kKAGE5jN.jpg)
தாயின் செஸ் ஆர்வத்தில் விஸ்வநாதன் ஆனந்த் தனது 6 வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வமாக கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார். 1978-80 வரை விஸ்வநாதன் ஆனந்தின் பெற்றோர்கள் பிலிப்பைன்சில் மணிலாவில் இருந்ததால், அங்கேயே செஸ் பயிற்சி பெற்றுள்ளார். அவரது தந்தை பிலிப்பைன்ஸ் தேசிய ரயில்வேயில் ஆலோசகராக இருந்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த விஸ்வநாதன் ஆனந்த் வணிகவியல் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
முதல் செஸ் போட்டி
1983-ல் தனது முதல் செஸ் போட்டியில் பங்கேற்ற விஸ்வநாதன் ஆன்ந்த் இந்த போட்டியில் 9-9 என்ற புள்ளி கணக்கில், சப் ஜூனியர் பட்டம் வென்று தேசிய அளவில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து 1984-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், சர்சதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். அதன்பிறகு: தெசலொகினியில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றறார்.
இந்த தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி 7.1/2 புள்ளிகளுடன் வெற்றி பெற்று தனது 2-வது மாஸ்டர் பட்டத்தை வென்றார். 1985-ல் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன் ஷிப் தொடரை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 15 வயதில் 3 மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தனது 16 வயதில் தேசிய சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த் 1987-ல் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்.
முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டம்
1988-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் 18 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றார். இந்த தொடரில், ரஷ்யாவின் எஃபிம் கெல்லருக்கு எதிராக விஸ்வநாதன் ஆனந்தின் வெற்றி சிறப்பு வாய்நதது. இந்த கிராண்ட்மாஸ்டர் பட்டத்தின் மூலம் அவருக்கு 18 வயதில் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/aiQGl8peOZm5lQtKvo4E.jpg)
1994-95 காலக்கட்டத்தில், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சோவித் நாட்டின் கேடா காம்ஸ்கி இருவரும் எஃப்.ஐ.டி.இ (FIDE) மற்றும் பி.சி.ஏ (PCA) உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் ஆதிக்கம் செலுத்தியபோது. எஃப்.ஐ.டி.இ (FIDE) தகுதி சுற்றில் ஆனந்த் காம்ஸ்கியிடம் தோல்வியடைந்தார். அடுத்து 95-ல் நடைபெற்ற பி.சி.ஏ போட்டியின் இறுதிப்போட்டியில், காம்ஸ்கியை வென்ற ஆனந்த் தோல்விக்கு பழி தீர்த்ததுடன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
விஸ்வநாதன் ஆனந்தின் செஸ் புள்ளிவிபரங்கள்
செஸ் போட்டிகளில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், மைனஸ் செஸ் க்ளாசிக் பிரிவு 11 சாம்பியன்ஷிப் தொடரை 11 முறை வென்றுள்ளார். இதில் 2008-ல் அவர் கார்ல்சனை தோற்கடித்து தனது 11-வது பட்டத்தை வென்றார். அதேபோல் செஸ் கோரஸ் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் (1989-1998-2003-2004-2006 ஆகிய ஆண்டுகளில்) வென்ற முதல் வீரர் என்ற பெருமை விஸ்வநாதன் ஆனந்த்க்கு உண்டு.
லினாரஸ் போட்டியில் (1998, 2007, 2008) 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், டார்ட்மெண்ட் தொடரிலும் (1996, 2000, 2004) 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2000-ம் எஃப்.ஐடிஇ சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 2002-வரை அந்த பட்டத்தை வைத்திருந்தார், அதன்பிறகு 2007-ல் உலக செஸ் சாம்பியன் ஆனார். அதன்பிறகு 2007-08 என இரு ஆண்டுகளும் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றிய ஆனந்த், 2013-ம் ஆண்டு நார்வேயின் கார்ல்சனிடம் தோல்வியடைந்து பட்டத்தை பறிகொடுத்தார். உலக செஸ்ட் தரவரிசை பட்டியலில் 21 மாதங்கள் முதலிடத்தை பிடித்திருந்தவர் விஸ்வநாதன் ஆனந்த்.
/indian-express-tamil/media/media_files/HPBNhXptF4cCLLd3nIkV.jpg)
விருதுகள்
பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 1985-ம் ஆண்டு இந்தியாவின் அர்ஜூனா விருது, 1987-ல் பத்மஸ்ரீ விருது வென்றிருந்தார். 1991-92-ல் இந்தியாவின் ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றார். 2000-ம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2007-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளை பெற்றார். விஸ்வநாதன் ஆனந்த் இன்று (டிசம்பர் 11) தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“