'நோ செண்டிமெண்ட்ஸ்... ஒன்லி ஆக்ஷன்'! - உலகக் கோப்பைக்கான இந்திய அணி - ஒரு பார்வை

அம்பதி ராயுடுவின் டிராப் நிச்சயம் பேரதிர்ச்சி தான். அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு 2 காரணிகளை முக்கிய காரணமாக பார்க்கலாம்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று(ஏப்.15) அறிவிக்கப்பட்டுள்ளது. என்டு கார்டு போடப்பட்டதாக நினைத்தவர்களுக்கும், நாம் தேர்வாகிவிடுவோம் என்ற நினைத்த சிலருக்கும் இந்த அறிவிப்பு நிச்சயம் மகிழ்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கும். பட்.. நாம் யாருக்காகவும் வருத்தப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்த களத்தில் செண்டிமெண்ட்ஸை வைத்துக் கொண்டு எதுவும் சாதிக்க முடியாது. இந்திய வீரர்கள் தேர்வு குறித்த சிறிய அலசல் இதோ…

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி(c), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், மகேந்திரசிங் தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.

பார்த்தாச்சா? உங்களுக்கு என்ன தோணுது?

ஆங்… அதே தான் எனக்கும் தோணுது!

ஒன்னும் பெரிய ஆச்சர்யங்கள் இல்லை. எதிர்பார்த்த அணி தான். ஆனால், எதிர்பார்த்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அம்பதி ராயுடு, 

ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு கிடைக்காததை ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பச்சா’ என்று சொல்லி கடந்துவிடலாம். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், உலகக் கோப்பை போன்ற அதி முக்கிய தொடர்களுக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது தானே உலக வழக்கம்? அதற்காக 2003ல் ‘பாலகன்’ பார்த்திவ் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது குறித்து நீங்கள் எழுப்பினால், அப்போது இந்திய அணிக்கு, அவர்கள் எதிர்பார்த்த ரிசர்வ் விக்கெட் கீப்பர் இல்லையென்பதே பதில்.

ஆனால், இப்போது நிலை அப்படியல்ல. தினேஷ் கார்த்திக் எனும் மோஸ்ட் சீனியர் ரேஸில் இருக்கும் போது, ரிஷப்புக்கு வாய்ப்பு கிடைப்பது மிக மிக கடினம் என்பதை நாம் அறியாமல் அல்ல. தவிர, ரிஷப்பின் விக்கெட் கீப்பிங் எபிலிட்டி பற்றிய சந்தேகமும் இருக்கு தானே!? பிறகு எதற்கு ரிஸ்க்? ஸோ, ரிஷப் டிராப் செய்யப்பட்டதில் அதிர்ச்சி இல்லை.

ஆனால், அம்பதி ராயுடுவின் டிராப் நிச்சயம் பேரதிர்ச்சி தான். அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு 2 காரணிகளை முக்கிய காரணமாக பார்க்கிறோம்.

ஒன்று, லோகேஷ் ராகுல்

மற்றொன்று, பேட் லக்

வேறு என்ன சொல்ல…

தவிர, 2 ஃபாஸ்ட் ஆல்ரவுண்டர்கள் (ஹர்திக், விஜய்), ஒரு ஸ்பின் ஆல் ரவுண்டர் (ஜடேஜா), மூன்று திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் (பும்ரா, புவனேஷ், ஷமி), இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் (குல்தீப், சாஹல்) என நாம் எதிர்பார்த்த யூனிட் அப்படியே இடம்பிடித்துள்ளது.

கோலி, ரோஹித் (உடம்பை குறைக்கணும் ப்ரோ), தவான், லோகேஷ் ராகுல்(ரிசர்வ் ஓப்பனர்), தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி ஆகியோர் அந்தந்த ரோலுக்கு பெர்ஃபெக்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மிடில் ஆர்டர்!!!??? ஓகே வா?

ஒட்டுமொத்தமாக, அசுர பலம் வாய்ந்த இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வதை விட, உலகக் கோப்பைக்கு எதிர்பார்த்த அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close