Advertisment

வெளிநாடுகளில் தொடரும் புஜாரா மேஜிக்... இங்கிலாந்து உள்ளூர் போட்டியில் அதிரடி சதம்

இங்கிலாந்து உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் புஜாரா சதம் கடந்து அசத்தியுள்ளார்

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pujara

சத்தீஷ்வர் புஜாரா இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் சதம்

உள்ளூரில் எலியாகவும் வெளியூரில் புலியாகவும் இருப்பார் என்றால் அவர் நிச்சயமாக சத்தீஷ்வர் புஜாரா தான். இந்தியாவில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்க்கு பிறகு மிக சிறந்த டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அவ்வப்போது சதம் கடந்து அசத்தி வருகிறார். அதே சமயம் ரன் குவிக்காமல் போனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

Advertisment

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த தொடர்களில் மீண்டு வந்து ரன் குவிப்பது புஜாராவின் வழக்கமான ஒரு ஆட்ட நுணுக்கம் என்று சொல்லாம். ஆனால் எவ்வளவுதான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ரன்கள் குவித்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கான வாய்ப்பு இன்றுவரை எட்டாக்கனிதான்.

இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுளள் புஜாரா, 7195 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதம், 3 இரட்டை சதம், 35 அரைசதம் கடந்துள்ளார். 863 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடித்துள்ள புஜாரா 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 51 ரன்களும், 30 டி20 போட்டிகளில்,  390 ரன்களும் குவித்துள்ளார்.

அதிரடியாக விளையாடாததால் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள புஜாரா அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் ஏலத்தில் சென்றால் கூட ஆடும் லெவன் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த புஜாரா ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.

இந்தியாவில் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் புஜாராவுக்கான கதவு அடைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் அவருக்கான கதவு திறந்துதான் இருக்கிறது. இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் விளையாடி ரன்கள் குவித்து வரும் புஜாரா, அங்கே லிமிட்டெட் ஓவர் போட்டிகளிலும் அதிரடியில் கலக்கி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கவுண்டி போட்டிகளில் அதிரடியாக விளையாடி சதம் கடந்து அனைவரையும் வியக்க வைத்தார்.

அதே மாதிரியான ஒரு தருணம் தற்போது நடந்துள்ளது. இங்கிலாந்தில் ஒருநாள் கோப்கைக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் புஜாரா நேற்று நடைபெற்ற சோமர்சேட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சோமர்சேட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது. உமீட் 119 ரன்களும், சேம்ஹர் 101 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 319 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சசெக்ஸ் அணி 139 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவரின் அதிரடி ஆட்டத்தால் சசெக்ஸ் வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில், புஜாரா சதம் கடந்து அசத்தினார். முடிவில் 48.1 ஓவர்களில் சசெக்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த புஜாரா 113 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 302 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 போட்டிகளில் சதம் கடந்துள்ள நிலையில், ஒரு போட்டியில் அரைசதம் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Indian Cricket Team Cheteshwar Pujara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment