Advertisment

HBD Kapil Dev : எந்த வீரரும் தொட முடியாத உச்சம் : இந்திய உலககோப்பை நாயகன் கபில்தேவ் சாதனை தெரியுமா?

டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்து 400-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Kabil Dev

உலககோப்பை நாயகன் கபில்தேவ் பிறந்த தினம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலககோப்பையை வென்று கொடுத்த வெற்றி நாயகன கபில்தேவ். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக களத்தில் பல சாதனைகளை செய்துள்ள கபில் தேவ்-க்கு இன்று பிறந்த நாள்.

Advertisment

Kabil Dev

பிறப்பும் – கிரிக்கெட் போட்டியில் முதல் வாய்ப்பும்

1959-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி சண்டிகாரில் பிறந்தவர் தான கபில் தேவ். சிறுவயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய கபில்தேவ், தனது 16-வயதில், 1975-ம் ஆண்டு உள்ளூர் கிரக்கெட் போட்டியில் களமிறங்கினார். உள்ளூர் சீசனில் ஹரியான அணிக்காக பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கிய கபில்தேவ், அந்த போட்டியில் பஞ்சாப் அணியை 63 ரன்களில் சுருட்டி, ஹரியான அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார்.

இந்த தொடரில் 30 போட்டிகளில் விளையாடிய அவர், 121 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். தொடர்ந்து 1976-77 சீசன்களில் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக 8 விக்கெட்டுகள், அசத்திய கபில்தேவ், ஹரியானா அணியை காலிறுதி சுற்றுவரை அழைத்து சென்றார். ஆனால் காலிறுதி சுற்றில் ஹரியானா மும்பை அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அடுத்த ஆண்டு 1977-78 சீசனில், சர்வீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

Kabil Dev

இந்த போட்டியின் மூலம் முதல் தர போட்டியில் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில்தேவ், அந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், அடுத்து, இரானி கோப்பை, துலீப் கோப்பை, வில்ஸ் கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978-79 சீசன்களில் விக்கெட் வேட்டையில் ஈடுபட்ட கபில்தேவ் பேட்டிங்கிலும் அணிக்கு கை கொடுத்தார்.

சர்வதேச போட்டியில் அறிமுகம் – டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம்

உள்ளூர் போட்டிகளில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கபில்தேவ், 1978-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக பைசலாபத் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில், கபில்தேவ் அதிக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், தனது பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தான் வீரர்களை திணறடித்துள்ளார்.

முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தாத கபில்தேவ், 2-வது இன்னிங்சில், பாகிஸ்தான் அணியின் சாதிக் முகமதுவின் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது விக்கெட் எண்ணிக்கையை தொடங்கினார். இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும், முதலில் பேட் செய்த இந்திய அணியில், கபில்தேவ் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

33 பந்துகளில் 2 சிக்சர் உட்பட அரைசதம் கடந்த கபில்தேவ், டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் கடந்து தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார். இந்த இன்னிங்சில் 48 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல் முதல் இன்னிங்சில் பந்துவீச்சிலும் 3 முக்கிய விக்கெட்டுகளை வெளியேற்றி அசத்தினார். 2-வது இன்னிங்சில் 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த தேவ், பந்துவீச்சில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Kabil Dev

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய கபில்தேவ், பேட்டிங்கில் 159 ரன்கள் குவித்திருந்தார். அதன்பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார்.

முதல் டெஸ்ட் சதம்

1979-ம் ஆண்டு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின், 5-வது டெஸ்ட் போட்டியில், 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கபில்தேவ், 124 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 126 ரன்கள் குவித்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

1982-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கபில்தேவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கிலும் 69 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 2-வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய கபில்தேவ், 55 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து அசத்தினார். பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், பேட்டிங்கில் 292 ரன்கள் குவித்த கபில்தேவ், 5 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். 1978-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்து இந்தியா ஒருநாள் தொடரிலும் விளையாடியது. அப்போதே ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார் கபில்தேவ். முதல் போட்டியில் 13 ரன்கள் எடுத்த இவர் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

Kabil Dev

1979- உலககோப்பை vs 1983 உலககோப்பை

சுனில் கவாஸ்கர் தலைமையில் 1979- உலககோப்பை தொடரில் களமிறங்கிய இந்திய அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது முறையாக கோப்பை வென்றது. இதில் கபில்தேவ், 3 போட்டிகளில் விளையாடி 53 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். இதன் காரணமாக இந்திய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், அசத்திய கபில்தேவ், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் வெற்றியை தேடி கொடுத்தார். இதில் மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், வெற்றியை கொடுத்த இவர், அடுத்து சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் என 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார். பேட்டிங்கிலும் 98 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் 100 விக்கெட் மற்றும் 1000 ரன்கள் (21 போட்டிகள் )எடுத்த இங்கிலாந்து அணியின் இயான் போத்தம் (25 போட்டிகள்) சாதனையை முறியடித்த கபில்தேவ், இந்த தொடரில் 2 அரைசததங்களுடன் 278 ரன்கள் குவித்திருந்தார். 1980-81-ல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் காயத்தால் அவதிப்பட்ட கபில்தேவ், பாதியில் வெளியேறினாலும், வலி நிவாரணி எடுத்துக்கொண்டு கடைசி போட்டியில் களமிறங்கி, 16.4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Kabil Dev

இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்

1982-83 சீசனில் கேப்டன் கவாஸ்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கபில்தேவ், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1983-ல் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி லண்டன் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியது. அதற்கு முன்பு உலககோப்பை தொடரில் இந்திய அணி கிழக்கு ஆப்பிரிகா அணியை மட்டுமே வென்றிருந்த நிலையில், 83 உலககோப்பை தொடரின் முதல் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திதது.

இந்த போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 5 விக்கெட் வித்திசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் கபில்தேவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் படுதோல்வியை சந்தித்து. அடுத்து 4-வது போட்டியில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்தியா ஜிம்பாப்வே அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சாதனை சதம் அடித்த கபில்தேவ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலில் களமிறங்கிய இந்திய அணி, 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கபில்தேவ், ரோஜர் பின்னி, ரவி சாஸ்திரி, மதன்லால், கிர்மணி ஆகியோரின் ஒத்துழைப்புடன் 138 பந்துகளில் 16 பவுண்டரி 6 சிக்சருடன் 175 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 9-வது விக்கெட்டுக்கு கிர்மணியுடன் இணைந்து 126 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Kabil Dev

பந்துவீச்சில் கபில்தேவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 1983- ஜூன் 25-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 183 ரன்களே குவித்த நிலையில், கபில்தேவ்-ன் அசத்தலான கேட்ச், மற்றும் கேப்டன்சியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை 140 ரன்களில் சுருட்டி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு கபில்தேவ் முதல் உலககோப்பை பெற்று தந்தார்.

கபில்தேவ் சாதனைகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 86 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தி கேப்டனாக ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் 6-வது வீரரான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அதிக ரன்கள் (175) குவித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 9-வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்து சாதனை படைத்து 2-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்தபோது அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இவர் எடுத்த 175 ரன்களே இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த முதல் மற்றும் கடைசி சதமாகும். கிரிக்கெட் உலகில் எல்.பி.டபிள்யூ முறையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவ் (152) 8-வது இடத்தில் உள்ளார்.

Kabil Dev

இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கபில்தேவ், 5248 ரன்களையும் (8 சதம் 27 அரைசதம்), 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்து 400-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒரு சதம், 14 அரைசதத்துடன் 3783 ரன்கள் குவித்துள்ளார். 253 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் பத்மபூஷன் (1991), பத்மஸ்ரீ (1982) ஆகிய விருதுகளை பெற்றுள்ள கபில்தேவ்-க்கு, 2013-ம் ஆண்டு சி.கே.நாயுடுவின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருக்கும் கபில்தேவ்-க்கு இன்று பிறந்த நாள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team Kapil Dev
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment