இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு இதுவரை சிறந்த ஆண்டாகவே இருக்கிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை முழுமையாக வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடந்த டெஸ்ட் தொடரையும் வென்றது. அதன்பின், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இருப்பினும், இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் வீழ்த்தியது.
தொடர் வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களின் லேட்டஸ்ட் சம்பளம் என்னவென்று இங்கு பார்ப்போம். பிசிசிஐ-யின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களின் வருட சம்பளம் இது,
கிரேட் A: விராட் கோலி, தோனி, அஷ்வின், ரஹானே. புஜாரா, ஜடேஜா, முரளி விஜய் ஆகிய வீரர்கள் வருடத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்குகின்றனர்.
கிரேட் B: ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ் குமார், முஹமத் ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ரிதிமான் சாஹா, ஜஸ்ப்ரித் பும்ரா, யுவராஜ் சிங் ஆகிய வீரர்கள் வருடத்திற்கு ஒரு கோடி சம்பளம் பெறுகின்றனர்.
கிரேட் C: தவான், அம்பதி ராயுடு, அமித் மிஷ்ரா, மனீஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, ஆசிஷ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாஹல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மந்தீப் சிங், தவல் குல்கர்னி, ஷர்துல் தாகுர், ரிஷப் பண்ட் ஆகியோர் வருடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குகின்றனர்.