/tamil-ie/media/media_files/uploads/2018/01/a211.jpg)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி இழந்திருந்தாலும், ஜோகனஸ்பெர்க்கில் நடந்து முடிந்த இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று அசத்தியது. அதுவும், தாறுமாறாக எகிறிய பிட்சை சிறப்பாக எதிர்கொண்டு தென்.ஆ. பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்திய பவுலர்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, எம் எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, மனீஷ் பாண்டே, அக்சர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெயதேவ் உனட்கட், ஷர்துள் தாக்குர்.
#TeamIndia for T20I series vs SA: Virat (Captain) Rohit (vc), Shikhar, KL Rahul, Raina, MSD (wk), Dinesh Karthik, Hardik, Manish, Axar, Chahal, Kuldeep, Bhuvneshwar, Bumrah, Unadkat, Shardul Thakur #SAvIND
— BCCI (@BCCI) 28 January 2018
அணித் தேர்வை பொறுத்தவரை மிக பலமான வரிசை தான். தற்போதைய இந்திய அணியின் உச்சபட்ச பலம் கொண்ட டி20 அணி இதுவாகத் தான் இருக்க முடியும்.
முன்னதாக, யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், இந்திய அணிக்குள் இடம் பெற முடியாமல் இருந்த சுரேஷ் ரெய்னா, சமீபத்தில் நடந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்றார். இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரெய்னா இடம் பெற்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்க வைப்பு, இந்திய அணிக்குள் மீண்டும் இடம் கிடைத்திருப்பது என ரெய்னாவுக்கு 2018ம் வருடத்தின் தொடக்கமே அசத்தலாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.