Advertisment

க்ராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் : யார் இந்த நிருபமா சஞ்சீவ்?

ஒற்றையர் பிரிவில் 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிருபமா, 1996-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பேட் கோகிங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்.

author-image
D. Elayaraja
New Update
Nirupama Sanjeev3

டென்னிஸ் வீராங்கனை நிருபமா சஞ்சீவ்

உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய பெண், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மெயின் டிராவில் இடம் பெற்ற 2-வது பெண், அதேபோல் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய பெண் என்ற சாதனை படைத்தவர் நிருபமா சஞ்சீவ்.

Advertisment

பிறப்பும் ஆரம்ப கால டென்னிஸ் போட்டியும்

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நிருபமா சஞ்சீவ் 1976-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி பிறந்தவர். அவரது சகோதரரின் டென்னிஸ் விளையாட்டை பார்த்து அதில் இருந்து டென்னிஸ் போட்டியில் ஆர்வம் காட்டிய நிருபமா சஞ்சீவ் தனது 5-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கியுள்ளார். இவரது தந்தை வைத்தியநாதன், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடியவர்.

தந்தை கிரிக்கெட் வீரர் என்றாலும் சகோதரரை போல் நிருபமாவுக்கு டென்னிஸ் ஆர்வம் இருப்பதை அறிந்த வைத்தியநாதன் சில காலம் தனது மகளுக்கு டென்னிஸ் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தந்தையின் பயிற்சியும், நிருபமாவின் ஆர்வமும் அவரை 12 வயதுக்குட்பட்டேருக்கான தேசிய டென்னிஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்று தந்நதது.

Nirupama Sanjeev3

12-வயதுக்குட்பட்டோருக்கான தேசிய டென்னிஸ் சாம்பியஷிப் போட்டியில் அரையிறுதி சுற்றுவரை முன்னேறிய நிருபமா, தனது 13 வயதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய நிருபமா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். தொடர்ந்து 1991, 92, 96 உள்ளிட்ட ஆண்டுகளில் தேசிய பெண்கள் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்.

சர்வதேச போட்டியில் என்டரி – முதல் பட்டம்

1996-ம் ஆண்டு ஐரோப்பாவின் லக்சம்பேர்க்கு குடியேறிய நிருபமா, தனது 18 வயதில் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார். இதில் 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம், எஸ்.இ.ஏ.டி ஓபன் டென்னிஸ் தொடரின் மூலம் தனது முதல் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்தார். இந்த தொடருக்கான தகுதிச்சுற்றில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிருபமா, ஜெர்மன் வீராங்கனையான ஜனா கநதர் என்பரிம் தோல்வியடைந்தார்.

தொடர்ந்து 1997-ம் ஆண் நடைபெற்ற ஐடிஎஃப் மகளிர் சர்க்யூட் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற நிருபமா சிறப்பாக விளையாடி தனது முதல் சர்வதேச சாம்பியஷிப் பட்டத்தை வென்றார். 25 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் ருமேனிய வீராங்கனை ரலுகா சண்டுவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

க்ராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தகுதி

1997-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், பங்கேற்றதன் மூலம் தனது முதல் க்ராண்ட்ஸ்லாம் போட்டியில் அறிமுகமான நிருபமா இந்த தொடரின் முதல் சுற்றில், ஹங்கேரியா வீராங்கனை பெட்ரா மாண்டுலாவை தோற்கடித்தார். தொடர்ந்து 2-வது சுற்றில், ஜப்பானிய வீராங்கனை யுகா யோஷிதாவுடன் மோதிய நிருபமா தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

1997-ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள சரசேட்டாவுக்கு இடம்பெயர்ந்த நிருபமா, இந்திய வீரர் லியோண்டர் பயஸின் பயிற்சியாளரான ஓ மிராவிடம் 2 ஆண்டுகள் பயிற்றி பெற்றார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு லிப்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தார். அடுத்து ஒரு மாத இடைவெளியில் டபிள்யூ.டி.ஏ மகளிர் தொடரில் விளையாடிய நிரூபாமா பிரதான டிரா சுற்றில் பங்கேற்றிருந்தார். அதே ஆண்டு ஜப்பான் ஓபன் தொடரில், 3 வெற்றிகளை பெற்ற நிருபமா முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.

Nirupama Sanjeev3

அதன்பிறகு பங்கேற்ற சில தொடரில் முதல் சுற்று அல்லது தகுதிச்சுற்றுகளில் தோல்விகளை சந்தித்த நிருபமா, புல்கோர்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பிறகு டி.எஃப்ஃஎஸ் தொடர் மற்றும் விம்பிள்டன் தொடர்களில் பங்கேற்று ஒரு வெற்றியை மட்டுமே பெற்றதால், யு.எஸ்.ஓபன் தொடருக்கு தகுதி பெற தவறினார். 1996-97 சீசன்களில் வெவ்வேறு போட்டியாளர்களுடனட இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிருபமா 4முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஆஸ்திரேலியா ஓபன் முதல் வாய்ப்பு

1998-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மெயின் டிராவில் வைல்ட் கார்டு பெற்ற நிருபமா, இத்தாலியின் குளோரியா பிசிச்சினியை தோற்கடித்து க்ராண்ட்ஸ்லாம் மெயின் டிராவில் ஒரு சுற்றில் இடம் பெற்று வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார். அதே ஆண்டு குரோஷியாவின் போல் ஓபன் தொடரில், இறுதி தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார்.

ஆனாலும் அவரது புள்ளிகளின் அடிப்படையில் அவருக்கு மெயின் டிரா வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த போட்டியில் பிரெஞ்ச் வீராங்கனையிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 1998-ம் ஆண்டு பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ்பூபதியுடன் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். 1999 தல்கோ ஓபன் மற்றும் ஆஸ்திரேலியா ஓபன் தொடர்களின் தகுதிச்சுற்றில் தோல்வியை சந்தித்தார்.

சிட்னி ஒலிம்பிக் போட்டி

2000-ம் ஆண்டு ஏப்ரலில், நடைபெற்ற ஐடிஎஃப் சாம்பியன் ஷிப் போட்டியில், பட்டம் வென்ற நிருபமா 2000-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் மகளிர் இரட்டையர் பிரிவில் மனிஷா மல்ஹோத்ராவுடன் இணைந்து விளையாடினார். இந்த போட்டியில், ஆஸ்திரேலியா இணையுடன் மோதி தோல்வியடைந்தார். அதே சமயம் 2000-ம் ஆண்டு இரட்டையர் பிரிவில் 4 ஐடிஎஃப பட்டம் வென்ற நிருபமா 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

2002-ம் ஆண்டு, யுஎஸ் ஓபனில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய நிருபமா காயம் காரணமாக பல போட்டிகளை தவறிவிட்டார். 2003-ம் ஆண்டு ஐடிஎஃப் தொடரில் 2-வது தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த நிருபமா அதன்பிறகு டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு 6 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு 2009-ம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் போட்டிக்கு திரும்பிய நிருபமா, அடுத்து சில போட்டிகளில் வெற்றி தோல்வி என மாறி மாறி பெற்றிருந்தார். 2010-ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார்.

Nirupama Sanjeev3

இந்த போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சக வீராங்கனை சானியா மிர்சாவிடம் தோல்வியடைந்து பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற நிருபமாவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காத நிலையில், 2010-ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

நிரூபாமா டென்னிஸ் புள்ளிவிபரங்கள்

ஒற்றையர் பிரிவில் 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிருபமா, 1996-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பேட் கோகிங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2000-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஐடிஎஃப் தொடரில் வெற்றி பெற்றார். அதே போல் இரட்டையர் பிரிவில் 16முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடைசியாக அமெரிக்காவில் நடைபெற்ற சரசேட்டா தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிருபமா தற்போது கரிபோர்னியாவில் உள்ள பே ஏரியாவில் டென்னிஸ் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்து சர்வதேச டென்னிஸ் தொடரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரவில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்ற நிருபமா சஞ்சீவ் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 8). 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tennis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment