உலக பவுலர்களை அச்சுறுத்தும் ஸ்மித்! இந்திய வீரர்களின் பதில் என்ன?

பிராட்மேனைத் தவிர்த்து கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் இந்த ரேட்டிங்கை தொட்டது கிடையாது

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இதுவரை அதிக ரேட்டிங் வைத்திருப்பவர் ஆஸ்திரேலியாவின் சர் டான் பிராட்மேன் தான். அவரது ரேட்டிங் 961. அதனை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருப்பவர் தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.

கட்டுக்கடங்காத காளையாக சீறிக் கொண்டிருக்கும் ஸ்மித்தை எந்த பவுலராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றால் அது மிகையாகாது. உச்சக்கட்ட பார்ம் என்பது எப்போதும், கைக் குழந்தை போல, அவருடன் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. அவரும் அந்த சுமையே தெரியாமல், கேஷுவலாக சதங்களை விளாசித் தள்ளிக் கொண்டே இருக்கிறார். விராட் கோலி, சச்சினின் சாதனைகளை முறியடிப்பாரோ என்னவோ தெரியவில்லை, நீண்ட காலம் விளையாடினால் நிச்சயம் டெஸ்ட்டிலாவது சச்சினின் சாதனைகளை ஸ்மித் முறியடிப்பது உறுதி. இப்போது ஸ்மித்தின் டெஸ்ட் ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?

947. பிராட்மேனைத் தவிர்த்து கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் இந்த ரேட்டிங்கை தொட்டது கிடையாது. புரியும்படி சொன்னால், டெஸ்ட் போட்டிகளில் இப்போது பிராட்மேனுக்கு அடுத்ததாக சிறந்த வீரராக இருப்பவர் ஸ்மித் மட்டுமே.

என்னயா.. ஒரே ஆஸ்திரேலியா புகழ் பாடலா இருக்கே-னு நினைப்பவர்களுக்கு நமது இந்திய வீரர்களின் ரேட்டிங் குறித்த தகவல் இதோ.

இதில் முதலிடத்தில் இருப்பவர் சுனில் கவாஸ்கர். இவரது ரேட்டிங் 916. அடுத்ததாக

விராட் கோலி – 900
சச்சின் – 898
டிராவிட் – 892
புஜாரா – 888
கம்பீர் – 886
விஸ்வநாத் – 871
ஹசாரே – 869
சேவாக் – 866
வெங்கசர்க்கர் – 837

விராட் கோலி பெற்றுள்ள அதிகபட்ச ரேட்டிங் இதுதான்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close