இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்… இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன்!

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கஸூமசா சகாயை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் நடந்து வந்தது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென்கொரியாவின் கோன் வான் ஹோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரர் கஸூமசா சகாயை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 21-11 21-19 என்ற நேர் […]

Srikanth

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கஸூமசா சகாயை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் நடந்து வந்தது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென்கொரியாவின் கோன் வான் ஹோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரர் கஸூமசா சகாயை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 21-11 21-19 என்ற நேர் செட்களில் கஸூமசா சகாயை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார்.

Web Title: Indonesia open super series kidambi srikanth kazumasa sakai

Next Story
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி; இந்தியா படுதோல்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X