11வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பிக்கும் இந்த ஐபிஎல் திருவிழா, மே மாதம் 27ம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடைபெற உள்ளது.
லீக் போட்டிகள் மே 20ம் தேதியோடு முடிவடைகிறது. மே 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி 4 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள எட்டு அணிகளுக்கும் முழுமையாக கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு,
சென்னை சூப்பர் கிங்ஸ் - மகேந்திர சிங் தோனி
டெல்லி டேர்டெவில்ஸ் - கெளதம் கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - தினேஷ் கார்த்திக்
கிங்ஸ் XI பஞ்சாப் - ரவிச்சந்திரன் அஷ்வின்
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் ஷர்மா
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - விராட் கோலி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்டீவ் ஸ்மித்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர்
ஆறு இந்திய கேப்டன்களுடனும், இரண்டு ஆஸ்திரேலிய கேப்டன்களுடனும் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.