சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card

CSK vs KKR Live Cricket Score Card

2018 ஐபிஎல் இப்போது தான் ஹாட்டான கிளைமேட்டுக்கு மாறியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் மாஸ் எழுச்சி, இந்த ஹாட் கிளைமேட்டை நாளை தொடங்கவுள்ள ‘அக்னி நட்சத்திரம்’ ரேஞ்சுக்கு உருமாற்றியிருக்கிறது.

இரண்டு டீமின் பெர்ஃபாமன்ஸ் ‘பெட்டர்’ என்று சொல்லலாம்.. சிஎஸ்கே மற்றும் எஸ்ஆர்ஹெச்.

ஒரு டீமின் பெர்ஃபாமன்ஸ் ‘சூப்பர்’ எனலாம்.. கிங்ஸ் XI பஞ்சாப்.

இதர அணிகளில் ஒன்றைத் தவிர, நான்கு அணிகளுக்கு இடையே ஒருவரையொருவர் யார் முந்துவது என்ற போட்டி கடுமையாக ஏற்பட்டுள்ளது. இப்போது தான் அந்த போட்டி, முன்பு சொன்னது போல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த நான்கு அணிகளின் பெயரைச் சொல்வதை விட, அந்த ஒரு எக்செப்ஷன் டீமின் பெயரை சொல்வது ஈஸி அல்லவா!.

மும்பை இந்தியன்ஸ்..

இந்த ஐபிஎல்-ல் இவர்களால் மட்டும் தான் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. எட்டு போட்டிகளில் ஆறு தோல்வி. கிட்டத்தட்ட தொடரில் இருந்து எலிமினேட் ஆகிறது என்று கூட சொல்லலாம். ஸோ, இவர்கள் இனி லிஸ்டில் இருப்பது கடினம்.

இந்த நிலையில், இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும், தோனி & கோ-வின் வெற்றி மந்திரமாக பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் இன்னிங்ஸ் பெர்ஃபாமன்ஸ்கள் தான். ராயுடு கன்சிஸ்டன்ட்டாக எல்லா மேட்சும் அடிக்க, தோனி அனல் பறக்க ஆட்டத்தை முடித்து வைக்கிறார். இப்போ அவுட்டாவாரோ, அப்போ அவுட்டாவாரோ-னு பயந்தாலும், தொடக்க வீரர் வாட்சனின் அதிரடி அணிக்கு பலம்.

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், ரெய்னா இப்போ பெட்டர் ஆகியிருக்கார் என்றே தெரிகிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு பிராவோவுக்கு பேட்டிங்கில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், சிக்ஸர்களை தூக்க அவர் ரெடி!. ஓகே. இதுவெல்லாம் சென்னை அணியின் பலம். சிம்பிளா பேட்டிங் தான் பலம்-னு சொல்லி இருக்கலாம்-ல!! சரி விடுங்க!!

பவுலிங்…. பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. ஆனால், லுங்கி ங்கிடியின் வருகை நிச்சயம், அணிக்கு பெரும் பலம் தான்.

அடுத்ததாக, கொல்கத்தா அணி!.

எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகள். போராடுகிறார்கள். ஆனால், எதற்காக போராடுகிறோம் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறார்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள். இளம் வீரர் ஷுப்மன் கில் மற்றும் ‘வாரியர்’ ஆண்ட்ரூ ரசல் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

அதேசமயம், குல்தீப் யாதவ் மற்றும் ராபின் உத்தப்பாவிடம் சென்னை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த நால்வரையும் சமாளித்துவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என நம்பலாம்.

இந்நிலையில், இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கும் சென்னை vs கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close