கடந்த ஏப்ரல் 10ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர், தற்போது பாதி கிணற்றை தாண்டியுள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அணிகளின் நிலைமையோ, மிகவும் கவலைக்கிடமாக உள்ளன. அப்படியொரு, அணியாக உள்ளது ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பையில் நடந்த முதல் போட்டியில், சென்னை அணிக்கு எதிராக ஏதோ இறுதிப் போட்டி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தது டீம் மும்பை. போட்டியை நேரில் பார்த்த அம்பானி குடும்பம் தான் இந்த பில்டப்பிற்கு முக்கிய காரணம். ஆனால், அதன்பின் பெங்களூரு அணியை மட்டும் வீழ்த்தியிருக்கும் மும்பை, இதுவரை விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டியில் தோற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அதேசமயம், 'சென்னை சீனியர் கிங்ஸ்' என்று கிண்டலடிக்கப்பட்ட தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியோ, 6 போட்டிகளில் ஐந்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை டீம், சீனியர் டீம் என்பதோ உண்மை தான். ஆனால், ரில்சட்? மிரட்டலாக உள்ளதே!. ராயுடு, வாட்சன், ரெய்னா, தோனி, பிராவோ என அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக, யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தோனியின் அதிரடி ஆட்டம் எதிரணிகளை சிதறடித்து வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு, எதிரணி கேப்டன்கள் தோனியின் பேட்டிங்கை கண்டு பயப்பட ஆரம்பித்து இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இன்று தனது 150வது போட்டியில் தல தோனி விளையாடவிருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக வெற்றி பெற்றிருப்பவர் தோனி மட்டுமே. சக்சஸ் ரேட் 59.45%. வேறு எந்த ஐபிஎல் கேப்டனுக்கும் இந்த சக்சஸ் ரேட் கிடையாது.
The return fixture with MI would be #Thala150 as skipper in IPL! #WhistlePodu for the most successful captain in #VIVO IPL. #Yellove #CSKvMI ???????? pic.twitter.com/mYSa1Q2agM
— Chennai Super Kings (@ChennaiIPL) 28 April 2018
இந்த நிலையில், சென்னையும் மும்பையும் இரண்டாவது முறையாக இன்று மோதுகின்றன. புனேவில் இரவு எட்டு மணிக்கு தொடங்கும் இப்போட்டியின் Live Cricket ScoreCard உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டு களிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.