ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.14) ஈடன் கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கொல்கத்தாவை வீழ்த்தியது.
Live Blog
IPL 2019: CSK vs KKR
கொல்கத்தா மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது. 19.4 வது பந்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து சென்னை வெற்றிப் பெற்றது. ரெய்னா 58 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். இந்த சீசனில், இதுவரை எட்டு போட்டிகளில் ஆடியுள்ள சென்னைக்கு இது 7வது வெற்றியாகும்.
14 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. பல யுகங்கள் கழித்து, ரெய்னா இப்போது கொஞ்சம் ஃபார்முக்கு வந்திருப்பது போன்று தெரிகிறது. தோனியும், ரெய்னாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவதைக் கூட 7 ஜென்மங்கள் கழித்து ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது கணிப்பு கண்ணாயிரம் சொன்னது போன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பல்லை இளித்துக் கொண்டு சென்றுவிட்டது. தற்போது தோனியும், ரெய்னாவும் களத்தில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் 18 வது ஓவரை களத்தில் நின்றால் தான், ஏதாவது கற்பனை செய்து பார்க்க முடியும்.
அடிக்கடி கை மாறும் 'சொப்பன சுந்தரி' காரை போல, கைமாறும் பர்பிள் கேப், இப்போது இம்ரான் தாஹிர் வசம் வந்துள்ளது. இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி மொத்தமாக இதுவரை இந்த சீசனில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி, முதலிடம் பிடித்து பர்பிள் தொப்பியை வென்றிருக்கிறார்.
யாரு போட்டாலும் அடிக்குறார்-னு பராசக்தி எக்ஸ்பிரஸ்-ஐ... அதான் நம்ம இம்ரான் தாஹிரை பவுலிங் செய்ய அழைத்தார். முதல் பந்தில் க்ரிஸ் லின் அவுட். 82 ரன்களில் அவர் கேட்ச் கொடுத்து வெளியேற, அதே ஓவரில் களமிறங்கிய ரசல், ஒரு பவுண்டரி, சிக்ஸ் என பறக்கவிட்டு, 10 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
கண்ணா.. நான் இப்பவும் சொல்றேன்.... கொல்கத்தா நிச்சயம் 175-185 அடிக்கும்.
நம்ம பவுலர்ஸ் என்ன தான் கன்டெய்ன் செய்தாலும், அவர்களின் ஹிட்டர்ஸ்கள் அதையும் பவுண்டரிகளாக்கும் வல்லமை படைத்தவர்கள். விக்கெட் வரிசையாக விழுந்தால் மட்டுமே அவர்களது ரன் குவிப்பை தடுக்க முடியும். இல்லையெனில..., நோ சான்ஸ்
என் தமிழ் சொந்தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
இன்றையப் போட்டியில் கொல்கத்தா 170-180 ரன்கள் நிச்சயம் அடிக்கும். ஏனெனில் களம் அப்படியிருக்கு. பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். கொல்கத்தாவில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஹிட்டர்கள் என்பதால், நிச்சயம் 170 அடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மற்ற ஐபிஎல் அணிகள் அனைத்தும் இளம் பேட்ஸ்மேன்களை தொடக்கத்தில் இறக்கிவிட்டு அடிக்க வைத்து ரசித்துக் கொண்டிருக்க, கொல்கத்தா அணியோ இதற்கு விதி விலக்காக உள்ளது.
நடந்து முடிந்த அண்டர் 19 உலகக் கோப்பைத் தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில்-லை 7வது டவுனில் இறக்கி, அவரது கேரியரையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது. கடைசியாக டெல்லியுடன் மோதிய ஆட்டத்தில், அவரை ஓப்பனராக கொல்கத்தா களமிறக்கியது. பட்டாசு போல சரவெடி ஆட்டம் ஆடி அரைசதம் அடித்தார். இப்போது மீண்டும், அவரது டவுன் மாற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights