சென்னை வெற்றி! பல யுகங்களுக்குப் பிறகு ஆட்டத்தை முடித்துக் கொடுத்த ரெய்னா!

CSK vs KKR 2019 Match: சென்னை வெற்றி

IPL 2019, CSK beat KKR

ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.14) ஈடன் கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கொல்கத்தாவை வீழ்த்தியது.

IE Tamil commentary

Indian Premier League, 2019Eden Gardens, Kolkata 06 June 2020

Kolkata Knight Riders 161/8 (20.0)

vs

Chennai Super Kings 162/5 (19.4)

Match Ended ( Day - Match 29 ) Chennai Super Kings beat Kolkata Knight Riders by 5 wickets

Live Blog

IPL 2019: CSK vs KKR

19:42 (IST)14 Apr 2019
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

கொல்கத்தா மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது. 19.4 வது பந்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து சென்னை வெற்றிப் பெற்றது. ரெய்னா 58  ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். இந்த சீசனில், இதுவரை எட்டு போட்டிகளில் ஆடியுள்ள சென்னைக்கு இது 7வது வெற்றியாகும். 

19:39 (IST)14 Apr 2019
19.4

ஜடேஜா - 2 ரன்கள்

19:38 (IST)14 Apr 2019
19.3

ரெய்னா - 1 ரன்

19:38 (IST)14 Apr 2019
19.2

ஜடேஜா - 1

19:37 (IST)14 Apr 2019
19.1 - பியூஷ் சாவ்லா

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை...

ஜடேஜா - 4

19:31 (IST)14 Apr 2019
நாரையோ, கொக்கோ

ஆத்தா... தோனி நரைன் ஓவருல அவுட்டாம்...

நாரையோ, கொக்கோ போடா அங்குட்டு...

ரெய்னா நிக்குறான் வெற்றி இங்குட்டு...

19:24 (IST)14 Apr 2019
ரெய்னா 50

36 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல்-ல் ஒன்பது இன்னிங்ஸ் கழித்து அரைசதம் அடித்திருக்கிறார். 

19:22 (IST)14 Apr 2019
தோனி அவுட்

ஐபிஎல் சகாப்தத்திலேயே, சுனில் நரைன் பந்தை தோனி அடித்ததே கிடையாது. அதை, இப்போதும் தெள்ளத் தெளிவாக நிரூபித்து இருக்கிறார். சுனில் நரைன் ஓவரில் தோனி 16 ரன்கள் எல்பி ஆகி அவுட். 

19:14 (IST)14 Apr 2019
109-4

14 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 109  ரன்கள் எடுத்துள்ளது. பல யுகங்கள் கழித்து, ரெய்னா இப்போது கொஞ்சம் ஃபார்முக்கு வந்திருப்பது போன்று தெரிகிறது. தோனியும், ரெய்னாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவதைக் கூட 7 ஜென்மங்கள் கழித்து ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

19:06 (IST)14 Apr 2019
புயல் சீண்டி பார்த்து இருக்கியா?

இந்த பில்டப் தல தோனிக்கு தான். கடந்த ராஜஸ்தான் ஆட்டத்தைப் போலவே, இப்போட்டியிலும் தொடக்கத்திலேயே அடித்து ஆடி வருகிறார் கேப்டன் தோனி... ஆனால், முடிவு அதே போன்று வெற்றியாக மாறுமா?

19:01 (IST)14 Apr 2019
தல, சின்ன தல களத்தில்...

நமது கணிப்பு கண்ணாயிரம் சொன்னது போன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பல்லை இளித்துக் கொண்டு சென்றுவிட்டது. தற்போது தோனியும், ரெய்னாவும் களத்தில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் 18 வது ஓவரை களத்தில் நின்றால் தான், ஏதாவது கற்பனை செய்து பார்க்க முடியும்.

18:55 (IST)14 Apr 2019
ஜாதவ் அவுட்

பியூஷ் சாவ்லா பந்தில் இப்படி திணறினால், உலகக் கோப்பைக்கு சென்று என்ன செய்ய முடியும்?

பியூஷ் ஓவரில், 20 ரன்களில் கேதர் ஜாதவ் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

18:49 (IST)14 Apr 2019
ராயுடு அவுட்

சாவ்லா ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த அம்பதி ராயுடு, ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பதால், உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

ம்ஹூம்... சிஎஸ்கே இனி தேறுவது ரெம்ப கஷ்டம்....

18:40 (IST)14 Apr 2019
தமிழில் ஃபீல்ட் செட் செய்யும் தினேஷ்

களத்தில் தமிழில் பேசி நம்ம தினேஷ் கார்த்திக் பீல்டிங் செட் செய்து வருகிறார். அங்கு, யாரோ ஒரு ஃபீல்டரிடம் உள்ள வா.. ரெடியா இரு என்று சொல்வது மைக்கில் பதிவானது. 

யாரை சொல்லி இருப்பாப்ள?

18:33 (IST)14 Apr 2019
47-2

சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரெய்னா, ராயுடு..

18:25 (IST)14 Apr 2019
டு பிளசிஸ் அவுட்

சுனில் நரைன் ஓவரில், டு பிளசிஸ் 24  ரன்களில் போல்டானார். என்ன நினைச்சிக்கிட்டு இப்போ நீங்க சுத்துநீரு? பந்து டர்ன் ஆகும்-னு தெரியாதா? என்னய்யா.. சின்னப் புள்ள மாதிரி அவுட்டாகியிருக்க?

18:18 (IST)14 Apr 2019
கிரேட் எஸ்கேப் ரெய்னா...

நம் கணிப்பு கண்ணாயிரம் அண்ணன் சொன்னது நிஜமாகிக் கொண்டே இருக்கிறது. யார் யாரெல்லாம் ஃபார்மில் இல்லையென்று சொன்னாரோ, அதில் வாட்சன் முதலில் அவுட்டாக, ரெய்னாவும் எல்பி ஆகியிருக்க வேண்டியது. ஆனால், ஜஸ்ட் மிஸ் ஆகி ரிவியூவில் தப்பினார். 

18:13 (IST)14 Apr 2019
வாட்சன் அவுட்

வாட்டோ அவுட்டோ... 6 ரன்களில் கர்னே ஓவரில் ஷேன் வாட்சன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

வாட்சன் புவர் ஃபார்ம் கண்டினியூஸ்...

18:11 (IST)14 Apr 2019
0,4,4,4,4,0

ஆந்த்ரே ரசல் வீசிய 3வது ஓவரில், டு பிளசிஸ் அடித்த ரன்கள் இவை. ரசல் வேற நொண்டி, நொண்டி ஓடியாந்தார்.

முடியாத ஆளை வைச்சு ஏன்ப்பா ஆடுறீங்க!!?

அவ்ளோ வெறி... ஜெயிக்கணும்-னு... ம்ம்ம்ம்

18:05 (IST)14 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

பெரிய டார்கெட் கிடையாது தான். ஆனால், நம்மிடம் உள்ள பிரச்சனை வாட்சன், ரெய்னா, ராயுடு, ஜாதவ் ஃபார்மில் இல்லாது தான். கடந்த போட்டியில் தான் ராயுடு இந்த சீசனில் முதல் அரைசதம் அடித்திருக்கிறார். ஸோ, வெற்றி, தோல்வியை இப்போது தீர்மானிக்க முடியாது. 

17:55 (IST)14 Apr 2019
களத்தில் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் ஓப்பனர்ஸ் ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களத்தில்...

2 பவுண்டரிகள் உட்பட பிரசித் வீசிய முதல் ஓவரில் 10 ரன்கள்

17:42 (IST)14 Apr 2019
161-8

எங்கேயோ போன மாரியாத்தா.. என் மேல ஏறாத்தா... என்பது போல, 190க்கும் மேல் ஸ்கோர் போகும் என எதிர்பார்த்த கொல்கத்தா அணி, தேவையில்லாத அதிரடியால் 161 ரன்களில் அடங்கியது. கிட்டத்தட்ட 30-40 ரன்கள் குறைவாக எடுத்துள்ளது. 

17:41 (IST)14 Apr 2019
20.0

குல்தீப் - ரன் அவுட்

17:41 (IST)14 Apr 2019
20.0

குல்தீப் - ரன் அவுட்

17:39 (IST)14 Apr 2019
19.5

ஷுப்மன் கில் - அவுட்

17:39 (IST)14 Apr 2019
19.4

ஷுப்மன் கில் - 0

17:38 (IST)14 Apr 2019
19.3

ஷுப்மன் கில் - 2

17:37 (IST)14 Apr 2019
19.2

ஷுப்மன் கில் - 0

17:37 (IST)14 Apr 2019
19.1

சாவ்லா - 1

17:37 (IST)14 Apr 2019
19.1 (ஷர்துள் தாக்கூர்)

பியூஷ் சாவ்லா - வைட்

17:26 (IST)14 Apr 2019
கார்த்திக் அவுட்

தினேஷ் கார்த்திக் தான்... வேற யாரும் நவரச நாயகன் கார்த்திக்கா!! ஷர்துள் தாகூர் ஓவரில், 18 ரன்களில், டு பிளசிஸ்-ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கொல்கத்தா கேப்டன்... 

என்ன ஷாருக்.. இப்படி ஆயிடுச்சே!!

17:25 (IST)14 Apr 2019
பர்பிள் கேப் இப்போ தாஹிருக்கு!

அடிக்கடி கை மாறும் 'சொப்பன சுந்தரி' காரை போல, கைமாறும் பர்பிள் கேப், இப்போது இம்ரான் தாஹிர் வசம் வந்துள்ளது. இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி மொத்தமாக இதுவரை இந்த சீசனில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி, முதலிடம் பிடித்து பர்பிள் தொப்பியை வென்றிருக்கிறார். 

17:14 (IST)14 Apr 2019
இரண்டு லட்டூஸ்-ஐ காலி செய்த தாஹிர்

யாரு போட்டாலும் அடிக்குறார்-னு பராசக்தி எக்ஸ்பிரஸ்-ஐ... அதான் நம்ம இம்ரான் தாஹிரை பவுலிங் செய்ய அழைத்தார். முதல் பந்தில் க்ரிஸ் லின் அவுட். 82 ரன்களில் அவர் கேட்ச் கொடுத்து வெளியேற, அதே ஓவரில் களமிறங்கிய ரசல், ஒரு பவுண்டரி, சிக்ஸ் என பறக்கவிட்டு, 10 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

17:05 (IST)14 Apr 2019
ஹாட்ரிக் சிக்ஸ் விளாசிய லின்

ரவீந்திர ஜடேஜா வீசிய 14வது ஓவரில், முதல் மூன்று பந்தில் பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்க விட்டு, அலற விட்டிருக்கிறார் க்ரிஸ் லின். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள்.

என்னா அடி... மனுஷன் செஞ்சுரியை நோக்கி!

17:03 (IST)14 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

கண்ணா.. நான் இப்பவும் சொல்றேன்.... கொல்கத்தா நிச்சயம் 175-185 அடிக்கும். 

நம்ம பவுலர்ஸ் என்ன தான் கன்டெய்ன் செய்தாலும், அவர்களின் ஹிட்டர்ஸ்கள் அதையும் பவுண்டரிகளாக்கும் வல்லமை படைத்தவர்கள். விக்கெட் வரிசையாக விழுந்தால் மட்டுமே அவர்களது ரன் குவிப்பை தடுக்க முடியும். இல்லையெனில..., நோ சான்ஸ்

16:56 (IST)14 Apr 2019
ராபி அவுட்

இம்ரான் தாஹிர் வீசிய அதே ஓவரில், ராபி உத்தப்பாவும் சிக்ஸ் அடிக்க நினைத்து, மீண்டும் டு பிளசிஸ்-ன் பாய்பிடி கேட்சில் 0 ரன்னில் வெளியேறினார். 

16:50 (IST)14 Apr 2019
ராணா.... போச்ச்சே கண்ணா!!

நடப்பு சீசனின் தொடக்கத்தில் காட்டிய அந்த நிலைத் தன்மை இப்போது ராணாவிடம் மிஸ்ஸிங். இம்ரான் தாஹிர் ஓவரில், 21 ரன்களில் நிதிஷ் ராணா சிக்ஸ் லைனில், டு பிளசிஸ்-சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

16:41 (IST)14 Apr 2019
க்ரிஸ் லின் 50

நடப்பு சீசனில் இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார் க்ரிஸ் லின். போன வாரம் சேப்பாக்கில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 0 ரன்னில் வெளியேறிய லின், இப்போது அரைசதம் அடித்திருக்கிறார். 

16:37 (IST)14 Apr 2019
கொஞ்சம் யோசிங்க கொல்கத்தா...

சுனில் நரைன் அவுட்டான பிறகாவது ஷுப்மன் கில்-க்கு வாய்ப்பு தந்திருக்கலாம். பயமறியா வீரரின் அடியை கொல்கத்தா வேஸ்ட் செய்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நிதிஷ் ராணா களத்தில்....

16:34 (IST)14 Apr 2019
58-1

7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா 

16:15 (IST)14 Apr 2019
4,6,4,0,0,0

சாஹர் வீசிய 2வது ஓவரில் க்ரிஸ் லின் அடித்த ரன்கள் இவை. மூன்று பவுண்டரிகளும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அடிக்கப்பட்டவை. 

நா அப்பவே சொன்னேன்... அந்த க்ரிஸ் லின் டேஞ்சர்-னு.. இப்பவும் சொல்றேன்.. உஷார்

16:11 (IST)14 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

என் தமிழ் சொந்தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

இன்றையப் போட்டியில் கொல்கத்தா 170-180 ரன்கள் நிச்சயம் அடிக்கும். ஏனெனில் களம் அப்படியிருக்கு. பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். கொல்கத்தாவில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஹிட்டர்கள் என்பதால், நிச்சயம் 170 அடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

16:06 (IST)14 Apr 2019
க்ரிஸ் லின்-னை சாதாரணமான நினைச்சுடாதீங்கோ!!

எல்லோரும் இந்த சீசனில் ரசல் அதிரடியை மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில், க்ரிஸ் லின் ஃபார்மில் இல்லை. அந்த மனுஷன் மட்டும் அடிக்க ஆரம்பிச்சா.... 

பீ கேர்ஃபுல் தோனி.... உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை!

15:59 (IST)14 Apr 2019
யய்யாடி.... எவ்ளோ மஞ்சக் கொடி!!

போட்டி நடைபெறும் இடம் சென்னையா, கொல்கத்தாவா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் போட்டி வைத்தால் கூட, சிஎஸ்கே ரசிகர்கள் பட்டையைக் கிளப்புவார்கள் போல...

15:51 (IST)14 Apr 2019
ஷுப்மன் கில் வாழ்க்கையில் விளையாடும் கேகேஆர்

மற்ற ஐபிஎல் அணிகள் அனைத்தும் இளம் பேட்ஸ்மேன்களை தொடக்கத்தில் இறக்கிவிட்டு அடிக்க வைத்து ரசித்துக் கொண்டிருக்க, கொல்கத்தா அணியோ இதற்கு விதி விலக்காக உள்ளது. 

நடந்து முடிந்த அண்டர் 19 உலகக் கோப்பைத் தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில்-லை 7வது டவுனில் இறக்கி, அவரது கேரியரையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது. கடைசியாக டெல்லியுடன் மோதிய ஆட்டத்தில், அவரை ஓப்பனராக கொல்கத்தா களமிறக்கியது. பட்டாசு போல சரவெடி ஆட்டம் ஆடி அரைசதம் அடித்தார். இப்போது மீண்டும், அவரது டவுன் மாற்றப்பட்டுள்ளது. 

15:39 (IST)14 Apr 2019
கொல்கத்தா பிளேயிங் XI

சுனில் நரைன், க்ரிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(w/c), ஆந்த்ரே ரசல், ஷுப்மன் கில், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஹேரி கர்னே

15:37 (IST)14 Apr 2019
சென்னை பிளேயிங் XI

ஷேன் வாட்சன், டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி(w/c), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், மிட்சல் சான்ட்னர், ஷர்துள் தாகூர், இம்ரான் தாஹிர்

15:35 (IST)14 Apr 2019
சென்னை பவுலிங்

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

Web Title:

Ipl 019 csk vs kkr live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close