IPL 2019 CSK vs KKR: ஐபிஎல் தொடரில், இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
Web Title:Ipl 2019 csk vs kkr live cricket score updates
17.2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 6 போட்டிகளில் 5 வெற்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தைப் பிடித்தது.
கர்னே ஓவரில், ஒரு ஃப்ரீ ஹிட் கிடைக்க, டு பிளசிஸ் அதை பவுண்டரியாக்க, அப்போதும் தூங்கிய ரசிகர்கள் எழும்பவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
31 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த ராயுடு, சாவ்லா ஓவரை, அக்ராஸ் தி லைன் அடிக்கப் போய் ராணாவிடம் கேட்ச் ஆனார். அடுத்து தோனி களமிறங்குவர் என்று எதிர்பார்த்தால், ஜாதவ் இறங்கியதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்.
14 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. 36 பந்துகளில் 32 ரன்கள் அடிக்க வேண்டும் சிஎஸ்கே...
வேற என்னங்க பண்ண சொல்றீங்க!! ஏதாச்சும் புடிச்ச சாங் இருந்தா சொல்லுங்க... டெடிகேட் பண்றோம்...
தயவு செஞ்சு பிட்சை மாத்துங்கயா... தோனியே வேற டீமுக்கு மாறிடப் போறார்!!
இந்தப் போட்டிக்காக டிக்கெட் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களும் இப்போது குளிர்ந்து கொண்டிருக்கும். அதேசமயம், ரத்தம் சிந்தி டிக்கெட் எடுத்து, இவ்ளோ மொக்கையான ஒரு மேட்சை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களையும் நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது.
எலி காயுது சரி... எலி புளுக்க ஏன் காயுது!!?
பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் இதே போன்றதொரு பிட்ச் தான். இப்போதும் அப்படியொரு பிட்ச் தான். வெறுக்கத்தக்க பிட்ச் என்று சொல்லலாம். ஏற்கனவே, நள்ளிரவு 12 மணி கடந்து செல்லும் போட்டிகளால், ரசிகர்கள் முனங்கிக் கொண்டிருக்க, இப்படி நள்ளிரவை நோக்கி இவ்வளவு மந்தமான மேட்ச் நடந்தால், பிளேயர்ஸ் கூட தூங்கி விடுவார்கள்.
எட்டு ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளசிஸ், ராயுடு களத்தில்... இப்போ வரைக்கும் ஒன்னும் டென்ஷன் இல்ல.. ஆனா, கவனமாக ஆட வேண்டியது அவசியம்...
இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே, சென்னை அணியில் இருக்கிறாரா, இல்லையா என்ற மோடிலேயே இருப்பவர் அம்பதி ராயுடு மட்டுமே. கடந்த சீசனின் ஹீரோ.. இந்த சீசனில், 'கஹா ஹை' தான். இந்த மேட்சுலயாவது, ரொம்ப நேரம் களத்தில் அடிச்சு, தட்டி தட்டி சிங்கிள் ஓடி, ஃபார்முக்கு வந்தால், ஐபிஎல்-க்கு மட்டுமல்ல, உலகக் கோப்பையிலும் நமக்கு நல்லது தான்!
எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு!
பிரசித் கிருஷ்ணா ஓவரில், ஒரு அருமையான ஃப்ரீஹிட் வாய்ப்பு... நம்ம ராயுடுவுக்கு... என்ன பண்ண போறார்? பவுண்டரி...
லோ ஸ்கோர் கேம்... அடிக்க வேண்டாம்.. சும்மா ஓவருக்கு 5 அடிச்சு கூட ஜெயிச்சிடலாம்-னு சொன்னா, ஏம்பா புரிஞ்சிக்க மாட்டேங்குற!? சுனில் நரைன் ஓவரில், சிக்ஸ் அடிக்க முயன்ற ரெய்னா, பியூஷ் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் வெளியேறினார்.
இப்பவும் சொல்றேன்... சென்னை தோற்க இப்போ கூட வாய்ப்பிருக்கு!
நம்ம ரெய்னா, இறங்கிய முதல் ஓவரிலேயே சுனில் நரைன் ஓவரில், லாங் ஆஃப்-ல் தூக்கி சிக்ஸ் அடிக்க, அந்த கேலரியே அதிர்ந்தது...
தொடக்கத்திலேயே அதிரடியாக அடித்த ஷேன் வாட்சன், சுனில் நரைனின் எக்ஸ்ட்ரா பவுன்ஸில் 17 ரன்களில், சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
வாட்சனுக்கு நல்லா அடிக்க தெரியுமே தவிர, பந்தை தடுத்து ஆடுவதில் அவர் பெரிய எக்ஸ்பர்ட் கிடையாது. ஆனால், டு பிளசிஸ் அதில் கை தேர்ந்தவர். ஸோ, வாட்சன் அடிக்க, டு பிளசிஸ் சிங்கிள் தட்டினாலே போதும்.. தேவையில்லாத ஷாட்கள் அடித்தால், மோசம் போவதை யாராலும் தடுக்க முடியாது.
கொல்கத்தா சார்பில் முதல் ஓவரை பியூஷ் சாவ்லா வீசுகிறார். ஆரம்பமே ஸ்பின் அட்டாக் தான். ஏன்னா, பனி தான் முக்கிய காரணம். அதனால் தான் ஸ்பின்னர்களுக்கு முதல் பணி. ஏனெனில், பந்தும் டர்ன் ஆகாது. பிடிக்கவும் முடியாது.
கண்ணாயிரம் - நிச்சயம் இது சென்னைக்கு கடினமான ஸ்கோர் தான்...
என்னண்ணே சொல்றீங்க?
கண்ணாயிரம் - ஆமா.. பா!. சென்னை மிக மிக கவனமாக விளையாட வேண்டும். தூக்கியே அடிக்கத் தேவையில்லை. இந்த மேட்சுல ஜெயிக்கணும்-னா பொறுமையா விளையாண்டா போதும். முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் அடிச்சாலே, சென்னைக்கு அது பெரிய சாதனை தான். இருப்பினும், நாம முன்னாடியே சொன்னது மாதிரி, சுத்தமா கேகேஆர் பவுலர்ஸ்களுக்கு பந்தை Grip-ஆக பிடிப்பது கடினமாக இருக்கும் என்பதால், அவர்களின் யார்க்கர் முயற்சி, ஃபுல்டாஸாக மாற வாய்ப்பிருக்கு.
நாக்குத் தள்ளி 50 அடித்து, ஆந்த்ரே ரசல் 108 ரன்கள் அடிச்சுக் கொடுத்ததற்கே கொல்கத்தா ஓனர்கள் அவரை தனியாக கவனிக்க வேண்டும். ஒட்டுமொத்த கொல்கத்தாவே சரண்டராக, கடைசி வரை களத்தில் நின்று 44 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருப்பது ரியலி, ரியலி கிரேட்!
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டி இதே சேப்பாக் மைதானத்தில் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் நடந்த போட்டியை நம் மறந்தாலும், ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 2000 ரூவா கொடுத்து டிக்கெட் வாங்கினா, 70 ரன்னு அடிக்குறீங்களே... நல்லாவே இருக்க மாட்டீங்க-டானு பல ரசிகர்கள் சாபம் விட்டுச் சென்ற போட்டி இது. அப்போது இருந்த பனி தாக்கம் இன்றும் இருக்கிறது. ஸோ, கொல்கத்தா 100 ரன்கள் அடித்தாலே, சென்னைக்கு அது டஃப் தான்.
ரவீந்திர ஜடேஜா ஓவரில் பிரசித் கிருஷ்ணா அவுட்.. ரசல் எதிர்முனையில் நிற்க, மற்ற வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட்டாக, சிஎஸ்கே ரசிகர்களே, 'இனி யாரும் அவுட்டாகக் கூடாது. வாங்குன டிக்கெட்டுக்கு ரசல் அடியையாவது பார்க்க விடுங்கடா' என வேண்டத் துவங்கிவிட்டனர்.
பேட் செய்த குல்தீப், ரசலை ஸ்டிரைக் கொண்டு வர அவசர சிங்கிள் எடுக்க, ஹர்பஜன் ரன் அவுட் செய்ய, அதே வேகத்தில் பெவிலியன் நோக்கி ஓடினார் குல்தீப். வெல் ரன்னிங்... வெல் ரன்னிங்...
கண்ணாயிரம் - என்னப்பா ஆச்சு உனக்கு? இன்னைக்கு உன் கமெண்ட்ரி ரொம்பவே மொக்கையா இருக்கு? உடம்பு கிடம்பு சரி இல்லையா!
அண்ணே. சாவ்லா ஸ்டெம்பிங்.. அவுட்...
கண்ணாயிரம் - நா கேட்டதுக்கு பதில் சொல்லப்பா...
அட அதை விடுங்கண்ணே...
கொல்கத்தா 15.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
இம்ரான் தாஹிர் வீசிய 12.2வது பந்தில், ஆந்த்ரே ரசல் ஒரு மெகா ஷாட் அடிக்க, பந்து மேகத்தை கிழித்து மேலே சென்று, அங்கு சென்றுக் கொண்டிருந்த ஏரோபிளேனை டச் செய்து கீழே இறங்கி வர, தலைக்கு பின்னால் பந்தே கேட்சை தவறவிட்டார் பஜ்ஜி பாய்...
இனி ரசல் தான் அந்த டீமை காப்பாற்றனும். இம்ரான் தாஹிர் ஓவரில், ஷுப்மன் கில் ஸ்டெம்பிங் செய்யப்பட, 9 ரன்களில் அவர் வெளியேறினார். 49/6 கொல்கத்தா
இம்ரான் தாஹிர் 9வது ஓவரில், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில், ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். என்னப்பா இது சென்னை பிள்ளைக்கு வந்த சோதனை!
8 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா நான்கு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. மண்ணின் மைந்தன் தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில் களத்தில்
ஓவருக்கு ஓவர் விக்கெட் எடுக்கணும்-னு மும்பையில் தீபக் சாஹர் மாந்திரீகம் செஞ்சிருப்பார்-னு நினைக்கிறேன். போடுற எல்லா ஓவர்லயும் மனிதர் விக்கெட் எடுத்துக் கொண்டிருக்கிறார். ராபின் உத்தப்பா அவுட். 11 ரன்களில் டீப் மிட் விக்கெட்டில் கேதர் ஜாதவ்விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் உத்தப்ஸ்.
சிஎஸ்கே வீசிய முதல் 3 ஓவரிலும் 3 விக்கெட் விழுந்துள்ளது. தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில், நிதிஷ் ராணா, லெக் சைடில் அடிக்க முயன்று அம்பதி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
வழக்கம் போல், ஹர்பஜன் சிங் ஆரம்பத்துலேயே கலக்க ஆரம்பித்துவிட்டார். ஹர்பஜன் பந்தில் ஒரு சாஃப்ட் ஷாட் அடிக்க முயல, ஷாட் எக்குத்தப்பாக சிக்க, தீபக் சாஹர் கைகளில் பந்து சிக்கிக் கொண்டது. 6 ரன்களில் சுனில் அவுட்.
தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே, ரன் ஏதும் எடுக்காமல் க்ரிஸ் லின் எல்பிடபிள்யூ ஆக, 'பரவாலயே இந்த பையனுக்குள்ளேயும் ஏதோ இருக்கு பாரேன்' மொமன்ட
நாம் - அண்ணே பிரதமர் மோடி கோயம்புத்தூர்-ல பேசிக்கிட்டு இருக்காப்ல.. நீங்க அங்க போகல?
கண்ணாயிரம் - தம்பி, இது கிரிக்கெட். இங்கு அதைப் பற்றி மட்டும் பேசுவோம். நீ என்ன பண்ணாலும் என்னை கோர்த்து விட முடியாது கண்ணா... சரி விஷயத்துக்கு வருவோம்... இன்னைக்கு சென்னை ஜெயிக்கவே வாய்ப்புகள் அதிகம் தம்பி... ஏனெனில், இரவு 09.30க்கு மேல் பனியின் தாக்கம் இருக்கு. சென்னை பவுலிங் சூஸ் பண்ணதால, பனி நமக்கு சாதகமாக இருக்கும். அவங்க பவுலர்ஸ் நிச்சயம் க்ரிப் கிடைக்காமல் ரொம்ப திணறுவாங்க.
சிஎஸ்கே - 65%
கேகேஆர் - 35%
க்ரிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(w/c), ஷுப்மன் கில், ஆந்த்ரே ரசல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னே, பிரசித் கிருஷ்ணா
ஷேன் வாட்சன், டு பிளசிஸ், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி(w/c), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஸ்காட் குக்கெலெய்ஜின
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிராக ஆடினாலும், எதிரணி கேப்டன் தினேஷ் கார்த்திக் சென்னை பையன். மஞ்சள் ஜெர்சி ரசிகர்கள் முன்பு களமிறங்க தயாரா என்று கேட்டதற்கு, "சென்னை ரசிகர்கள் முன்பு, சென்னைக்கு எதிராக ஆடுவது ஒரு கடினமான தருணம் தான். இருப்பினும், நான் அதை ரசிக்க காத்திருக்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.
சென்னை சேப்பாக் இப்போது அதிர்ந்து கொண்டிருக்கிறது. காரணம் நமது தமிழ் பிள்ளை ஒருவர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளப் போகிறார். சென்னை vs கொல்கத்தா... இரு பக்கா அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. ஸோ, லைவ் கமெண்ட்ரிக்காக நான் உங்கள் அன்பரசன் ஞானமணி, கணிப்பு கண்ணாயிரத்துடன்!.