IPL 2019 CSK vs KKR Live Streaming on TV: ஐபிஎல் 2019 தொடரில், இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவிருக்கும் போட்டி, ஏறக்குறைய டாப் 2 அணிகளுக்கு இடையேயானது என்று கூறலாம். புள்ளிப்பட்டியலில் மட்டுமல்ல... கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள டாப் 2 அணிகள் என்ற கணக்கிலும் கூட.
கேகேஆர்
அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... இந்த சீசனில் கம்பீரமாக பயணித்து வரும் அணி இது. டெல்லியுடன் சூப்பர் ஓவர் சென்று தோற்றாலும், 'மீசைய முறுக்கு' கேட்டகிரியில் தான் இந்த அணி உள்ளது. ரசல் தான் மெகா பலம் என்று பலரும் சொல்வார்கள். பட்... கோப்பையை வெல்ல தனி மனிதனின் வாண வேடிக்கை சிக்ஸர்கள் மட்டும் போதாது.
டீம் எஃபோர்ட்,
பேட்டிங் அட்டாக்,
பவுலிங் த்ரெட்,
டெத் பவுலிங் அட்டாக்,
பெஸ்ட் ஃபீல்டிங்,
டீசன்ட் கேப்டன்சி,
ஸ்டாஃப் சப்போர்ட்
என்று இன்னும் சில காரணிகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆச்சர்யம்!. இவையனைத்தையும் இந்த சீசனில் ஏறக்குறைய கொல்கத்தா சமன் செய்துள்ளது. பவுலிங் ஃபெயிலியரானால், பேட்டிங்.... பேட்டிங் ஃபெயிலியரானால் பவுலிங்.... என்று பேலன்ஸ்ட் சைடாக இருப்பதால் தான் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள டாப் 2 அணிகளில் ஒன்றாக இதனை கருத வேண்டியிருக்கிறது.
சிஎஸ்கே
அறிமுகம் தேவையில்லை... விளக்கம் தேவையில்லை... தோனி என்ற ஒரு சாத்திய கேப்டனின் அசாத்திய சிந்தனையும், புத்திசாலித்தனத்தாலும், இருக்கின்ற அணியை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சீசனிலும் தவறாமல் பிளே ஆஃப் வரை முன்னேறிய ஒரே அணி.
கொல்கத்தாவுக்கு நாம் போட்ட லிஸ்ட்டுக்கு சற்றும் குறை வைக்காத அணி. ஆனால், ஒப்பீட்டளவில் கொல்கத்தாவை விட, சற்று வலிமை குறைந்த அணி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பட், தோனியின் ஸ்ட்ராடஜி தான் அல்டிமேட். அது எங்கு, எப்போது, எப்படி செயல்படும்(வெடிக்கும்) என்று யாருக்கும் தெரியாது.
இவ்விரு அணிகளும், இன்று நேருக்கு நேர் மோதுவது உண்மையில் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். வெறும் வாய் வார்த்தைக்காக இதைச் சொல்லவில்லை. போட்டியை பாருங்கள்.. புரிந்து கொள்வீர்கள்.
இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்.