IPL 2019 CSK vs MI: ஐபிஎல் 2019 தொடரில், இன்று இரவு மும்பையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
Live Blog
IPL 2019: Mumbai Indians vs Chennai Super Kings
உலகின் நம்பர்.1 பவுலரான பும்ரா இன்னும் மும்பை அணிக்காக பந்து வீசவில்லை. ஆனால், அதற்குள் சென்னை இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
மலிங்கா, பும்ரா, பெஹ்ரென்டோர்ஃப் ஆகிய இம்மூவருக்கும் சேர்த்து 12 ஓவர்கள்.. மீதமுள்ள 8 ஓவர்களை சிஎஸ்கே சாத்தினால் தான் வெற்றியை பற்றி கனவே காண முடியும்...
இதுவே கள எதார்த்தம்....
என்ன ப்ரோ... 170+ அடிப்பாங்கன்னு சொன்னீங்கோ!! இப்போவே 14 ஓவர் ஆச்சு... 82 தான் ஸ்கோர் தெரியும்-ல?
கண்ணாயிரம் - தம்பி... அவசரப்படாத!! இன்னும் 6 ஓவர் இருக்கு, 36 பந்துகள் இருக்கு... கிரிக்கெட்டில் எது எப்போ வேணும்னாலும் மாறும்!! சின்னப் புள்ள நீ.. பேயாம வேடிக்கை மட்டும் பாரு!!
ஷர்துள் தாக்குரின் 13வது ஓவரில் க்ருனால் பாண்டாவுக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால், ரிவியூ செய்ததில், பந்து பேட்டை முட்டமித்த பின், கால் பேடை அணைத்திருப்பது தெரிய வந்தது. ஸோ, நாட் அவுட்!
எப்போவாவது தாக்குருக்கு விழும் விக்கெட்டில் கூட மண் விழுந்த மொமன்ட்!!!
வேற யாரு சூர்யகுமார் யாதவ் தான்... மும்பை அணியின் ஒன் டவுன் பேட்ஸ்மேன் தான். இந்தியாவின் டி வில்லியர்ஸ் என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லிடலாம். தெரியாத ஷாட்ஸ்களே கிடையாது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், தற்போது களத்தில் நிற்கிறார்.
ஆனால், லக் ஃபேக்டர் இன்னமும் இவருக்கு கைக் கொடுக்காததால், X-ஃபேக்டராக இருக்க முடியாமல் தடுமாறுகிறார்.
ரோஹித் அவுட்டான பிறகு, யுவராஜ் சிங் களத்தில் இறங்கினார். தோனி ஸ்டெம்ப் பின்னர் நிற்க, யுவராஜ் பேட் செய்ய, நமக்கு 'தளபதி' ரஜினி, மம்மூகா நியாபகம்-லாம் வந்துட்டு.. ஆனால், என்ன செய்ய, இம்ரான் தாஹிர் ஓவரில், பந்தை சிக்ஸருக்கு பறக்க விட நினைத்த யுவி தூக்கி அடிக்க, டீப்-ல் நின்றுக் கொண்டிருந்த அம்பதி ராயுடு அதை அலேக்காக கேட்ச் செய்ய, யுவி அவுட்...
ஏதோ ரத்தம் பார்த்தவர்-னு சொன்னாங்க.... பொசுக்கு-னு அவுட்டாக்கிட்டாப்ள!!!
கண்ணாயிரம் - அப்புறம் தம்பி... சென்னை நிலைமை என்ன?
ஏதோ போயிட்டுருக்கு...
கண்ணாயிரம் - ஏன் தம்பி அலுத்துக்குற? ரொம்ப அடி வாங்குறாங்களோ?
அண்ணே... தயவு செஞ்சு ஏதும் சொல்லிடாத...
கண்ணாயிரம் - எனக்குன்னு ஒரு கடமை இருக்குதே பா... சரிவிடு... மும்பை இந்த மேட்சுல 170+ அடிப்பது உறுதி. அப்படி ஒருவேளை 190+ போயிட்டாங்க-னா சிஎஸ்கே ஜெயிக்க 99% வாய்ப்பு கிடையாது!
அண்ணே... நேத்து உங்க கணிப்பை பற்றி ஐநாவுல பேசிக்கிட்டு இருந்தாங்களாம்-னே...
கண்ணாயிரம் - சரி... சரி... அங்க ஓரமா போய் பேசிக்கிட்டு இரு... நா என் வேலையைப் பாக்குறேன்...
இன்றைய மேட்சில் மும்பை ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கு. அதேசமயம், சென்னைக்கும் வாய்ப்பு இருக்கு.. மலிங்கா, என்னைக்குமே சிஎஸ்கே-வுக்கு ஒரு அச்சுறுத்தல் தான். ஸோ, அவர் தான் இன்னைக்கு பும்ராவை காட்டிலும் X-Factor-ஆ இருப்பார்.
ஐபிஎல்-ன் தொடக்க காலக் கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கத்துக்குட்டி அணியாகவே வலம் வந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிப்பதா அல்லது கடைசிக்கு முந்தைய இடத்தை பிடிப்பதா என்பதிலேயே அந்த அணிக்கு மற்ற அணிகளுடன் போட்டி இருந்தது. அதேசமயம், சென்னை முதல் சீசனில் இருந்தே தடுமாறினாலும் பிளே ஆஃப்-க்குள் எப்படியாவது நுழைந்துவிடும்.
2010-ல் எழுச்சி கண்ட மும்பை, இறுதிப் போட்டி வரை முன்னேறியது. நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்க, அங்கு ஆரம்பித்தது இந்த யுத்த வரலாறு. அதன் பிறகு, ஒவ்வொரு தொடரிலும், மும்பையும் சென்னையுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளதே அதற்கு சாட்சி!
சென்னை vs மும்பை மோதல் நமக்கு தெரிந்த ஒன்றே. ஆனால், மும்பையில் விளையாடுவதென்றால் அதில் ஒரு கிக் உண்டு. ஏனெனில், மும்பையை அதன் கோட்டையிலேயே அடிப்பதும், அந்த அணியின் ரசிகர்கள் கண் முன்னே கெத்து காட்டுவதும் அந்த கிக்-கு காரணம். குறிப்பாக, சென்னைக்கு... கடந்த சீசனின் முதல் போட்டி நியாபகம் இருக்கிறதா? தோனி உட்பட, எல்லா அனைத்து பேட்ஸ்மேன்களும் காலியாக, ஒத்த ஆளாக பிராவோ நின்று விளாசியது நினைவிருக்கிறதா?
இன்னைக்கு என்னென்ன கூத்து நடக்கப் போகுதோ?
அன்பான வாக்காளர்களே.. உங்கள் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள நமது வேட்பாளருக்கு....ச்சை..ச்சை... சாரிங்கோ.. பொதுக் கூட்டத்தில் பேசுறதா நினைச்சிட்டேன்....
ஸோ, இன்னைக்கு ஒரு மெகா மேட்ச் காத்திருக்கு.... சென்னை vs மும்பை... நாமாகவே எதிரி-ன்னு முடிவு பண்ணிக்கிட்ட மும்பையோட இன்னைக்கு மோதப் போறோம்... வழக்கம் போல நான் உங்கள் அன்பரசன் ஞானமணி.... வழக்கம் போல உங்க கணிப்பு கண்ணாயிரத்துடன், மேட்ச் பத்தின அப்டேட்ஸ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் கமெண்ட்ரிக்கு தயாரா!!?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights