Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸுக்கே எமனாகிப் போன சேப்பாக் பிட்ச்! மும்பை மெகா வெற்றி!

IPL CSK vs MI: மும்பை வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs MI Live Score, CSK vs MI Playing 11 Live Score

CSK vs MI Live Score, CSK vs MI Playing 11 Live Score

IPL 2019 CSK vs MI: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.26) இரவு 8 மணிக்கு சேப்பாக் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

Advertisment

இத்தொடரில், சென்னை அணியின் நான்காவது தோல்வி இதுவாகும். அதுவும், மும்பை அணியிடம் இரண்டு லீக் போட்டியிலும் சென்னை தோற்றிருக்கிறது.

Live Blog

IPL 2019: CSK vs MI














Highlights

    23:33 (IST)26 Apr 2019

    109 ரன்களுக்கு ஆல் அவுட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

    23:30 (IST)26 Apr 2019

    ஓவருக்கு ஓவர் விக்கெட்

    என்னங்க டா இது... ரெண்டு நாளைக்கு முன்னாடி 175-ஐ சேஸிங் செய்ய முடிந்தது. இன்னைக்கு 150ஐ- கூட சேஸ் செய்ய மிடில... 

    இந்த சேப்பாக் பிட்சை என்னன்னு சொல்றது?

    பும்ரா ஓவரில் சாஹர் 0 ரன்னில் அவுட்

    23:19 (IST)26 Apr 2019

    பிராவோ அவுட்

    17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த பிராவோ மலிங்காவின் ஸ்லோ பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    ஏன்யா... இன்னுமா தூங்கல நீ?

    23:10 (IST)26 Apr 2019

    806

    14 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. 

    களத்தில் பிராவோ, சான்ட்னர்!

    22:56 (IST)26 Apr 2019

    முரளி விஜய் அவுட்

    அவ்ளோ தான்... முடிஞ்சிப் போச்சுல... எல்லாம் கெளம்பு, கெளம்பு.. 

    பும்ரா ஓவரில் முரளி விஜய் 38 ரன்களில் அவுட்

    22:46 (IST)26 Apr 2019

    60-5

    10 ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தோல்வியை நோக்கி... நோக்கியோ...

    துருவ் ஷோரே 5 ரன்களில் அன்குல் ராய் ஓவரில் அவுட்

    22:35 (IST)26 Apr 2019

    கேதர் ஜாதவ் டர்ர்ர்...

    யோவ்.. ஜாதவ்வு... என்னய்யா இப்படி பண்ணி வச்சிருக்க?

    க்ருனால் பாண்ட்யா ஓவரில் 6 ரன்களில் போல்ட்

    22:29 (IST)26 Apr 2019

    ராயுடு அவுட்

    அடப் போங்கப்பா... அம்பதி ராயுடு 0 ரன்னில் க்ருனால் பாண்ட்யா ஓவரில் தனது லெக் ஸ்டம்ப்பை  பறிகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது விக்கெட்டை இழந்தது.

    தள்ளாடுகிறது சிஎஸ்கே!

    22:13 (IST)26 Apr 2019

    வாட்சன், ரெய்னா அவுட்

    நம்ம வாட்சன் மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே லெக் சைடில் ஃபளிக் செய்ய 8 ரன்களில் அவர் கேட்ச் ஆனார். தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 2 ரன்களில் ரெய்னா கேட்ச் ஆக, தள்ளாடுகிறது சிஎஸ்கே.

    21:43 (IST)26 Apr 2019

    156 ரன்கள் இலக்கு

    மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் மட்டும் 17 ரன்கள். 

    இறுதிக் கட்டத்தில் உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் அபாரமாகவே பந்து வீசினர். குறிப்பாக, மிட்சல் சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    21:32 (IST)26 Apr 2019

    ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

    நம்ம சின்னத் தல ரெய்னாவை தான் சொல்றோம். மனிதன் ஏகத்துக்கும் வெயிட் போட்டு இருப்பதால, அவரால வேகமாக ஓடவும் முடியல, பீல்டிங்கும் பண்ண முடில. 

    ரெய்னா, இப்படியே போனா ரொம்ப கஷ்டம்!

    21:30 (IST)26 Apr 2019

    18 மூன்றாக வகுத்தால்?

    அதாவது 18 மூன்றாக வகுத்தால் 6. 

    நம்ம பிராவோ 18வது ஓவரில் அவ்ளோ ரன்னு தாங்க கொடுத்து இருக்காப்ள!!

    அதுவும் பொல்லார்ட், பாண்ட்யாவை வச்சு!

    21:20 (IST)26 Apr 2019

    ரோஹித் அவுட்

    48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, மிட்சல் சான்ட்னர் ஓவரில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    ஹிட்மேனையே அவுட்டாக்கிட்டானப்பா!! யார்யா இவன்?

    21:14 (IST)26 Apr 2019

    டார்கெட் என்ன?

    மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

    கடைசி 5 ஓவர்ல என்ன காட்டு காட்டப் போறாங்களோ!?

    21:06 (IST)26 Apr 2019

    எதுக்கு தம்பி நீ வந்த?

    களமிறங்கிய உடனேயே க்ருனால் பாண்ட்யா 1 ரன்னில், நம்ம 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    21:01 (IST)26 Apr 2019

    வெஸ்ட் இண்டீஸ் டூ வெஸ்ட் இண்டீஸ் அவுட்

    ரோஹித்திக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த எவின் லெவிஸ் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து, சான்ட்னர் ஓவரில் தூக்கி அடிக்க, டீப் மிட் விக்கெட்டில் பிராவோ-விடம் கேட்ச் ஆனார். 

    களத்தில் க்ருனால் பாண்ட்யா...

    20:50 (IST)26 Apr 2019

    பெரிய இலக்கை நோக்கி மும்பை

    மும்பை 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. 

    யாரை வேணும்னாலும் கடைசி வரை நிற்க விடலாம், ஆனால் ரோஹித்தை நிற்கவிட்டால் ஆபத்து சென்னைக்கு தான்.

    20:37 (IST)26 Apr 2019

    வந்தே ஆகணும் இன்னைக்கு...

    ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகிய இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லாம், தங்களை நிரூபிக்கும் வகையில் சிறப்பான இன்னிங்சை காட்டிவிட்டனர். ஏன், நம்ம தவான் கூட இப்போ ஃபார்முக்கு வந்துட்டார். ஆனால், ரோஹித் மட்டும் இன்னமும் நடப்பு சீசனில் தடவிக் கொண்டு தான் இருக்கிறார். 

    சேப்பாக்கில் சேர்த்து அடிப்பாரா ரோஹித்?

    20:26 (IST)26 Apr 2019

    41/0

    5 ஓவர்கள் முடிவில், மும்பை விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. 

    களத்தில் ரோஹித், லெவிஸ்...

    20:17 (IST)26 Apr 2019

    டி காக் அவுட்

    தீபக் சாஹர் ஓவரில் சிக்ஸ், பவுண்டரி என விளாச ஆரம்பித்த டி காக், அவரது 114 கி.மீ வேக ஸ்லோ பந்தில் டாப் எட்ஜ் ஆகி 15 ரன்களில், விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    20:11 (IST)26 Apr 2019

    அவெஞ்சர்ஸ் பார்த்தாச்சா?

    (சென்னை vs மும்பை மேட்சின் போது கிரவுண்டில்...)

    நண்பன் 1: மச்சி, அவன்ஜெர்ஸ் என்ட் கேம் பார்த்துட்டியா? 'தானோஸ்' என்ன ஆனான் தெரியுமா?

    நண்பன் 2: யாரு, நம்ம சூப்பர்ஸ்டார் மருமகன் தானே!

    நண்பன் 1: !!!?

    20:06 (IST)26 Apr 2019

    தோனிக்கு என்ன ஆச்சு?

    ரசிகர்கள் பேராவலோடு மேட்ச் பார்க்க வந்தா, 'தோனி விளையாடல தம்பி'-னு நீங்க பாட்டுக்கு சொல்றீங்க? எங்க தலைக்கு என்னங்க ஆச்சு?

    20:03 (IST)26 Apr 2019

    களமிறங்கியது மும்பை

    நடப்பு சீசனில் மும்பையின் ஆஸ்தான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பான ரோஹித், டி காக் களமிறங்கியுள்ளார். 

    அதிர்கிறது சேப்பாக்!

    19:56 (IST)26 Apr 2019

    சென்னை பிளேயிங் XI

    முரளி விஜய், ஷேன் வாட்சன், சுரேஷ் ராயுடு, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், துருவ் ஷோரே, டுவைன் பிராவோ, மிட்சல் சான்ட்னர், ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

    19:46 (IST)26 Apr 2019

    வணக்கம் சென்னை மக்களே!

    ஃபனி புயல் தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்பிருக்கு-னு வானிலை ஆய்வு மையம் நமக்கு அல்லு ஏற்படுத்தினாலும், சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் இன்று இரவு ஒரு புயல் வீசப் போகிறது. யெஸ்... தட் ஈஸ்.... 

    சென்னை vs மும்பை.

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment