IPL 2019 CSK vs MI Live Streaming on TV: ஃபனி புயல் வருது... சென்னையில் இருந்து எல்லாம் கெளம்பி சொந்த ஊருக்கு
என்னய்யா, மும்பை vs சென்னை மேட்ச்-னு சொல்லிட்டு, புயல் பத்தி பேசுறேன்னு பார்க்காதீங்க!! பாதுகாப்பைத் தாண்டி கிரிக்கெட் ஒன்றும் பெரிதல்ல.
இருந்தாலும், உங்களை அச்சுறுத்த இந்த பதிவல்ல. எச்சரிக்கையே!.
தமிழகத்தை நோக்கி ஃபனி(வங்கதேசம் வைத்த பெயர்) வர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால், வரும் ஏப். 28 முதல் மே 1 வரை தமிழகத்தில் மிக மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க - 50 வருடங்கள் கழித்து ஏப்ரல் இறுதியில் தமிழகத்தை நோக்கி வரும் அந்த புயல் - தமிழ்நாடு வெதர்மேன்
மே 1ம் தேதி சென்னையும், டெல்லியும் சேப்பாக் மைதானத்தில் மோதவிருக்கின்றன. அன்று, சென்னையின் நிலைமையை பொறுத்துதான் மேட்ச் நடக்கும்-னு வச்சுக்கோங்களேன்.
இது ஒருபக்கம் இருக்க, இன்று(ஏப்.26) சென்னை சேப்பாக் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
திருப்பிக் கொடுக்கும் நேரம்
இந்த சீசனில் தோல்வியே அடையாமல் நடைப் போட்டுக் கொண்டிருந்த சிஎஸ்கே அணிக்கு, வான்கடே மைதானத்தில் வைத்து முதல் தோல்வியை பரிசளித்தது மும்பை இந்தியன்ஸ்.
அன்றைய தினம், பவுலிங், பேட்டின் என இரண்டு செக்ஷனிலும் சிஎஸ்கே பூஜ்யமானது.
அன்று மட்டுமல்ல, இன்று வரை நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியில் பேட்டிங்கில் பெரும் பங்கு வகித்துக் கொண்டிருப்பவர் தோனி மட்டுமே என்பதை ரசிகர்களான உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சமீபத்தில் நடந்த ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தான் மரண ஃபார்ம் அவுட்டில் இருந்த ஷேன் வாட்சன், முதன் முறையாக அபார இன்னிங்சை வெளிப்படுத்தி, சென்னையின் வெற்றியை உறுதியை செய்தார். உண்மையில் வாட்சன் கம்பேக் தோனிக்கு மிகப்பெரிய ஆறுதலே!.
ஆனால், ரெய்னா, ராயுடு ஆகியோர் இன்னமும் தங்களின் 'டச்'களை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக ராயுடு சுத்தம்.
இவர்களும் ஃபார்முக்கு திரும்பினால், 'சிஎஸ்கேவுக்கு தான் கப்' என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம்.
பந்துவீச்சில் நாம் குறை சொல்ல பெரிதாக சிஎஸ்கே இடம் தரவில்லை. அதற்கு தோனியின் கேப்டன்ஷிப் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நாம் பதிவிட வேண்டியது அவசியம்.
பட், கம்பேரிட்டிவ்லி மும்பை, சிஎஸ்கே வலுகுறைந்த அணி தான். (போங்க தம்பி! விளையாண்ட ஒவ்வொரு சீனிலும் பிளே ஆஃப் வந்த ஒரே டீமு நாங்க தான்.. போய் அப்படி நின்னு கூவு)
ரோஹித்தின் ஃபார்ம் அவுட் மட்டுமே அவர்களின் பெரும் பின்னடைவு. மற்றபடி, டி காக், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா பிரதர்ஸ், பொல்லார்ட் என பேட்டிங் பீக்கில் உள்ளது.
பவுலிங்கில், நமக்கான மிகப்பெரிய த்ரெட் பும்ரா. தவிர, பெஹ்ரென்டோர்ஃப் மற்றும் மலிங்காவையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால், இவையனைத்தையும் விட, சேப்பாக் பிட்ச் இப்போது என்ன குணாதிசயத்துடன் இருக்கப் போகிறது என்பதே மர்ம தேசத்துக்கு எல்லாம் மர்மமாக உள்ளது.
பெரியளவில் டர்ன் ஆகுமா, பேட்டிங்கிற்கு ஒத்துழைக்குமா என்று நம்ம கேப்டன் தோனியால் கூட சொல்ல முடியாது போல. பிட்சை கணிப்பது அவ்வளவு சிரமமாக உள்ளது.
சென்னை கடற்கரையில் இன்று காலை முதலே பலத்த காற்று வீசுகிறது. ஈரப்பதம் இன்றிரவு அதிகளவில் மைதானத்தில் படியும் என்பதால், Dew Factor இரண்டு அணிகளையும் விட சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்யப் போகிறது என்பது உறுதி!.
CSK vs MI Match: When and Where to Watch?
சென்னை vs மும்பை போட்டியை அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் கண்டுகளிக்கலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் மூலமாக இப்போட்டியை காணலாம்.
தவிர, தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.