Advertisment

IPL 2019: வேண்டாம் ஆர்சிபி! இது மஞ்சள் மாஞ்சா... வார்த்தையை விட்டு சிக்கிடாதீங்க!

அது போன வருஷம்...முடிந்து போன கதை!. இப்போ உள்ள நிலவரத்தைப் பேசுவதே யதார்த்தம்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019 CSK vs RCB MA Chidambaram stadium - IPL 2019: வேண்டாம் ஆர்சிபி! இது மஞ்சள் மாஞ்சா... சிக்கினா காணாம போய்டுவீங்க!

IPL 2019 CSK vs RCB MA Chidambaram stadium - IPL 2019: வேண்டாம் ஆர்சிபி! இது மஞ்சள் மாஞ்சா... சிக்கினா காணாம போய்டுவீங்க!

சென்னை சூப்பர் கிங்ஸ்....

Advertisment

இதுவொரு எமோஷன்... இதுவொரு சென்சிட்டிவ்... இதுவொரு பிராண்ட்... எல்லாத்துக்கும் மேல் இதுவொரு அடிக்ஷன்.

தமிழகத்தில் கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்கள் உண்டு. ஆனால், கிரிக்கெட்டை விரும்பாத ரசிகர்களையும் விரும்ப வைத்த அல்லது கிரிக்கெட் பார்க்க வைத்த ஒரு 'மஞ்சள் மாஞ்சா' இந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த மாஞ்சாவிடம் சிக்கும் எதிரணிகள் அறுந்து விழுவது உறுதி. அதேசமயம், இந்த மஞ்சள் மாஞ்சாவும் அவ்வப்போது சரிந்து விழும். ஆனால், ஒவ்வொரு முறை விழும் போதும், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக உயர பறக்கும். இதுதான் இந்த பிராண்டின் ஸ்பெஷல்.

இந்த மஞ்சள் மாஞ்சாவின் 'கஜா' நம்ம மகேந்திர சிங் தோனி... சிஎஸ்கேவால் தோனி கம்பீரமாக தெரிகிறாரா அல்லது தோனியால் சிஎஸ்கே கம்பீரமாக தெரிகிறதா என்பது இதுவரை விளங்காத மர்மம்.

ஐபிஎல்-ல் சில அணிகள் இதயங்களை வெல்வதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும். ஆனால், இந்த மஞ்சள் மாஞ்சா இதயங்களையும் வெல்லும், கோப்பைகளையும் வெல்லும். இது தலைக்கணம் அல்ல... கள நிலவரம்.

அதற்காக, மற்ற அணிகளை ஏளனமாக பார்க்கவில்லை. நடப்பு சீசனில் எல்லா அணிகளும் டஃப் கொடுக்கப் போவது உறுதி! அதில், கோப்பையை வெல்லப் போவது யார்? என்பதே த்ரில்லான சஸ்பென்ஸ்!.

வழக்கம் போல, இம்முறையும் ராஜ மரியாதையுடன் சிஎஸ்கே களமிறங்குகிறது. இரண்டு வருட வனவாசத்திற்குப் பிறகு, கடந்த சீசனில் கோப்பையை வென்று, காயப்பட்டிருந்த ரசிகர்களின் மனதிற்கு மருந்திட்டது சிஎஸ்கே.

ஆனால், அது போன வருஷம்...முடிந்து போன கதை!. இப்போ உள்ள நிலவரத்தைப் பேசுவதே யதார்த்தம்.

இன்று, சிஎஸ்கே vs ஆர்சிபி... அதாவது விராட் vs தோனி.... அதாவது தல vs தளபதி....

தளபதி விராட் மீது எங்களுக்கு எப்போதும் அன்பும், பாசமும் உண்டு. ஆனால், இது எங்க கோட்டை. இங்க விருந்தாளியா வந்தா ஆரத்தி எடுப்போம். எதிராளியா வந்தா.... வெரி சாரி!.

Fixing-னு சொல்லித் தானே எங்களை தண்டிச்சீங்க... இப்போ கூட அதை வச்சுத் தானே எங்களை வார்த்தைகளால் காயப்படுத்துறீங்க!.

ஆமா, இது Fixing தான். இனி, Fixing தான்.. சாம்பியன்-ங்கற டைட்டிலும், கோப்பையும் எங்களுக்கே என்பது Fixing தான். அதுக்கு முன்னாடி, இன்றைய மேட்சுல, வெற்றி எங்களுக்கு என்பதிலும் Fixing தான்!.

அதேசமயம், கொஞ்சம் அசந்தாலும் கோலி எனும் ஒற்றை ஆளுமை சூறாவளியைப் போல், எதிராளிகளை காணாமல் போகச் செய்துவிடும் என்பதையும் நாங்கள் அறியா சிறுபிள்ளைகள் இல்லை!.

களத்தில் சந்திப்போம் கோலி அண்ட் ஆர்சிபி ஃபேன்ஸ்!

Chennai Super Kings Ipl Rcb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment