Advertisment

வெளுத்துக் கட்டிய வாட்சன்: சூப்பர் கிங்ஸ் வெற்றியை முத்தமிட்ட சூப்பர் தருணங்கள்

CSK vs SRH 2019 Match: சென்னை வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019, CSK beat SRH

IPL 2019, CSK beat SRH

Chennai Super Kings vs Sun Risers Hyderabad: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று (ஏப்.23) இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. போட்டி பற்றிய முழுமையான ஹைலைட் தகவல்களை இங்கு காணலாம்.

Advertisment

 

Live Blog

IPL 2019: CSK vs SRH














Highlights

    23:35 (IST)23 Apr 2019

    சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

    பரபரப்பான ஆட்டத்தில் 19.5வது பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

    இவனுங்க, நம்மள பிபி மாத்திரை சாப்பிட வைக்காம ஓயமாட்டானுங்க போல...

    23:33 (IST)23 Apr 2019

    19.5

    ஜாதவ் - 1 

    23:31 (IST)23 Apr 2019

    19.4

    ராயுடு - அவுட்

    23:30 (IST)23 Apr 2019

    19.3

    கேதர் ஜாதவ் - 1

    23:29 (IST)23 Apr 2019

    19.2

    கேதர் ஜாதவ் - 6

    23:28 (IST)23 Apr 2019

    19.1 பவுலர் - சந்தீப்

    ராயுடு - 1

    23:27 (IST)23 Apr 2019

    கடைசி ஓவரில் 9...

    சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் அடிக்க வேண்டும். 

    களத்தில் ராயுடு, ஜாதவ்

    23:20 (IST)23 Apr 2019

    வாட்சன் அவுட்

    53 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன், புவனேஷ் குமார் ஓவரில் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    தோனி வருவார்னு எதிர்பார்க்குறீங்களா? கேதர் ஜாதவ் இன்..

    23:18 (IST)23 Apr 2019

    161-2

    17வது ஓவர் முடிவில் சென்னை 161-2.

    ராயுடு ஒரு அண்டர் ஸ்மார்ட் இன்னிங்ஸ் ஆடி வருகிறார். பெரிய ஷாட் ஏதும் முயற்சி செய்வதில்லை.

    வாட்சன் அடிக்குறார்... அப்புறம் எதுக்கு நான்?'

    23:12 (IST)23 Apr 2019

    150-2

    ரஷித் கான் இனி எந்த காலத்துலயும், எந்த பேட்ஸ்மேனையும் முறைக்க மாட்டார். போதும், வாட்சனிடம் இன்று செம அடி வாங்கியாச்சு!

    16வது ஓவரிலும் 15 ரன்களை வாட்சன் விளாச... பாவம் ரஷித்!

    23:03 (IST)23 Apr 2019

    பென்டு கழட்டப்பட்ட ரஷித்

    முன்னதாக, ஷேன் வாட்சனை ரஷித் கான் ஏகத்துக்கும் முறைக்க, அவர் வீசிய 14 வது இவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது. இதில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் வாட்சனுடையது.

    22:57 (IST)23 Apr 2019

    வெற்றிப் பெறுமா சிஎஸ்கே?

    13 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. 

    வெற்றிக்கு 42 பந்துகளில் 67 ரன்கள் தேவை

    சாத்தியமா?

    22:55 (IST)23 Apr 2019

    வாட்சன் 50

    இந்த சீசனின் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் ஷேன் வாட்சன். இன்னும் படம் முடியலை வாட்டோ...நின்னு மேட்சை முடிச்சிக் கொடுங்க!

    22:42 (IST)23 Apr 2019

    ரெய்னா அவுட்

    24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா, ரஷித் கான் ஓவரில் ஸ்டெம்பிங் ஆனார். 

    இன்னைக்கு தான் ஏதோ கொஞ்சம் அடிச்சார்... அது பொறுக்கலையா உங்களுக்கு?

    22:35 (IST)23 Apr 2019

    68-1

    8 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 68-1

    நம்ப முடியலையா?

    22:24 (IST)23 Apr 2019

    ரெய்னா ஷோ

    sஅந்திப் வீசிய 6வது ஓவரில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 22 ரன்கள் விளாசினார் சுரேஷ் ரெய்னா!

    என்னாச்சு நம்ம சின்ன தல-க்கு?

    22:15 (IST)23 Apr 2019

    சாதனை!!!

    வாட்சன் 20 ரன் வரை நின்னுட்டார்!! அப்போ அது சாதனை இல்லையா?

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஓவர்கள் முடிவில் 27/1

    22:03 (IST)23 Apr 2019

    டு பிளசிஸ் அவுட்

    2.3 ஓவரில் 3 ரன்கள் எடுத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், டு பிளசிஸ் விக்கெட்டை இழந்துள்ளது. 1 ரன்னில் அவர் தீபக் ஹூடாவல் ரன் அவுட் செய்யப்பட்டார். 

    21:52 (IST)23 Apr 2019

    சென்னை ஓப்பனர்ஸ் இதோ

    ஆமா, இப்படி தான் இறங்குவாய்ங்க... இந்த வாட்சன் உடனே அவுட் ஆகிடுவாப்ள...

    இதுதானே உலக வழக்கம்!

    21:43 (IST)23 Apr 2019

    சேஸ் செய்யுமா சென்னை?

    160 ரன்கள் டார்கெட் வைத்தாலே தடுமாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் 175 ரன்களை சேஸிங் செய்யுமா? மும்மூர்த்திகள் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் போது இது சாத்தியமாகுமா?

    21:35 (IST)23 Apr 2019

    176 ரன்கள் இலக்கு

    கடைசி 5 ஓவரில் ஹைதராபாத் 45 ரன்கள் மட்டும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 175 ரன்கள் எடுத்துள்ளது. 

    மனீஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தார்.

    21:28 (IST)23 Apr 2019

    மண்ணின் மைந்தன் அவுட்

    20 பந்துகளில் 26 ரன்கள் அடித்த விஜய் ஷங்கர், தீபக் சாஹர் ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    21:25 (IST)23 Apr 2019

    160-2

    18 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 160-2. 

    லைட்டா ரன் ரேட் குறைந்தது. இருந்தாலும், இந்த 12 பந்துகளில் 28 - 35 ரன்கள் வரை அடிக்கப்படலாம் என நினைக்கிறேன்.

    21:17 (IST)23 Apr 2019

    டார்கெட் 190?

    மனீஷ் பாண்டே சென்னை பவுலர்களை பொளந்து கொண்டிருக்கிறார். பாரபட்சம் இல்லாமல் அடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் 4 ஓவர்களே மீதமிருப்பதால் எப்படியும் 185-195 வரை சன் ரைசர்ஸ் ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது. 

    சரிதானே!

    21:10 (IST)23 Apr 2019

    134-2

    15  ஓவர்கள் முடிவில், சன் ரைசர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 

    களத்தில் 'ஆளப்போறான் தமிழன்' விஜய் ஷங்கர், மனீஷ் பாண்டே

    21:04 (IST)23 Apr 2019

    தோனி கீப்பரா, அம்பயரா?

    வார்னர் 57(45) பந்துகளில் ஹர்பஜன் பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ஆனால், பாருங்க, ஸ்டெம்பிங் பண்ண தோனி அவரே அவுட் கொடுத்துவிட, அம்பயர் டெசிஷன் கூட பார்க்காமல், வார்னர் நடையை கட்டிவிட்டார்.

    20:53 (IST)23 Apr 2019

    மீண்டு வந்த மனீஷ் அரைசதம்

    சரியாக ஆடாத காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மனீஷ் பாண்டேவுக்கு இன்று மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட, மனிதர் 25 பந்துகளில் அரைசதம்!

    20:45 (IST)23 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    ப்ரோ.. எப்படி இருக்கீங்க? சொல்லுங்க உங்க கணிப்பை..

    கண்ணாயிரம் - இன்றைய சென்னை பிட்சில் புற்கள் சுத்தமாக இல்லை. இருப்பினும் ஆட்டம் தொடங்குவதற்கு முன், பிட்ச் எப்படி ரியாக்ட் செய்யும் என்ற தெளிவு இரு அணியினரிடமும் இல்லை. தவிர, சென்னையின் மோசமான பேட்டிங் காரணமாக தோனி சேஸிங் எடுத்தார். ஆனால், இப்போ ஹைதராபாத் அடிக்குறதை பார்த்தால் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்கும். 

    அதை, பார்மில் இல்லாத வாட்சன், ரெய்னா, ராயுடுவை வைத்துக் கொண்டு எப்படி சேஸ் செய்வது?

    ஸோ... சென்னைக்கு இன்று மற்றோரை ஏழரை காத்திருக்கிறது!

    20:40 (IST)23 Apr 2019

    69-1

    8 ஓவர்கள் முடிவில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. 

    சென்னை பிட்ச் மொக்கைய இருக்குமே!! இன்னைக்கு எப்படி இப்படி அடிக்குறாய்ங்க?

    20:31 (IST)23 Apr 2019

    என்னடா இது தோனிக்கு வந்த சோதனை!

    இந்த சீசன் மட்டுமல்ல, பல சீசன்களாக பெரிதாக ஒன்றுமே செய்யாமல் ஒப்பேற்றி வந்த மனீஷ் பாண்டே, இன்று மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டேவிட் வார்னரை விட அதிரடியாக ஆடி வருகிறார். தோனியே அவரது தொனியை எதிர்பார்த்திருக்க மாட்டார்!

    20:22 (IST)23 Apr 2019

    வாவ் மனீஷ் பாண்டே...

    யோவ் பாண்டே... ஐபிஎல் வரலாற்றுலேயே சென்ச்சுரி அடிச்ச முதல் இந்தியன் நீதான்யா... ரொம்ப வருசத்துக்குப் பிறகு இன்னைக்கு உன் அடி பார்க்க நன்னா இருக்கு. இதை அப்படியே கண்டினியூ பண்ணு!!

    20:21 (IST)23 Apr 2019

    சிக்ஸ்!

    இந்த ஐபிஎல் சீசனில் நடந்திருக்கும் இரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா?

    ஒருவருடமாக தடைக் காலத்தில் இருந்த வார்னர், ஸ்மித் ஃபார்முக்கு வந்திருப்பது. கடந்த இரு ஆட்டங்களாகவே ஸ்மித்தும், வார்னரும் செம டச்சில் உள்ளனர். 

    அதன் பிரதிபலிப்பு, இன்று ஹர்பஜன் ஓவரில் பறக்கும் சிக்ஸர்கள்.

    20:13 (IST)23 Apr 2019

    பேர்ஸ்டோ அவுட்... வாழைக்காய் சுட்ட பஜ்ஜி

    ஜானி பெர்ஸ்டோ 0 ரன்னில், ஹர்பஜன் சிங் ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உலகக் கோப்பை பயிற்சிக்காக, இந்தப் போட்டியோடு நாடு திரும்பவிருந்த பேர்ஸ்டோ டக் அவுட் ஆகியிருக்கிறார்.

    20:07 (IST)23 Apr 2019

    வார்னர், பேர்ஸ்டோ களத்தில்...

    ஹைதராபாத்துக்கு இந்த சீசனில் இதுவரை 70 சதவீதம் ரன்களை அடித்திருக்கும் பார்ட்னர்ஷிப் வார்னர், பேர்ஸ்டோ கூட்டணி. இன்றும் தங்களது சீரிய பணியை தொடர களமிறங்கி இருக்கிறது. 

    தோனி எப்படி அவர்களை பிரிக்கப் போறார்?

    19:42 (IST)23 Apr 2019

    வாட்சனுக்கு இவ்ளோ சலுகையா?

    இந்த சீசனில் இத்தனை ஆட்டங்கள் சொதப்பிய பிறகும் ஓப்பனர் ஷேன் வாட்சனுக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஏன்?

    ஏன்னா.. வேற யாரும் இல்லை... அதுனால தான்!

    19:40 (IST)23 Apr 2019

    சென்னை பிளேயிங் XI

    ஷேன் வாட்சன், பாப் டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்எஸ் தோனி(w/c), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

    19:31 (IST)23 Apr 2019

    வெல்கம் சென்னை

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்தாச்சு... நம்மூருக்கு வந்தாச்சு. ஹைதராபாத்துக்கு திருப்பி கொடுக்க நேரம் வந்தாச்சு. டாஸ் வென்ற கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

    தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றையப் போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
    Chennai Super Kings Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment