Advertisment

சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி! 6 பந்துகளில் முடிவை தீர்மானித்த ரபாடா!

Delhi Capitals vs Kolkata Knight Riders DC vs KKR: டெல்லி சூப்பர் ஓவரில் வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC vs KKR

DC vs KKR

IPL 2019, DC vs KKR: ஐபிஎல் தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், இரு அணிகளும் தலா 185 ரன்கள் அடிக்க, சூப்பர் ஓவர் மூலம், டெல்லி வெற்றிப் பெற்று அசத்தியது

Advertisment

மும்பை vs பஞ்சாப் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் பரபரப்பான இறுதிக் கட்டத்தை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

 

Live Blog

DC vs KKR Live Score



























Highlights

    00:16 (IST)31 Mar 2019

    0.6

    ஒரு ரன் - உத்தப்பா

    மூன்று ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி. உண்மையில் ரபாடா தனது பந்து வீச்சில் மிரட்டிவிட்டார்.

    00:15 (IST)31 Mar 2019

    0.5

    ஒரு ரன் - தினேஷ் கார்த்திக்

    00:14 (IST)31 Mar 2019

    0.4

    ஒரு ரன் - உத்தப்பா

    00:12 (IST)31 Mar 2019

    0.3

    போல்ட் - ரசல் அவுட்

    00:12 (IST)31 Mar 2019

    0.2

    ரன் இல்லை - ரசல்

    00:11 (IST)31 Mar 2019

    0.1 - பவுலர் ரபாடா

    பவுண்டரி - ரசல்

    00:10 (IST)31 Mar 2019

    கொல்கத்தா சூப்பர் ஓவர் பேட்ஸ்மேன்

    சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி சார்பில் ஆந்த்ரே ரசல் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 

    00:05 (IST)31 Mar 2019

    டெல்லி 10 ரன்கள்

    சூப்பர் ஓவரில், ஒரு பவுண்டரி உதவியுடன் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்

    00:04 (IST)31 Mar 2019

    0.6

    1 ரன் - ரிஷப் பண்ட்

    00:03 (IST)31 Mar 2019

    0.5

    2 ரன்கள் - ரிஷப் பண்ட்

    00:02 (IST)31 Mar 2019

    0.4

    2 ரன்கள் - ரிஷப் பண்ட்

    00:01 (IST)31 Mar 2019

    0.3

    ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்

    00:00 (IST)31 Mar 2019

    0.2

    பவுண்டரி - ஷ்ரேயாஸ் ஐயர்

    23:59 (IST)30 Mar 2019

    0.1

    1 ரன் - ரிஷப் பண்ட்

    23:58 (IST)30 Mar 2019

    சூப்பர் ஓவர் - டெல்லி பேட்டிங்

    சூப்பர் ஓவரில் முதலாக டெல்லி அணி பேட்டிங் செய்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 

    23:56 (IST)30 Mar 2019

    ஆட்டம் டை

    கடைசி பந்தில் இங்ரம் 1 ரன் மட்டும் அடிக்க, ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட உள்ளது

    23:49 (IST)30 Mar 2019

    ஹனுமா விஹாரி அவுட்

    குல்தீப் யாதவின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. இதில், 5வது பந்தில் ஹனுமா விஹாரி அவுட்டாக, கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை. 

    23:38 (IST)30 Mar 2019

    ரிஷப் பண்ட் அவுட்!

    குல்தீப் யாதவ்-வின் ஸ்பின்னில் தடுமாறிய ரிஷப், 15 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். 

    23:35 (IST)30 Mar 2019

    கமான் ப்ரித்வி

    இன்னும் 4 அடித்தால், ப்ரித்வி ஷா சதம்... இதற்குத் தானே ஆசைபட்டாய் சச்சின் குமாரா!

    23:20 (IST)30 Mar 2019

    ஐஇ தமிழ் சொன்னதை மெய்ப்பித்த ப்ரித்வி

    ப்ரித்வி ஷா, யார் ஓவராக இருந்தாலும் களத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாத்தி வருகிறார். இது உன்னுடைய களம் இன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஐஇ தமிழ் சொன்னதை மெய்ப்பித்துவிட்டார் ப்ரித்வி

    23:08 (IST)30 Mar 2019

    ஷ்ரேயாஸ் அவுட்

    ரசல் வீசிய 11.4வது ஓவரில், ஷ்ரேயாஸ் அடித்த பந்தை சிக்ஸ் லைனில் ஷுப்மன் கில் கோட்டைவிட, அதே ஓவரின் கடைசி பந்தில், மீண்டும் ஷ்ரேயாஸ் தூக்கி அடிக்க, இம்முறை பந்தை லபக் என கெட்டியாக பிடித்துக் கொண்டார் ஷுப்மன். ஆனால், அவரது பின் பாதம், பவுண்டரி லைனை தொட்டது போலவே இருந்தது. இருப்பினும், தேர்ட் அம்பயர் அவுட் கொடுக்க, 43 ரன்களில் வெளியேறினார் ஷ்ரேயாஸ். 

    22:56 (IST)30 Mar 2019

    82-1

    டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

    22:40 (IST)30 Mar 2019

    டெல்லி அணியில் இரு நட்சத்திரம்

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்த 5 வருடத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வருவார்கள் என்பதில் உங்களுக்கு ஐயம் இருக்கிறதா?

    22:35 (IST)30 Mar 2019

    ப்ரித்வி 'ஸ்வீட் டச்'

    கடந்த ஆட்டங்களைப் போல் அல்லாமல், ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தில் இன்று ஒரு நல்ல மெச்சூரிட்டியை காண முடிகிறது. அவர் இன்று அரைசதம் அடிப்பது உறுதி. 

    22:27 (IST)30 Mar 2019

    அவசர அதிரடி... தவான் அவுட்!

    பியூஷ் சாவ்லா ஓவரில் பவுண்டரி, சிக்ஸ் என அடுத்தடுத்து ரவுன்ட் கட்டிய தவான், அதே ஓவரில் கேட்ச் ஆக, டெல்லியின் அதிரடி அவசரம் நமக்கு நன்றாகவே உணர்த்தப்பட்டுள்ளது. இனி வரும் ஜூனியர் வீரர்கள் நிதானமாக ஆடுவார்களா?

    22:22 (IST)30 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே... நீங்க வேற லெவல்-னே.... 170+ கொல்கத்தா அடிக்கும்-னு சொன்னீங்க... 61-5 விக்கெட் விழுந்தும், கொல்கத்தா 185 ரன்னு அடிச்சிருக்கு.. ஜீனியஸ்-னே நீங்க...

    முகத்துக்கு நேர புகழ்றது எனக்குப் பிடிக்காது-னு உனக்கு தெரியாதா?

    சரிண்ணே... யார் ஜெயிப்பா?

    கொல்கத்தா மரண அடி அடிச்சதால, வழக்கத்தை விட டெல்லி கடுப்புல இருக்கும். அதனால, ஆக்ரோஷமும் அதிகமா இருக்கும். பட், இருந்தாலும் கொல்கத்தா ஜெயிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

    22:11 (IST)30 Mar 2019

    களமிறங்கிய டெல்லி ஆர்மி!

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கி உள்ளனர். இந்த மேட்சாவது அடிச்சு, சச்சின் பேரை காப்பாத்துப்பா ப்ரித்வி...

    22:03 (IST)30 Mar 2019

    கடைசி பத்து ஓவர் மொத்து!

    கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 121 ரன்களை விளாசித் தள்ளியுள்ளது கொல்கத்தா அணி. அதிலும், 16-20 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் குவித்துள்ளது.

    22:00 (IST)30 Mar 2019

    186 ரன்கள் இலக்கு

    கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. 

    21:49 (IST)30 Mar 2019

    தினேஷ் 50 & அவுட்

    பியூஷ் சாவ்லா ஓவரில் அபார சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே, வைட் சென்ற பந்தை வலுக்கட்டாயமாக டச் செய்து தினேஷ் கார்த்திக் கீப்பர் கேட்ச் ஆனார்.

    21:44 (IST)30 Mar 2019

    முடிவுக்கு வந்த கொடூர இன்னிங்ஸ்!

    ஒருவழியாக புயல் ஓய்ந்தது... 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய ஆந்த்ரே ரசல் மோரிஸ் பந்தில் கேட்ச் ஆனார். ஒரு கொடூர இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. 

    21:37 (IST)30 Mar 2019

    எங்க போச்சு சார் பந்து? ரசல் 50*

    ஹர்ஷல் படேலின் 16வது ஓவரில், ரசல் அடித்த சிக்ஸர்கள் மேற்கு தொடர்ச்சி மலையைத் தாண்டி சென்றுக் கொண்டிருப்பதாக தகவல். 

    மற்றொரு உப தகவல் என்னவெனில், 23 பந்தில் ரசல் அரை சதம் அடித்துள்ளார். 

    21:28 (IST)30 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    கொல்கத்தா ஜெயிக்கும்-னு சொல்லி நீ வாயை மூடல, வரிசையா 4 விக்கெட்டு... எப்படியா இது உன்னால மட்டும் முடியுது?

    அட விடப்பா... இப்போ, ரசலும், தினேஷும் பார்ட்னர்ஷிப் போட்டு அடிக்குறாங்களா இல்லையா? அதைப் பார்..

    போச்சு..போச்சு... வாயை வச்சுட்டியா!! எவன் அவுட்டாகப் போறானோ!! மக்களே நல்லா பார்த்துக்கோங்க, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

    21:19 (IST)30 Mar 2019

    105-5

    14 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

    களத்தில் தினேஷ் கார்த்திக், ரசல்...

    21:11 (IST)30 Mar 2019

    முரட்டு நோ பால்... வலியால் துடித்த ரசல்

    ஹர்ஷால் படேல் வீசிய 13.3வது பந்து, ஆண்ட்ரூ ரசல் தோள் பட்டையை பதம் பார்க்க அங்கேயே அவர் சுருண்டு விழுந்து வலியால் துடித்தார். சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைமைக்கு திரும்பியதால், களத்தில் நிலவிய பதட்டம் குறைந்தது. 

    21:06 (IST)30 Mar 2019

    கவனம் தேவை சந்தீப்

    நேபாள் வீரர் சந்தீப் லமிச்சானே, தொடக்கத்தில் கட்டுக் கோப்பாக பந்து வீசி, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால், அவரது கடைசி ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 17 ரன்கள் தாரை வார்த்தார். அதில், 2 சிக்ஸர்களும் ரசல் விளாசியது.

    20:59 (IST)30 Mar 2019

    கரை சேருமா கொல்கத்தா?

    கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், கடைசி நம்பிக்கையாக தினேஷ் கார்த்திக் - ஆண்ட்ரூ ரசல் பார்ட்னர்ஷிப் ஆடி வருகிறது. இந்த பார்ட்னர்ஷிப் குறைந்தது 17 ஓவர்கள் வரையிலாவது களத்தில் இருப்பது அவசியம். இல்லையெனில், கரை சேருவது கடினம்!

    20:51 (IST)30 Mar 2019

    இது தான் விதி!

    உனக்கான களம் என்று ஷுப்மன் கில் பற்றி பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர் நான்கு ரன்களில் ரன் அவுட் ஆகி, தலையை தொங்க போட்டு பெவிலியனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.

    20:49 (IST)30 Mar 2019

    ஷுப்மன் கில்... இது உனக்கான களம்!

    ராகுல் திராவிட் கண்டுபிடிப்பில் மற்றொரு மாணிக்கம் என்று ஷுப்மன் கில்-ஐ வர்ணிக்கலாம். கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலேயே 4 விக்கெட் வீழ்ந்திருக்கும் நிலையில், களமிறங்கி இருக்கும் ஷுப்மன் கில், சிறப்பாக களத்தை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், அதைப் பார்க்க நிச்சயம் ஒவ்வொரு இந்தியரும் விரும்புவர் என்பதில் சந்தேகமில்லை.

    20:38 (IST)30 Mar 2019

    ராணா அவுட்!

    என்னய்யா நடக்குது இங்க? ஓவருக்கு ஓவர் விக்கெட் விழுது! ஹர்ஷல் படேல் ஓவரில், தொடர்ந்து 2 போட்டிகளில் அரைசதம் விளாசிய நிதிஷ் ராணா, ஃபைன் லெக்கில் பந்தை ஃபளிக் செய்ய, ரபாடா ரன்னிங்குலேயே கேட்ச் பிடிக்க, கொல்கத்தா தனது நான்காவது விக்கெட்டை இழந்தது.

    20:35 (IST)30 Mar 2019

    உத்தப்பா, க்ரிஸ் லின் அவுட்!

    6வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேலிடம் 11 ரன்களில் உத்தப்பா எல்பிடபிள்யூ ஆக, 7வது ஓவரை வீசிய ரபாடாவின் பவுன்ஸ் பந்தில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் அபார ஜம்ப் கேட்ச் மூலம் 20 ரன்களில் வெளியேறினார் க்ரிஸ் லின்.

    20:28 (IST)30 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    மக்களே... நிகில் நாயக் பற்றி நான் எதுவும் எழுத சொல்லவில்லை.... நம்பாதீங்க...

    அண்ணே.. நமக்குள் இந்த கொடுக்கல், வாங்கல் சகஜம் தானே! லூசுல விடுண்ணே... சரி, இந்த மேட்சுல யார் ஜெயிப்பா?

    இந்த மேட்சுல கொல்கத்தா ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா, டெல்லிய விட அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்கத்தாவில் தான் இருக்காங்க. அதே சமயம், கொல்கத்தா ஸ்பின்னர்களை திறம்பட சமாளிக்கும் அளவுக்கு டெல்லியில் உள்ள இளம் பேட்ஸ்மேன்கள் இன்னும் வளரல. ஸோ, அவங்க திணற அதிக வாய்ப்பிருக்கு. கொல்கத்தா 170+ அடிப்பாங்க-னு நினைக்குறேன். அப்படி அடிச்சா, டெல்லி ஜெயிக்குறது கொஞ்சம் கஷ்டம்...

    என்னண்ணே... அதுக்குன்னு இவ்ளோ லென்த்தா-வா பதில் சொல்றது...

    20:19 (IST)30 Mar 2019

    நிகில் நாயக் அவுட்!

    கணிப்பு கண்ணாயிரம் சொல்லித் தான் நாம், நிகில் நாயக்-கிற்கு இவ்வளவு பில்டப் கொடுத்தோம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

    16 பந்துகளை சந்தித்த நிகில் 7 ரன்களில் நேபாள் ஸ்பின்னர் லமிச்சனே பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். 

    20:09 (IST)30 Mar 2019

    யார் இந்த நிகில் ஷங்கர் நாயக்?

    கொல்கத்தா அணியின் ஓப்பனராக இன்று களம் இறக்கப்பட்டுள்ளவர் நிகில் நாயக். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் 2015-2018 வரை ஐபிஎல்-ல் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 2018ல் நடந்த ஏலத்தில், கொல்கத்தா நிர்வாகம் இவரை வாங்கியது. 2019ல் நடந்த சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில், ரயில்வேஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், ஒரே ஓவரில் இவர் 5 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். 

    20:03 (IST)30 Mar 2019

    டெல்லி பிளேயிங் XI

    டெல்லி அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

    ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் ஷ்ரேயாஸ் ஐயர்(c), ரிஷப் பண்ட்(w), காலின் இங்ரம், ஹனுமா விஹாரி, க்ரிஸ் மோரிஸ், சந்தீப் லமிச்சானே, காகிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா

    19:58 (IST)30 Mar 2019

    கொல்கத்தா பிளேயிங் XI

    க்ரிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, நிகில் நாயக், தினேஷ் கார்த்திக் (w/c), ஷுப்மன் கில், ஆண்ட்ரூ ரசல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லோகி ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா

    19:47 (IST)30 Mar 2019

    கொல்கத்தா பேட்டிங்

    டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

    19:45 (IST)30 Mar 2019

    வணக்கம் ரசிகர்களே...

    மும்பை மேட்சுலேர்ந்து அப்படியே டெல்லி மேட்சுக்கு தாவியிருக்கும் அனைத்து ரசிக பெரு மக்களுக்கும் கோடான கோடி வணக்கங்கள்!

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment