KKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு

IPL 2019, Kolkata Knight Riders vs Rajasthan Royals Live Score Updates: கொல்கத்தா vs ராஜஸ்தான்

By: Apr 25, 2019, 10:58:13 PM

IPL 2019 KKR vs RR Live Cricket Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.25) இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்…

IE Tamil commentary

Indian Premier League, 2019Eden Gardens, Kolkata 11 August 2020

Kolkata Knight Riders 175/6 (20.0)

vs

Rajasthan Royals 177/7 (19.2)

Match Ended ( Day - Match 43 ) Rajasthan Royals beat Kolkata Knight Riders by 3 wickets

Live Blog
IPL 2019: KKR vs RR Live, Kolkata Knight Riders vs Rajasthan Royals Live Score
22:27 (IST)25 Apr 2019
53/0

ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. 

ரஹானே, சஞ்சு சாம்சன் என்கிற இரு அட்டகாசமான ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்கள் கேஷுவலாக ரன்களை திரட்டி வருகின்றனர். 

22:15 (IST)25 Apr 2019
அதே அதிரடியுடன்...

கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி சதம் அடித்த அஜின்க்யா ரஹானே, இன்றும் அதே அதிரடியுடன் தனது இன்னிங்சை துவக்கியுள்ளார். 

21:52 (IST)25 Apr 2019
175-6

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. 

கேப்டன் தினேஷ் கார்த்திக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் உதவியுடன் 97 ரன்கள் விளாசியுள்ளார்.

21:46 (IST)25 Apr 2019
157-6

19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 157 ரன்கள் எடுத்துள்ளது. 

ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் பேக் டூ பேக் சிக்ஸ்!

21:35 (IST)25 Apr 2019
ரசல், பிரத்வெயிட் அவுட்

கொல்கத்தா ஜோலி முடிந்தது. ஆந்த்ரே ரசல் 14 ரன்களிலும், பிரத்வேயிட் 5 ரன்களிலும் கேட்ச் ஆக, திக்கற்று தனி ஆளாக களத்தில் நிற்கிறார் தினேஷ் கார்த்திக். 

எங்க ஆளப் போறான் தமிழன் அடிப்பான்யா!!

21:24 (IST)25 Apr 2019
டிகே 50

வெல்கம் தினேஷ் கார்த்திக்... உங்கள் அரைசதத்தை வரவேற்கிறோம்.

பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் உங்கள் பயணம் இன்னும் நெடுந்தூரம் உள்ளது.

21:21 (IST)25 Apr 2019
யாருக்கு அந்த பலி ஆடு?

கொல்கத்தா அணி தற்போது அதிரடியான ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. ரசலும், தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர். இன்னும் 5 ஓவர்கள் மீதம் உள்ளது. 

ரசல் குறி வைக்கப் போகும் அந்த பவுலர் யார்?

ஐ மீன் ரசலிடம் சிக்கப் போகும் அந்த பவுலர் யார்?

21:09 (IST)25 Apr 2019
டிகே ஃபார்முக்கு வருகிறாரா?

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் தினேஷ் கார்த்திக் கொடுக்கும் டச் வழக்கத்தைவிட சற்று பயங்கரமாகவே இருக்கு. இப்போது வரை அவர் அடித்திருக்கும் 40 ரன்களில் 3 சிக்ஸர்களும் அடக்கம் என்பதே இதற்கு சான்று.

கொல்கத்தா 14 ஓவர்கள் முடிவில் 96/4

21:00 (IST)25 Apr 2019
களத்தில் ரசல்...

சுனில் நரைன் ரன் அவுட் ஆன பிறகு, அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த ஆந்த்ரே ரசல் களமிறங்கியுள்ளார். 

அடேங்கப்பா... இந்த மனிதனுக்கு தான் எவ்ளோ ரெஸ்பான்ஸ்.

20:45 (IST)25 Apr 2019
திருந்தவே மாட்டீங்களா?

ஷ்ரேயாஸ் கோபால் ராஜஸ்தான் அணியின் துருப்புச் சீட்டு என்று சொல்லலாம். எப்போ பவுலிங் போட வந்தாலும், மனுஷன் ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்துடுறார். 

நிதிஷ் ராணா 21 ரன்களில் கோபால் ஓவரில் கேட்ச் ஆக, தனது மூன்றாவது விக்கெட்டை பறிகொடுத்தது கொல்கத்தா

20:24 (IST)25 Apr 2019
மிடில் ஸ்டம்ப்பை தேடும் அம்பயர்!

நம்ம வருண் ஆரோனுக்கு என்னதான் ஆச்சு?

ஷுப்மன் கில் 14 ரன்களில் வருண் ஆரோனின் ஸ்விங் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

20:21 (IST)25 Apr 2019
என்னங்கடா இப்படி போடுறீங்க?

ராஜஸ்தான் இன்று கொடூரமாக தனது ஃபேஸ் பவுலர்களை களமிறக்கியுள்ளது. 

வருண் ஆரோன்

ஓஷானே தாமஸ்

ஜோஃப்ரா ஆர்ச்சர் 

என மூன்று அதிவேக பவுலர்களை கொண்டு மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி வருகிறது கொல்கத்தா.

20:05 (IST)25 Apr 2019
யாருப்பா து?

'வாரணம் ஆயிரம்' காலத்தில் இருந்து பந்து வீசிக் கொண்டிருக்கும் வருண் ஆரோன், காயம் காரணமாக அடிக்கடி காணாமல் போய் விடுவார். தற்போது மீண்டும் அவருக்கு ராஜஸ்தான் அணியில் வாய்ப்பளிக்க, க்ரிஸ் லின்னை முதல் ஓவரிலேயே 0 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார்.

20:01 (IST)25 Apr 2019
வெல்கம் ஷுப்மன் கில்...

ஷுப்மன் கில்-ஐ கொல்கத்தா அணி லோ ஆர்டரில் இறக்கி வேஸ்ட் செய்து கொண்டிருந்தது. தற்போது அவரை க்ரிஸ் லின்னுடன் ஓப்பனிங் இறக்கிவிட்டு நல்ல காரியம் செய்திருக்கிறார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.

19:57 (IST)25 Apr 2019
கொல்கத்தா பிளேயிங் XI

க்ரிஸ் லின், சுனில் நரைன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(w/c), ரிங்கு சிங், ஆந்த்ரே ரசல், கார்லஸ் பிரத்வெய்ட், பியூஷ் சாவ்லா, யர்ரா ப்ரித்விராஜ், பிரசித் கிருஷ்ணா

19:45 (IST)25 Apr 2019
கொல்கத்தா பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். 

ஸோ, ரசலின் கும்மாங்குத்தை ஆரம்பத்துலேயே பார்க்கப் போறோம்!

புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளன. யாரை தேடுறீங்க? பெங்களூரு டீமையா? அவங்க 7வது இடத்தில்...

Web Title:Ipl 2019 kkr vs rr live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X