IPL 2019 KXIP vs DC: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியது.
Live Blog
IPL 2019: DC vs KXIP Live, Delhi Capitals vs Kings XI Punjab Live Score
இப்படியொரு சொதப்பலை வேறு எங்காவது பார்த்ததுண்டா!! டெல்லி அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 17 பந்துகளில் இழந்திருக்கிறது. ஒரு ஹாட்ரிக் உட்பட... ஷமி, சாம் குர்ரன் ஆகிய இந்த இரு பவுலர்களும், டெல்லியின் ஓவர் கான்ஃபிடன்ட்டை சுக்கு நூறாக உடைத்து எறிந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க பவுலரான வில்ஜோன், எப்படியாவது தேசிய அணியில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் பிரிமீயர் லீக், வங்கதேச பிரீமியர் லீக், இந்தியன் பிரீமியர் லீக் என படாதபாடு பட்டு வருகிறார். ஆனால், மனுஷன் ஞாயஸ்தான்.. தான் சார்ந்திருக்கும் அணிக்காக, உயிரைவிட்டு சிறப்பாக போராடுகிறார்.
வாழ்த்துகள் வில்ஜோன்...
பி.கு - இவர் தென்.ஆ., அணிக்காக இதுவரை ஒரேயொரு சர்வதேச போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார்.
அண்ணே... வெல்கம்... அடிக்கடி வர்றீங்களே-னு கேட்டதுக்கு இவ்ளோ லேட்டா-வா வர்றது!?
என்னப்பா.. என்ன நிலைமை?
9 ஓவருக்கு 77/2... ரிஷப்பும், தவானும் களத்தில்-னே...
கஷ்டம் பா... இன்னும் 90 ரன்கள் அடிக்கணும்... அதுக்கு இவங்க ரெண்டு பேருல ஒருத்தராவது 16 ஓவர் வரை நின்னே ஆகணும்.. காலிங் இங்ரம்-கிட்ட கண்சிஸ்டன்ஸி கிடையாது. அவன் அடிச்சா யோகம்... இல்லாட்டி போவேண்டியது தான்.. ஸோ, இந்த பார்ட்னர்ஷிப் அட்லீஸ்ட் 15 ஓவர் நின்னா பெட்டர்.
இதுவரை மூன்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடியுள்ளது. மூன்றிலும், முகமது ஷமியும் பந்து வீசியிருக்கிறார். ஆனால், சில தருணங்களை தவிர, அவரது பவுலிங்கில் பெரிய த்ரெட் இருப்பதாக தெரியவில்லை. அதற்காக ரன்களை வாரி இறைக்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால், ஷமி வந்தால் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஜெர்க் ஆவதில்லை. உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு, அவர் இன்னும் தனது பவுலிங்கில் பெப்பர் தூவினால் நல்லது!.
இப்படியெல்லாம்மா அவுட்டாவீங்க?... 7.1வது ஓவரை ஹர்ஷல் படேல் வீச, சர்ஃபரஸ் கான் அதனை ஷிகர் தவானிடம் அடிக்கிறார். அப்போது எதிர்முனையில், நின்றிருந்த மாயங்க் அகர்வால், 4 ஸ்டெப் முன்னால் நிற்க, தவான் ஸ்டெம்ப்பை நோக்கி த்ரோ செய்ய, ஊதப்பட்டது சங்கு!. இதுக்கு தான், பவுலர் போடுறதுக்கு முன்னாடியே, கிரீஸை தாண்டி ஆர்வத்தில் போகக் கூடாதுன்னு சொல்றது!.
இப்பவும் சொல்றேன்... பஞ்சாப்பை இனிமே காக்கப் போறது ரெண்டே பேரு தான்.. மாயங்க் அகர்வால், டேவிட் மில்லர். இந்த ரெண்டு பேரும் இன்னைக்கு தலைக்கு 50 அடிச்சே ஆகணும். எக்ஸ்ட்ரா ஸ்கோர் பஞ்சாப் அதிர்ஷ்டத்தை பொறுத்து.
என்னண்ணே... இன்னைக்கு அடிக்கடி கிராஸ் ஆகுறீங்க?
நம்ம அஷ்வின் கேப்டன்-பா... தமிழன்டா....
பஞ்சாப் ஓப்பனர்கள் லோகேஷ் ராகுல், சாம் குர்ரன் களமிறங்கியுள்ளனர்.
இந்த சாம் குர்ரன் யார் தெரிகிறதா?
கடந்தாண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் அடி வாங்கியதே... அந்த அடிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் இவர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்தியாவை ரொம்பவே சோதித்தார்.
பஞ்சாப் அணியின் க்ரிஸ் கெயில் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில், சாம் குர்ரன் களமிறக்கப்பட்டுள்ளார். கெயிலின் ஆட்டத்திற்கு என்றே தனி கூட்டம் டிவி முன் உட்காரும். ஆனால், கெயில் இல்லாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெயில் இல்லாமல், டெல்லியின் சரவெடியை சமாளிக்குமா பஞ்சாப்?
கணிப்பு கண்ணாயிரம் அண்ணே... நம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் சொத்தே... இன்னைக்கு ஜெயிக்கப் போவது யார்? சொல்லுங்கோ...
இந்த மேட்ச் Predict பண்றது ரொம்ப கஷ்டம் தம்பி.. பட், இருந்தாலும் சொல்றேன்...
பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்து லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், மில்லர்... இவங்க மூணு பேரும் கணிசமான ரன்கள் அடித்தால் பஞ்சாப் வெற்றிப் பெற வாய்ப்பு இருக்கு. இல்ல... டெல்லி முதலில் பேட்டிங் செய்து 180+ அடிச்சா, வெற்றிக்கு முயற்சிக்கலாம். கெயில் Exception
அண்ணே... வாண்ணே... இப்போதான் உன்ன பத்தி மக்கள்-ட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்... அதுக்குள்ளே நீயே வந்துட்ட...
நீ என்னபத்தி என்ன சொல்லிருப்பனு தெரியும்... அதைவிடு... ஒரு எக்ஸ்க்ளூசிவ் விஷயம் சொல்றேன் கேளு...
என்னதுன்னே...
அஷ்வின், தனது அணி சகாக்களை கொஞ்சம் கடுமையாக எச்சரித்து இருக்கிறாராம். டிரெஸ்சிங் ரூமில் பேசிய அவர், இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடலனாலும், பின் விளைவுகளை நினைத்து வருந்தக் கூடாது என சொல்லியுள்ளாராம்.
என்ன பண்ணுவீங்களோ, எப்படி விளையாடுவீங்களோ, எனக்கு தேவை வெற்றி-ன்னு சொல்லியிருப்பதாக காற்று வாக்கில் நமக்கு தகவல் கிடைத்தது.
அண்ணே.. உண்மையா தான் சொல்றியா? இல்ல.... டீ குடிச்சப்ப யோசிச்சியா?
வணக்கம், வணக்கம் நண்பர்களே! இதோ, உங்களுக்காக ஐஇ தமிழின் பிரத்யேக ஐபிஎல் லைவ் கிரிக்கெட் அப்டேட்ஸ்... சாரி இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.... உங்கள் ஃபேவரைட் கணிப்பு கண்ணாயிரம் வண்டியில் வந்துக் கொண்டே இருக்கிறார். டிராஃபிக்-ல மாட்டிக்கிட்டாராம். கத வுடுவாருங்க... எங்கயாச்சும் ஒதுங்கி டீ குடிச்சிக்கிட்டு இருக்கும் பெருசு...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights